search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அவினாசி அரசுப்பள்ளிகளில்  கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா
    X
    கல்வி ஊக்கத்தொகை வழங்கிய காட்சி.

    அவினாசி அரசுப்பள்ளிகளில் கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா

    • பள்ளி தலைமை ஆசிரியை புனிதவதி தலைமை தாங்கினார்
    • தமிழாசிரியை. சந்திரவடிவு வரவேற்புரை ஆற்றினார்.

    அவினாசி:

    அவினாசி அரசு உயர்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர் கல்வி அறக்கட்டளை சார்பில் கல்வி ஊக்கத் தொகை வழங்கும் விழா அவினாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது. இதில் பள்ளி தலைமை ஆசிரியை புனிதவதி தலைமை தாங்கினார்.உதவித்தலைமை ஆசிரியை வரவேற்புரை ஆற்றினார்.அறக்கட்டளை தலைவர் என்.பாலகிருஷ்ணன் பத்தாம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு தலா ரூ.5000, ரூ.3000, ரூ.2000 என ரூபாய் பத்தாயிரம் கல்வி ஊக்கத்தொகை வழங்கினார்.

    அறக்கட்டளை உறுப்பினர் வள்ளியாத்தாள் சார்பில் அவரது மகன் சம்பத்குமார் 12-ம் வகுப்பு மாணவிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு தலா ரூ.5000, ரூ.3000, ரூ.2000 என பத்தாயிரம் ரூபாய் கல்வி ஊக்கத்தொகை வழங்கினார். அறக்கட்டளை உறுப்பினர் பாலசுப்பிரமணியம் பிளஸ்-2வில் இரண்டாம் இடம் பெற்ற மாணவிக்கு ரூ.3000 வழங்கினார்.

    அறக்கட்டளை செயலாளர் சு .நடராசன் அறக்கட்டளை யின் எதிர்கால செயல்பாடுகள் குறித்து விளக்கி அறிமுக உரை ஆற்றினார். துணைத் தலைவர் சண்முகசுந்தரம், பொருளாளர் கணேஷ் அறிவுச்சுடர், அறக்கட்டளை முத்து குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.உதவி தலைமை ஆசிரியை திலகவதி நன்றி கூறினார். தொடர்ந்துஅரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா தலைமை ஆசிரியை ஆனந்தகுமாரி தலைமையில் நடைபெற்றது. தமிழாசிரியை. சந்திரவடிவு வரவேற்புரை ஆற்றினார். 10ம் வகுப்பு மாணவர்களில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சேயூர் அரசு மருத்துவமனை டாக்டர் யசோதா தன் பெற்றோர் நினைவாக ரூ.5000, ரூ.3000, ரூ.2000 என ரூ.10000 வழங்கி வாழ்த்துரை வழங்கினார்.முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற பிளஸ்-2மாணவர்களுக்கு அறக்கட்டளை செயற்குழு உறுப்பினர் எஸ்.பழனிசாமி ரூ.5000, ரூ.3000, ரூ.2000 என ரூ.10000 வழங்கி வாழ்த்துரை வழங்கினார்.

    Next Story
    ×