search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Education Scholarship"

    • கல்வி கட்டணத்தை தவிர ரூ.66 ஆயிரத்தை வழங்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது
    • கல்லூரியை விட்டு விலகிய மாணவிக்கு

    அரியலூர்:

    திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம், மேலூர் சாலையில் வசிப்பவர் பாலசுப்ரமணியன் (வயது52). இவரது மகளுக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வில் சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் சுயநிதி பிரிவில் இடம் கிடைத்துள்ளது. இந்த கல்லூரியில் சேர்ந்து சுமார் ஒரு மாதம் கழித்து, இந்த மாணவிக்கு மருத்துவ இயக்குனரகம் நடத்திய கலந்தாய்வில் பல் மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. இதனால் அவர் பொறியியல் கல்லூரியில் செலுத்திய பணம் ரூ 2, 26,000 மற்றும் மாற்று சான்றிதழ் ஆகியவற்றை கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டுள்ளார்.

    மாற்று சான்றிதழை மட்டும் கொடுத்த கல்லூரி நிர்வாகம் செலுத்திய தொகையை தரவில்லை. இதையடுத்து அந்த மாணவியின் தந்தை பாலசுப்ரமணியன், சென்னை தெற்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு விசாரணைக்காக கடந்த ஜூலை மாதம் அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்துக்கு மாற்றப்பட்டது.

    இந்த வழக்கை விசாரித்து வந்த அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிபதி வீ.ராமராஜ் தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்தது.

    தீர்ப்பின் விவரம்: மாணவி உணவு விடுதிக்கு செலுத்திய பணம் ரூ 53 ஆயிரத்தில் அவர் விடுதியில் தங்கியிருந்த காலத்துக்கான கட்டணம் ரூ 10,000 பிடித்துக்கொண்டு ரூ.43 ஆயிரத்தை கல்லூரி நிர்வாகம் மாணவியின் தந்தையிடம் வழங்க வேண்டும்.

    மேலும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சிக்காக கல்லூரியின் இணை நிறுவனமாக செயல்படும் எஸ்.ஆர்.எம் ஆக்சிஸ் என்ற நிறுவனத்தில் மாணவிக்கு செலுத்திய ரூ 25 ஆயிரத்தில் நிர்வாக செலவுகளுக்காக 2 ஆயிரம் பிடித்தம் செய்து கொண்டு மீதித் தொகை 23 ஆயிரத்தையும் அவருக்கு வழங்க வேண்டும். நான்கு வார காலத்திற்குள் வழங்காவிட்டால் அதற்கு வட்டி சேர்த்து வழங்க வேண்டும் என்றும் இந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும், பொறியியல் கல்லூரியில் கலந்தாய்வு முடிவடைந்து சேர்க்கை கல்லூரிகளில் சேர்க்கை இறுதி செய்யப்பட்ட பின்பு மாணவி கல்லூரியை விட்டு விலகி உள்ள காரணத்தால் அவர் கல்லூரியில் கல்விக் கட்டணமாக செலுத்திய தொகையை திருப்பி வழங்க உத்தரவிட முடியாது என்று அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

    • கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • 31-ந்தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

    அரியலூர்

    தமிழ்நாட்டில் இந்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள முஸ்லிம், கிறிஸ்தவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜைன மதத்தைச் சேர்ந்த அரசு, அரசு உதவிபெறும் மற்றும் இந்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2022-23-ம் கல்வியாண்டில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகை பெறுவதற்கு மத்திய அரசின் www.scholarships.gov.in என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வருகிற 31-ந்தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் தகுதியான மாணவ-மாணவிகள் பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு 31-ந்தேதிக்குள் மேற்படி இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது."

    • தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்
    • கலெக்டர் தகவல்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையின மாணவ- மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

    திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருவண்ணாமலை மாவட்டத்தில் மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறித்துவர், சீக்கியர், புத்தமதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் மதத்தை சார்ந்த அரசு, அரசு உதவிபெறும் மற்றும் மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2022-2023 கல்வியாண்டில் ஒன்று முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. 11-ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை (ஐ.டி.ஐ., ஐ.டி.சி., வாழ்க்கை தொழிற்கல்வி, பாலிடெக்னிக், செவிலியர், ஆசிரியர் பட்டயப்படிப்பு, இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள் உட்பட) பயில்பவர்களுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகையும் மற்றும் தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக்கல்வி பயில்பவர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகையும் வழங்கப்படும்.

    இதை பெறுவதற்கு மத்திய அரசின் www.scholarships.gov.in என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம்.

    தகுதியான மாணவ, மாணவிகள் பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு வருகிற 15- ந் தேதி வரையிலும் மற்றும் பள்ளி மேற்படிப்பிற்கான தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகைக்கு வருகிற 31-ந் தேதி வரையிலும் இணையதளத்தின் விண்ணப்பிக்கலாம்.

    இந்திய அரசின் தேசிய கல்வி உதவித்தொகை ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள கல்வி நிலையங்கள், தங்களின் கல்வி நிலையத்துக்கான ஒருங்கிணைப்பு அலுவலரின் ஆதார் விவரங்களை இணைத்த பின்னரே

    விண்ணப்பங்களை இணையத்தில் சரிபார்க்க இயலும். புதியதாக விண்ணப்பிக்கும் மாணவ, மாணவிகள் இணையதளத்தில் எளிதாக விண்ணப்பிக்கும் வகையில் அனைத்து கல்வி நிலையங்களும் தங்களுடைய குறியீட்டு எண்ணை தெரிவிக்கவேண்டும்.

    இத்திட்டம் தொடர்பான இந்திய அரசால் வெளியிடப்பட்ட வழிகாட்டி நெறிமுறைகள் http://www.minorityaffairs.gov.in/schemes/ என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கந்தர்வகோட்டை ஒன்றியம் ஆத்தங்கரை விடுதி அரசு உயர்நிலைப் பள்ளியில் தனியார் கல்வி அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற கல்வி உதவித்தொகை வழங்கும் விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் சிவக்குமார் தலைமை தாங்கினார்.
    • விழாவில் அரசு பள்ளிகளில் பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையும், மக்கள் நல உதவி திட்டங்களையும் வழங்கி

    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் ஆத்தங்கரை விடுதி அரசு உயர்நிலைப் பள்ளியில் தனியார் கல்வி அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற கல்வி உதவித்தொகை வழங்கும் விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் சிவக்குமார் தலைமை தாங்கினார்.

    விழாவில் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை கலந்து கொண்டு ஆத்தியடிப்பட்டி, கீழவாண்டான் விடுதி, ஆத்தங்கரை விடுதி, பல்லவராயன் பத்தை, முள்ளம்குறிச்சி, துவார் அரசு உயர்நிலைப் பள்ளிகளில் பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையும், மக்கள் நல உதவி திட்டங்களையும் வழங்கி சிறப்புரையாற்றினார்.

    நிகழ்ச்சியில் அறக்கட்டளை நிர்வாகி சித்திரைவேல் ஆத்தங்கரை விடுதி ஊராட்சி மன்ற தலைவர் அருணாச்சலம், ஒன்றிய குழு உறுப்பினர் திருப்பதி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    கல்வி உதவித்தொகையில் ரூ.17 கோடிக்கு மேல் ஊழல் நடைபெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் ஆதிதிராவிட நலத்துறை செயலர் பதிலளிக்குமாறு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #ChennaiHighCourt
    சென்னை:

    மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகையில் ரூ.17 கோடிக்கு மேல் ஊழல் நடைபெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் ஆதிதிராவிட நலத்துறை செயலர் பதிலளிக்குமாறு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட பொது நல வழக்கில், ‘தமிழக கல்லூரிகளில் படிக்கும் எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகையில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடை பெற்றுள்ளதாகவும், தமிழக அரசின் தணிக்கை துறை அறிக்கையின்படி ரூ.17 கோடியே 36 லட்சத்து 30 ஆயிரம் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்றும் கூறப்பட்டிருந்ததது.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.சத்திய நாராயணன், பி.ராஜ மாணிக்கம் ஆகியோர், மனுவுக்கு பதில் அளிக்கும்படி ஆதிதிராவிடர் நலத்துறை செயலருக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர். #ChennaiHighCourt
    ×