search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "face pack types"

    • தேன் சருமத்திற்கு ஈரப்பதத்தை அளிக்கிறது.
    • மென்மையாகவும், மிருதுவாகவும், பளபளப்பாகவும் வைக்கும்.

    குளிர்ந்த காலநிலையானது அதன் இயற்கையான ஈரப்பதத்தை தோலில் இருந்து அகற்றி, சருமத்தை உலர்ந்ததாகவும் மந்தமானதாகவும் மாற்றும். குளிர்காலத்தின் உறைபனி காற்று, சருமத்தை எளிதில் வறண்டு போக வைக்கின்றன. இருப்பினும், பயப்பட வேண்டாம், சரியான பராமரிப்பு நடைமுறைகள் மூலம், உங்கள் சருமத்தை கடுமையான பாதிப்பிலிருந்து பாதுகாக்க முடியும்.

    உங்கள் தோல் பராமரிப்பு வழக்கத்தை வலுப்படுத்தும் அத்தியாவசிய பேஸ் மாஸ்க்குகளை கண்டறிய வேண்டும் மற்றும் குளிர்கால மாதங்கள் முழுவதும் உங்கள் சருமம் நீரேற்றமாகவும் பிரகாசமாகவும் இருப்பதை உறுதிசெய்யவும் வேண்டும். குளிர்காலம் முழுவதும் உங்கள் சருமத்தை மென்மையாகவும், மிருதுவாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவும்.

     தேன் மற்றும் தயிர் மாஸ்க்

    தேனின் ஈரப்பதமூட்டும் பண்புகளை தயிரின் ஊட்டமளிக்கும் நன்மையுடன் இணைக்க வேண்டும். இரண்டு தேக்கரண்டி தயிருடன் ஒரு தேக்கரண்டி தேனை கலக்க வேண்டும். கலவையை உங்கள் முகத்தில் தடவி, 15-20 நிமிடங்கள் விட்டு, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். தேன் ஈரப்பதத்தை சேர்க்கிறது, அதே நேரத்தில் தயிர் சருமத்தை மென்மையாக்குகிறது மற்றும் சருமத்திற்கு புத்துணர்ச்சியூட்டுகிறது. இது மென்மையாகவும் நீரேற்றமாகவும் இருக்கும்.

     அவகேடா மற்றும் ஆலிவ் எண்ணெய் ஃபேஸ் மாஸ்க்

    அரை அவகேடோ பழத்தை மசித்து, ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெயுடன் கலக்க வேண்டும். கலவையை உங்கள் முகத்தில் தடவவும், அதை 15-20 நிமிடங்கள் வைத்து பிறகு கழுவ வேண்டும். அவகேடா பழத்தில் இயற்கை எண்ணெய்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. அதே நேரத்தில் ஆலிவ் எண்ணெய் தீவிர நீரேற்றத்தை வழங்குகிறது. எனவே இந்த பேஸ் மாஸ்க் வறண்ட சருமத்தை மென்மையாக்க உதவுகிறது.

     வாழைப்பழம் மற்றும் பாதாம் எண்ணெய் ரேடியன்ஸ் மாஸ்க்

    ஒரு பழுத்த வாழைப்பழத்தை மசித்து அதில் ஒரு டீஸ்பூன் பாதாம் எண்ணெய் சேர்க்க வேண்டும். இந்த கலவையை உங்கள் முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் விட்டுவிட்டு கழுவ வேண்டும். வாழைப்பழங்கள் வைட்டமின்கள் மற்றும் ஈரப்பதத்துடன் நிரம்பியுள்ளன. மேலும் பாதாம் எண்ணெய் உங்கள் சருமத்திற்கு கதிரியக்க பிரகாசத்தை சேர்க்கிறது. மந்தமான குளிர்கால சருமத்திற்கு உயிர் சக்தியை மீட்டெடுக்க இந்த மாஸ்க் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.

    • அழுக்கையும், எண்ணெய் பிசுபிசுப்புத் தன்மையையும் நீக்கும்.
    • மஞ்சள் கலந்து முகத்தில் தடவிவர முடிகள் வளர்வது தடைபடும்.

    பப்பாளி பழம் உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்ப்பதோடு சரும பொலிவையும் மெருகூட்டும். முகத்தில் படியும் அழுக்கையும், எண்ணெய் பிசுபிசுப்புத் தன்மையையும் நீக்கும். சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்களை நீக்கி மென்மையையும், பொலிவையும் பெற்றுத் தரும்.

    * முகப்பரு உள்ளவர்கள், பப்பாளிக்காயின் நறுக்கிய உட்பகுதித் துண்டுகளை மென்மையாக முகத்தில் தேய்க்க வேண்டும். இது முகப்பருக்களைப் போக்கி, முகச் சுருக்கங்களையும் நீக்கி, பொலிவை கூட்டும்.

    * பப்பாளி பழத்தை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் சிறிதளவு தேன் மற்றும் பால் கலந்து பசைபோல் குழைத்துக்கொள்ள வேண்டும். அதனை முகம், கழுத்து பகுதியில் பூசி, சில நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் சருமம் மிளிரும்.

    * நன்கு பழுத்த பப்பாளி விழுதை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளுங்கள். அதனுடன் நான்கு ஸ்பூன் தேன், சிறிது கிளிசரின் சேர்த்து கலந்து, கண்ணைச் சுற்றியுள்ள பகுதி தவிர மீதி இடங்களில் பற்றுப்போட்டு, 15 நிமிடங்கள் கழித்து முகத்தை தண்ணீரால் கழுவிவர, முகம் பிரகாசிக்கும்.

     * பப்பாளி தோலை ஒரு பாத்திரத்தில் போட்டு வேக வைத்து, அது நன்றாக வெந்ததும் அதை அரைத்துக் கொள்ளுங்கள். இந்த கூழை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவுங்கள். இந்த சிகிச்சையை தொடர்ந்து செய்து வந்தால், முகம் மென்மையானதாக மாறிவிடும்.

    * ஒரு கப் பப்பாளித் துண்டுகளுடன் சிறிது எலுமிச்சை சாறு, சிறிது சீனி கலந்து 30 நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் தேகம் மினுமினுக்க ஆரம்பித்துவிடும்.

    * பப்பாளி பழத்தை மஞ்சள் தூளுடன் கலந்தும் பயன்படுத்தலாம். சில பெண்களுக்கு முகத்தில் முடி முளைத்துக்கொண்டிருக்கும். பப்பாளி பழத்தை கூழாக்கி அதனுடன் மஞ்சள் கலந்து முகத்தில் தடவிவர வேண்டும். அந்த கலவை நன்றாக உலர்ந்த பின்னர் முகத்தை கழுவி வந்தால் நாளடைவில் முடிகள் வளர்வது தடைபடும்.

    • கைகளில் உள்ள கருமையை படிப்படியாகப் போக்கலாம்.
    • பப்பாளியில் சரும கருமையைப் போக்கும் பொருள் உள்ளது.

    சிலரது முகம் பார்ப்பதற்கு பளிச்சென்று வெள்ளை நிறமாக இருக்கும். ஆனால், கை கால்கள் மற்றும் கழுத்து போன்றவை அதற்கு எதிர்மாறாக இருக்கும். காரணம், நாம் வெயிலில் அதிகமாக செல்லும்போது, நாம் ஆடை அணிந்திருக்கும் பகுதிகள் தவிர மற்ற இடங்களில் வெயில் படுவதால் கருப்பாக தெரிகிறது.

    ஆனால், முகத்துக்கு கிரீம், பேஷியல் என அப்ளை செய்து கொஞ்சம் வெள்ளையாக்கி விடுகிறோம். அதே, கவனத்தை கொஞ்சம் கைகளிலும் செலுத்தினால் கருப்பாக இருக்கும் கைகளை வெள்ளையாக்கி விடலாம். என்ன செய்யலாம்?

     1. தயிருடன் சிறிது மஞ்சள் தூள் கலந்து, அவற்றை மாலை வேளைகளில் கைகளில் தடவி 20-30 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், கைகளில் உள்ள கருமையை படிப்படியாகப் போக்கலாம்.

    2. தக்காளியை வெட்டி, அதனை கருமையாக உள்ள கைகளில் தேய்த்து 15-20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி செய்வதால் அதில் உள்ள அமிலம் கைகளில் உள்ள கருமையை மறைக்கும்.

    3. பாதாமை இரவில் படுக்கும்போது சிறிது பாலில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை பால் ஊற்றி அரைத்து பேஸ்ட் செய்து, கைகளில் தடவி உலர வைத்து, பின் கழுவ வேண்டும். இச்செயலை தினமும் செய்து வந்தால், கைகளில் உள்ள கருமை நீங்குவதோடு, கைகளும் மென்மையாக இருக்கும்.

    4. பப்பாளியில் சரும கருமையைப் போக்கும் பொருள் உள்ளது. எனவே, பப்பாளியை அரைத்து அந்த பேஸ்ட்டை கைகளில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து கழுவி வர, கைகள் வெள்ளையாகும்.

     5. மஞ்சள் தூளில் சரிசம அளவில் பால் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, கைகளில் தடவி உலர வைத்து கழுவினால், வெயிலால் கருமையடைந்த கைகளை வெள்ளையாக்கலாம்.

    6. கற்றாழை ஜெல்லை தினமும் கைகளில் தடவி உலர வைத்து கழுவி வந்தால், கருமையைப் போக்கி கைகளின் நிறத்தை அதிகரிக்கலாம்.

    ×