search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "England World Cup"

    உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் எல்லா இடங்களும் நிரம்பி விட்டன என்று துணைக்கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். #TeamIndia
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் சிட்னியில் நாளைமறுநாள் (12-ந்தேதி) தொடங்குகிறது. இதற்காக இரண்டு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட் தொடர் குறித்து இந்திய அணியின் துணைக்கேப்டன் ரோகித் சர்மா பேட்டிளித்தார். அப்போது அவர் கூறுகையில் ‘‘உலகக்கோப்பைக்கு முன் நாங்கள் 13 ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாட இருக்கிறோம். தற்போது இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்களுடன் செல்ல முடியுமா? அல்லது வீரர்களின் எண்ணிக்கை குறையுமா? என்பதை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

    உலகக்கோப்பைக்கு இன்னும் சில மாதங்கள் இருப்பதால் காயம் மற்றும் பார்ம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஒன்று அல்லது இரண்டு மாற்றங்கள் வேண்டுமென்றால் இருக்கலாம்.

    இந்த வருடத்தில் நாங்கள் ஏராளமான போட்டியில் விளையாட இருக்கிறோம். அதனால் காயங்கள் ஏற்படலாம். காயங்களால் வீரர்கள் இடம்பெற முடியாமல் போவதை தவிர்த்து மிகப்பெரிய அளவில் எந்த மாற்றமும் இருப்பதாக நினைக்கவில்லை. ஒவ்வொரு இடத்தையும் (Slots) பார்த்தீர்கள் என்றால், தனிப்பட்ட வீரர்களால் சிறப்பான வகையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. எனினும் ஒவ்வொரு வீரர்களின் பார்ம்-ஐ பொறுத்துதான் அணியில் இடம் கிடைக்கும். இங்கிலாந்து செல்வதற்கு யாருக்கும் உத்தரவாதம் கிடையாது.

    முன்னதாகவே ஆடும் லெவன் அணி குறித்து கூற இயலாது. ஆனால் நாங்கள் விளையாடும் 13 போட்டிகளில் இடம்பிடிக்கும் வீரர்களில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது. ஐபிஎல் உள்பட இன்னும் நிறைய போட்டிகளில் விளையாட இருப்பதால் உலகக்கோப்பைக்கான 11 அல்லது 12 பேர் கொணட இந்திய அணியை தெரிவிப்பது கடினம்’’ என்றார்.
    இங்கிலாந்து உலகக் கோப்பையை நோக்கி ஓடுவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு கேடு விளைவிப்பதாக அமையும் என பீட்டர்சன் எச்சரித்துள்ளார். #ENGvIND
    2015-ல் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணி முதல் சுற்றோடு ஏமாற்றம் அடைந்து வெளியேறியது. அடுத்த உலகக் கோப்பை தொடர் 2019-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

    இதனால் உலகக் கோப்பை தொடருக்குப் பின் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் சொந்த மண்ணில் நடைபெற இருக்கும் உலகக் கோப்பையை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் ஒருநாள் அணியை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல முடியும் செய்தது.

    அதன்படி மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி ஒருநாள் கிரிக்கெட்டில் அசுர வளர்ச்சியடைந்தது. இதனால் விளைவாக தற்போது ஐசிசியின் ஒருநாள் போட்டிக்கான தரவரிசையில் இங்கிலாந்து முதல் இடம் பிடித்துள்ளது.

    அதேவேளையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரிய சறுக்கல் ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஆஷஸ் தொடரை 0-4 என இழந்தது. சமீபத்தில் சொந்த மைதானத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக லார்ட்ஸ் டெஸ்டில் 9 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.

    இந்நிலையில் ஒருநாள் போட்டியை நோக்கி இங்கிலாந்து செல்வது, டெஸ்ட் போட்டிற்கு கேடு விளைவிக்கும் என முன்னாள் நட்சத்திர வீரரான கெவின் பீட்டர்சன் எச்சரித்துள்ளார்.



    இதுகுறித்து கேன் வில்லியம்சன் கூறுகையில் ‘‘எந்த திசையில் இங்கிலாந்து அணி செல்ல விரும்புகிறது என்று எனக்குத் தெரியவில்லை. நாம் (இங்கிலாந்து அணி) டி20 உலகக் கோப்பையை வென்றுள்ளது. சொந்த மண் மற்றும் வெளியே ஆஷஸ் தொடரை கைப்பற்றியுள்ளோம். சில வருடத்திற்கு முன் இந்தியாவை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தியுள்ளோம்.

    ஆனால் 50 ஓவர் உலகக் கோப்பை தொடரை இதுவரை வென்றது கிடையாது. சில வருடத்திற்கு முன்பே உலகக் கோப்பை குறித்த தகவல் வெளியானது. அதில் இருந்து இங்கிலாந்து அணி அடுத்த வருடம் நடைபெற இருக்கும் உலகக் கோப்பையை நோக்கி பயணம் செய்து கொண்டிருக்கிறது. இது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு கேடா முடியும். 100 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் விளையாடிய எங்களை போன்ற வீரர்களுக்கு இது கவலையும், விரக்தியும் அளிக்கிளது’’ என்றார்.

    கெவின் பீட்டர்சன் இங்கிலாந்து அணிக்காக 104 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 23 சதத்துடன் 8000-த்திற்கும் மேற்பட்ட ரன்கள் அடித்துள்ளார். சராசரி 47.28 ஆகும்.
    ×