என் மலர்
நீங்கள் தேடியது "Education Scholarship"
- 60 பேர் பயனடைந்தனர்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
அரக்கோணம்:
மாணவர்கள் கல்வி மற்றும் ஆய்வறிவு அறக்கட்டளை (செல்ப்) காப்பாளர் ச.வேலாயுதம் ஆலோசனையின்படி செல்ப் அறக்கட்டளை சார்பில் உயர்கல்வி பயிலும் இருளர் பழங்குடி மாணவர்கள் 60 பேருக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி விழுப்புரம் புனித அன்னாள் கல்விச்சுடர் மையத்தில் நடைப்பெற்றது.
நிகழ்ச்சிக்கு லூசினா தலைமை தாங்கினார். ஆசிரியர் பொன்.மாரி வரவேற்றார். பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்க தலைவி சிவகாமி, பொதுச்செயலர் ஆறுமுகம், பொருளாளர் நாகராஜ், துணைத்தலைவர் ஆதிமூலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாணவர்கள் கல்வி மற்றும் ஆய்வறிவு அறக்கட்டளை செயலாளர் கோவி.பார்த்திபன், பொருளாளர் ச.கருணாகரன், திண்டிவனம் தாய் தமிழ் பள்ளி தலைவர் பேராசிரியர் கல்வி மணி, அரக்கோணம் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கவுதம், அன்னை தெரேசா கிராம வளர்ச்சி நிறுவன தலைவர் ஐ.டி.தேவாசீர்வாதம், செல்ப் அறக்கட்டளை துணை செயலர் இமயன், பழங்குடி இன விதவைகள் சங்கத் தலைவர் தனலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
பழங்குடி இருளர் மாணவர்களுக்கு கல்வி உதவி செய்த சங்கீதாரா ஜேஷ், ராஜிநாராயணன், டாக்டர்.விஜிஆனந்த், சாந்திசுந்தர், டாக்டர் நந்தகுமார், ரம்யாராஜேஷ் மற்றும் நிகழ்ச்சியில் பங்குபெற்ற அனை வருக்கும் இருளர் பழங்குடி மாணவர்கள் சார்பில் ராஜேஷ் நன்றி கூறினார்.
- சைனிக் பள்ளிகளில் படைவீரர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு 25சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
- கவுரவ ஆணையம் தகுதி வரை உள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
திருப்பூர் :
முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை உயர்த்தப்பட்டு வழங்கப்பட உள்ளது. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருப்பூர் மாவட்ட முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு பள்ளிக்கல்வி, கலை அறிவியல் கல்லூரி, தொழிற்கல்வி படிப்புகளுக்கு கல்வி உதவித்தொகை தொகுப்பு நிதியில் இருந்து வழங்கப்பட்டு வருகிறது. 2022-23-ம் கல்வியாண்டு முதல் கல்வி உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படுகிறது.
1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை ரூ.2 ஆயிரம், 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை ரூ.4 ஆயிரம், 9-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்புக்கு ரூ.5 ஆயிரம், 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. சைனிக் பள்ளிகளில் படைவீரர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு 25சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. சைனிக் பள்ளியில் முன்னாள் படைவீரர்களின் சிறார்கள் சேர்க்கையை ஊக்குவிக்கும் வகையில் 2022-23-ம் கல்வியாண்டு முதல் சைனிக் பள்ளியில் படிப்பதற்கு ஆண்டுக்கு ரூ.25 ஆயிரம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.
போர் மற்றும் போர் நடவடிக்கையில் உயிரிழந்தோரை சேர்ந்த குடும்பத்திற்கு வழங்கப்பட்டு வந்த கருணைத்தொகை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தி வழங்கப்பட உள்ளது. இதில் உடல் ஊனமுற்றிருந்தால் கருணைத்தொகை ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. உயர்கல்வி நிறுவனங்களில் படிப்பவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தில் தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டு தமிழ்நாட்டில் வசிக்கும் படை அலுவலர் தகுதிக்கு கீழ் உள்ள முன்னாள் படைவீரர்கள், கவுரவ ஆணையம் தகுதி வரை உள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
மேலும் விவரங்களுக்கு உதவி இயக்குனர், முன்னாள் படைவீரர் நல அலுவலகம், அறை எண்.523, 5-வது தளம், மாவட்ட கலெக்டர் அலுவலகம், திருப்பூர்-641 604 என்ற முகவரியிலும், 0421 2971127 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
- விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்களை அணுகியோ, இணையதள முகவரியிலிருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தென்காசி:
தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வெளியிட்டு ள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம், ஐ.ஐ.ஐ.டி., என்.ஐ.டி. மற்றும் மத்திய பல்கலைக் கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ-மாணவிகளின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் உள்ள மாணவர்கள் ஒருவருக்கு ஆண்டிற்கு அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை கல்வி உதவித் தொகையாக வழங்குவதற்கு தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. இந்த கல்வி உதவித் தொகைக்கு 2022-23-ம் கல்வியாண்டில் (Fresh Applications) விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மாணவர்கள் கீழ்கண்ட முகவரியிலுள்ள இயக்கத்தையோ அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்களை அணுகியோ அல்லது https://bcmbcmw.tn.gov.in welfschemes.htm scholarship schemes என்ற இணையதள முகவரியிலிருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ரூ.6 லட்சம் வழங்கப்பட்டது
- 85 பேர் பயனடைந்தனர்
அரக்கோணம்:
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் நகரில் மாணவர்கள் கல்வி மற்றும் ஆய்வறிவு அறக்கட்டளை ( செல்ப்) சார்பில் அதன் காப்பாளர் வேலாயுதம் ஆலோசனை பேரில் அரக்கோணம் சுற்று பகுதியில் வசிக்கும் 85 ஏழை மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு ரூ. 5.50 லட்சம் கல்வி உதவித் தொகை பகிர்ந்து அளிக்கப்பட்டது.
6 -ம் ஆண்டாக நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கு மாணவர்கள் வளர்ச்சி சங்க தலைவர் கவுதம் தலைமை தாங்கினார். செல்ப் அறக்கட்டளை செயலாளர் கோவி.பார்த்திபன் வரவேற்றார்.
அன்னை தெரேசா கிராம வளர்ச்சி இயக்கத் தலைவர் ஐடி தேவாசிர்வா தம் சிறப்பு அழைப்பாளர்களை அறிமுகம் செய்தார்.
செல்ப் அறக்கட்டளை முன்னாள் செயலாளர் டாக்டர் ரவிச்சந்திரன், பொருளாளர் கருணாகரன், செல்ப் அறக்கட்டளை தன்னார்வ லர்கள் எஸ். இமையவன், செல்வராஜ். கலைச் செல்வன், சுந் தரம், முருகேசன், கனிமொழி, சரத்பாபு, கார்த்தி, தமிழ் முகி லன், சாம்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அரக்கோ ணம் நகராட்சி ஆணையாளர் ஆர்.லதா, மாவட்ட கல்வி அதி காரி ஹேமலதா, ராணிப் பேட்டை நகர மன்ற துணைத் தலைவர் ரமேஷ் கர்ணா, ரெயில் பயணிகள் சங்க தலைவர் நைனா மாசிலாமணி, அறம் கல்விச் சங்கத் தலைவர் முனைவர் கலை நேசன், தலைமையாசிரியர் பிரின்ஸ் தேவாசீர்வாதம், ஹானா பாண்டியன், குளோ அறக்கட்டளை ஜேம்ஸ், கொரோனா நல் லடக்க குழு தலைவர் முகமது அலி, சந்தர், அம்பேத் ஆனந் தன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு 85 மாணவர்களிடமும் காசோலைகளை வழங்கி வாழ்த்தி பேசியதாவது,
மாணவர்கள் கல்லூரி படிப்பை முடித்து அரசு பணிக்கு சென்று தன் குடும்பத்தை மேம்படுத்த முன் வர வேண்டும்.
அதுபோல் படிப்பை முடித்தவர்கள் கிராமபுற ஏழை மாண வர்களுக்கு உதவி செய்ய முன்வர வேண்டும், மாணவர்கள் தீய பழக்கங்களுக்கு ஆளாகாமல் ஒழுக்கத்துடன் தன்னடக் கத்துடன் பள்ளி, மற்றும் கல்லூரி படிப்புகளை முடிக்க வேண் டும் என்று ஊக்கப்படுத்தி பேசினர்.
இறுதியாக கல்வி உத வித் தொகை வழங்கிய நன்கொடையாளர்கள் சங்கீதா ராஜேஷ், டாக்டர் ஆனந்த் விஜயலட்சுமி, டாக்டர் ஜெயராஜ் சுபா, நவீனா பாபு, டாக்டர் மோகன் குமார், காயத்ரி கவிதா, சரவணன் உள்ளிட்ட அனைவருக்கும் செல்ப் அறக்கட்டளை சார்பில் பௌத்த அரசி நன்றி கூறினார்.
- கல்வி உதவித்தொகை பெற மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- 20-ந்தேதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
அரியலூர்
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் (பி.சி., எம்.பி.சி., டி.என்.சி.) மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது. அதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 3-ம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவ-மாணவிகளுக்கு இலவச கல்வித் திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ-மாணவியர்களுக்கான கல்வி உதவித்தொகை இணையதளம் புதுப்பித்தலுக்கு நேற்று முதல் செயல்பட தொடங்கி உள்ளது. புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்கள் அடுத்த மாதம் (டிசம்பர்) 6-ந்தேதிக்குள் இணையதளம் மூலம் கேட்புகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அதேபோல் புதிய இனங்களுக்கு இணையதளம் அடுத்த மாதம் 15-ந்தேதி முதல் செயல்பட தொடங்கும். புதிய இனங்களுக்கான விண்ணப்பங்கள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 20-ந்தேதிக்குள் இணையதளம் மூலம் கேட்புகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகவும். https://www.bcmbcmw.tn.gov.in/welfschemes.htm#scholarshipschemes என்ற அரசின் இணையதளத்திலும் இத்திட்டங்கள் குறித்த விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்து இணையதளம் மூலமாகவே விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது"
- கலெக்டர் தகவல்
- விண்ணப்பங்கள் 20.1.2023-க்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
அரசு, அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் படிக்கும் பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு இலவச கல்வித் திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத் தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ- மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை புதுப்பித்தலுக்கு இன்று முதல் இணையதளம் செயல்பட தொடங்கும்.
புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்கள் 6.12.22-க்குள் இணையதளம் மூலம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அதேபோல் புதிய பதிவுக்கு 15.12.22 முதல் இணையதளம் செயல்படத் தொடங்கும்.
புதிய விண்ணப்பங்கள் 20.1.2023-க்குள் இணையதளம் மூலம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். https://www.bcmbcmw.tn.gov.in/welfschemes.htm#scholarship shcemes- யிலும் இத்திட்டங்கள் குறித்த விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவங்கள் உள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கல்வி கட்டணத்தை தவிர ரூ.66 ஆயிரத்தை வழங்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது
- கல்லூரியை விட்டு விலகிய மாணவிக்கு
அரியலூர்:
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம், மேலூர் சாலையில் வசிப்பவர் பாலசுப்ரமணியன் (வயது52). இவரது மகளுக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வில் சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் சுயநிதி பிரிவில் இடம் கிடைத்துள்ளது. இந்த கல்லூரியில் சேர்ந்து சுமார் ஒரு மாதம் கழித்து, இந்த மாணவிக்கு மருத்துவ இயக்குனரகம் நடத்திய கலந்தாய்வில் பல் மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. இதனால் அவர் பொறியியல் கல்லூரியில் செலுத்திய பணம் ரூ 2, 26,000 மற்றும் மாற்று சான்றிதழ் ஆகியவற்றை கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டுள்ளார்.
மாற்று சான்றிதழை மட்டும் கொடுத்த கல்லூரி நிர்வாகம் செலுத்திய தொகையை தரவில்லை. இதையடுத்து அந்த மாணவியின் தந்தை பாலசுப்ரமணியன், சென்னை தெற்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு விசாரணைக்காக கடந்த ஜூலை மாதம் அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்துக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்து வந்த அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிபதி வீ.ராமராஜ் தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்தது.
தீர்ப்பின் விவரம்: மாணவி உணவு விடுதிக்கு செலுத்திய பணம் ரூ 53 ஆயிரத்தில் அவர் விடுதியில் தங்கியிருந்த காலத்துக்கான கட்டணம் ரூ 10,000 பிடித்துக்கொண்டு ரூ.43 ஆயிரத்தை கல்லூரி நிர்வாகம் மாணவியின் தந்தையிடம் வழங்க வேண்டும்.
மேலும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சிக்காக கல்லூரியின் இணை நிறுவனமாக செயல்படும் எஸ்.ஆர்.எம் ஆக்சிஸ் என்ற நிறுவனத்தில் மாணவிக்கு செலுத்திய ரூ 25 ஆயிரத்தில் நிர்வாக செலவுகளுக்காக 2 ஆயிரம் பிடித்தம் செய்து கொண்டு மீதித் தொகை 23 ஆயிரத்தையும் அவருக்கு வழங்க வேண்டும். நான்கு வார காலத்திற்குள் வழங்காவிட்டால் அதற்கு வட்டி சேர்த்து வழங்க வேண்டும் என்றும் இந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பொறியியல் கல்லூரியில் கலந்தாய்வு முடிவடைந்து சேர்க்கை கல்லூரிகளில் சேர்க்கை இறுதி செய்யப்பட்ட பின்பு மாணவி கல்லூரியை விட்டு விலகி உள்ள காரணத்தால் அவர் கல்லூரியில் கல்விக் கட்டணமாக செலுத்திய தொகையை திருப்பி வழங்க உத்தரவிட முடியாது என்று அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
- கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
- 31-ந்தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
அரியலூர்
தமிழ்நாட்டில் இந்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள முஸ்லிம், கிறிஸ்தவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜைன மதத்தைச் சேர்ந்த அரசு, அரசு உதவிபெறும் மற்றும் இந்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2022-23-ம் கல்வியாண்டில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகை பெறுவதற்கு மத்திய அரசின் www.scholarships.gov.in என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வருகிற 31-ந்தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் தகுதியான மாணவ-மாணவிகள் பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு 31-ந்தேதிக்குள் மேற்படி இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது."
- தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்
- கலெக்டர் தகவல்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையின மாணவ- மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருவண்ணாமலை மாவட்டத்தில் மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறித்துவர், சீக்கியர், புத்தமதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் மதத்தை சார்ந்த அரசு, அரசு உதவிபெறும் மற்றும் மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2022-2023 கல்வியாண்டில் ஒன்று முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. 11-ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை (ஐ.டி.ஐ., ஐ.டி.சி., வாழ்க்கை தொழிற்கல்வி, பாலிடெக்னிக், செவிலியர், ஆசிரியர் பட்டயப்படிப்பு, இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள் உட்பட) பயில்பவர்களுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகையும் மற்றும் தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக்கல்வி பயில்பவர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகையும் வழங்கப்படும்.
இதை பெறுவதற்கு மத்திய அரசின் www.scholarships.gov.in என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம்.
தகுதியான மாணவ, மாணவிகள் பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு வருகிற 15- ந் தேதி வரையிலும் மற்றும் பள்ளி மேற்படிப்பிற்கான தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகைக்கு வருகிற 31-ந் தேதி வரையிலும் இணையதளத்தின் விண்ணப்பிக்கலாம்.
இந்திய அரசின் தேசிய கல்வி உதவித்தொகை ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள கல்வி நிலையங்கள், தங்களின் கல்வி நிலையத்துக்கான ஒருங்கிணைப்பு அலுவலரின் ஆதார் விவரங்களை இணைத்த பின்னரே
விண்ணப்பங்களை இணையத்தில் சரிபார்க்க இயலும். புதியதாக விண்ணப்பிக்கும் மாணவ, மாணவிகள் இணையதளத்தில் எளிதாக விண்ணப்பிக்கும் வகையில் அனைத்து கல்வி நிலையங்களும் தங்களுடைய குறியீட்டு எண்ணை தெரிவிக்கவேண்டும்.
இத்திட்டம் தொடர்பான இந்திய அரசால் வெளியிடப்பட்ட வழிகாட்டி நெறிமுறைகள் http://www.minorityaffairs.gov.in/schemes/ என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கந்தர்வகோட்டை ஒன்றியம் ஆத்தங்கரை விடுதி அரசு உயர்நிலைப் பள்ளியில் தனியார் கல்வி அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற கல்வி உதவித்தொகை வழங்கும் விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் சிவக்குமார் தலைமை தாங்கினார்.
- விழாவில் அரசு பள்ளிகளில் பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையும், மக்கள் நல உதவி திட்டங்களையும் வழங்கி
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் ஆத்தங்கரை விடுதி அரசு உயர்நிலைப் பள்ளியில் தனியார் கல்வி அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற கல்வி உதவித்தொகை வழங்கும் விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் சிவக்குமார் தலைமை தாங்கினார்.
விழாவில் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை கலந்து கொண்டு ஆத்தியடிப்பட்டி, கீழவாண்டான் விடுதி, ஆத்தங்கரை விடுதி, பல்லவராயன் பத்தை, முள்ளம்குறிச்சி, துவார் அரசு உயர்நிலைப் பள்ளிகளில் பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையும், மக்கள் நல உதவி திட்டங்களையும் வழங்கி சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் அறக்கட்டளை நிர்வாகி சித்திரைவேல் ஆத்தங்கரை விடுதி ஊராட்சி மன்ற தலைவர் அருணாச்சலம், ஒன்றிய குழு உறுப்பினர் திருப்பதி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.