search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Drumsticks"

    • ஞாயிறுதோறும் முருங்கை க்காய் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது.
    • 85 விவசாயிகள் 25 டன் முருங்கைகாய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவிலில் வாரச்சந்தையொட்டி ஞாயிறுதோறும் முருங்கை க்காய் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது, இந்த முருங்கைக்காய் கொள்முதல் நிலையத்திற்கு வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்து விற்பனை செய்து செல்கின்றனர். நேற்று 85 விவசாயிகள் 25 டன் முருங்கைகாய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம், மூலனூர் பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் கலந்துகொண்டு ஒரு கிலோ செடிமுருங்கை ரூ.25 முதல் 30வரைக்கும், மரம் முருங்கை ரூ.25முதல் 30வரைக்கும், கரும்பு முருங்கை ரூ.45 வரைக்கும் கொள்முதல் செய்தனர்.

    முருங்கைக் காய்களை வியாபாரிகள் சென்னை, மதுரை, கோவை, ஒட்டன்சத்திரம், பெங்களூர், மைசூர், சட்டீஸ்கர், மும்பை,நாக்பூர், பூனே, கொல்கத்தா, ஜெய்பூர் ஆகிய பகுதியில் உள்ள ஓட்டல் மற்றும் மார்கெட்டுகளுக்கு அனுப்பி வைத்தனர், இத்தகவலை முருங்கைக்காய் வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • 3 டன் முருங்கைக்காய்கள் விற்பனைக்காக வந்திருந்தது.
    • வியாபாரிகள் கொள்முதல் செய்து பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கின்றனர்.

    மூலனூர்:

    மூலனூர், கன்னிவாடி பகுதிகளில் தனியார் கொள்முதல் நிலையங்களில் முருங்கைக்காய் கொள்முதல் செய்வது வழக்கம். இந்த சந்தைக்கு மூலனூர், கன்னிவாடி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் விளைந்த முருங்கைக் காய்களை விற்பனைக்காக கொண்டு செல்கின்றனர். திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், தாராபுரம், மூலனூர் ஆகிய பகுதியில் இருந்து வியாபாரிகள் வந்து முருங்கைக் காய்களை வாங்கி செல்கின்றனர்.

    பின்னர் இதை மொத்த வியாபாரிகள் கொள்முதல் செய்து பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கின்றனர். வடமாநில வியாபாரிகள் முருங்கைக்காய் கொள்முதல் செய்வதை தொடங்கியுள்ளதால் மூலனூர் பகுதிகளில் தற்போது முருங்கை வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கடந்த இரண்டு வாரங்களாக விலை உயரத் தொடங்கியுள்ளது.

    கடந்த வாரம் ரூ.70- க்கு விற்பனை செய்யப்பட்ட முருங்கைக்காய் இந்த வாரம் உயர்ந்தது. செடி முருங்கை, மரம் முருங்கை, கரு முருங்கை என அனைத்தும் சராசரியாக ரூ.80-க்கு கொள்முதல் செய்யப்பட்டது. விலை உயர தொடங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த வாரம் மூலனூர் வாரச்சந்தைக்கு சுமார் 3 டன் முருங்கைக்காய்கள் விற்பனைக்காக வந்திருந்தது. அதன் மதிப்பு ரூ.24 லட்சம் ஆகும்.

    • வெயில் அதிகம் இல்லாததால் பூச்சி தாக்குதல் அதிகரித்தது.
    • நல்ல விலை கிடைத்த போதிலும் விளைச்சல் இல்லாததால் பயனடைய முடியவில்லை என்று விவசாயிகள் கூறுகின்றனர்.

    திருப்பூர் :

    கடந்த ஆடி மாதத்தில் இருந்து தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் முருங்கை மரத்தில் இருந்த பெரும்பாலான பூக்கள் உதிர்ந்து விட்டன. வெயில் அதிகம் இல்லாததால் பூச்சி தாக்குதல் அதிகரித்தது. அவை இலை, கொழுந்து, பூக்கள் என அனைத்தையும் சாப்பிட்டு விட்டன.

    மருந்துகளை தெளித்தும் பூச்சிகளை கட்டுப்படுத்த இயலவில்லை. மரங்கள் வறண்டு போனது போல மாறிவிட்டது. கணிசமான விவசாயிகள் அவற்றை முற்றிலும் வெட்டி அகற்றி விட்டனர். சபரிமலை சீசன் என்பதால் பலரும் சைவ உணவுக்கு மாறிவிட்டனர். கார்த்திகை மாதத்தில் முகூர்த்தங்கள் அதிகம்.

    இதனால் முருங்கைக்காய் பிரியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால் விளைச்சல் முற்றிலும் பாதிக்கப்பட்டதால் முருங்கைக் காய்க்கு தட்டுப்பாடு நிலவுகிறது. உள்ளூர் விளைச்சல் முற்றிலும் நின்று விட்டது. நல்ல விலை கிடைத்த போதிலும் விளைச்சல் இல்லாததால் பயனடைய முடியவில்லை என்று விவசாயிகள் கூறுகின்றனர்.

    • 25 விவசாயிகள் 1 டன் முருங்கைகாய் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
    • மழையின் காரணமாக இருக்கக்கூடிய காய்கள் கருத்து விட்டதால் விலை குறைந்து விட்டது.

    வெள்ளகோவில் : 

    வெள்ளகோவிலில் வாரச்சந்தையொட்டி ஞாயிறுதோறும் முருங்கைக்காய் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது, இந்த முருங்கைக்காய் கொள்முதல் நிலையத்திற்கு வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்,

    நேற்று 25 விவசாயிகள் 1 டன் முருங்கைகாய் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம், மூலனூர் பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் கலந்துகொண்டு ஒரு கிலோ செடிமுருங்கை ரூ.40 முதல் 45வரைக்கும், மரம் முருங்கை ரூ.45முதல் 50வரைக்கும், கரும்புமுருங்கை ரூ.50முதல் 55வரைக்கும் கொள்முதல் செய்தனர்.

    கொள்முதல் செய்த முருங்கைக் காய்களை வியாபாரிகள் சென்னை, மதுரை, கோவை, ஒட்டன்சத்திரம், பெங்களூர், மைசூர், சட்டீஸ்கர், மும்பை,நாக்பூர், பூனே, கொல்கத்தா, ஜெய்பூர் ஆகிய பகுதியில் உள்ள ஓட்டல் மற்றும் மார்கெட்டுகளுக்கு அனுப்பி வைத்ததாகவும். மழையின் காரணமாக முருங்கைகாய் வரத்து குறைந்துவிட்டது. அதுமட்டுமின்றி மழையின் காரணமாக இருக்கக்கூடிய காய்கள் கருத்து விட்டதால் விலை குறைந்து விட்டது. அடுத்த வாரத்தில் இருந்து வட மாநிலத்தில் இருந்து முருங்கைக்காய் வரத் தொடங்கிவிடும் என்று முருங்கைக்காய் வியாபாரி கே.ஆர்.கே.நாச்சிமுத்து கூறினார்.

    • 30 விவசாயிகள் 1 டன் முருங்கைகாய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
    • ஒரு கிலோ முருங்கை ரூ.30 முதல் 70வரைக்கும் கொள்முதல் செய்தனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவிலில் வாரச்சந்தையையொட்டி ஞாயிறுதோறும் முருங்கைக்காய் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த முருங்கைக்காய் கொள்முதல் நிலையத்திற்கு வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். நேற்று 30 விவசாயிகள் 1 டன் முருங்கைகாய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

    இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம், மூலனூர் பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் கலந்துகொண்டு ஒரு கிலோ செடிமுருங்கை ரூ.30 முதல் 35வரைக்கும், மரம் முருங்கை ரூ.30முதல் 35 வரைக்கும், கரும்புமுருங்கை ரூ.65முதல் 70வரைக்கும் கொள்முதல் செய்தனர். கொள்முதல் செய்த முருங்கைக் காய்களை வியாபாரிகள் சென்னை, மதுரை, கோவை, ஒட்டன்சத்திரம், பெங்களூர், மைசூர், சட்டீஸ்கர், மும்பை, நாக்பூர், பூனே, கொல்கத்தா, ஜெய்பூர் ஆகிய பகுதியில் உள்ள ஓட்டல் மற்றும் மார்க்கெட்டுகளுக்கு அனுப்பி வைத்ததாகவும். முருங்கைக்காய் வியாபாரி கே.ஆர்.கே.நாச்சிமுத்து கூறினார்.

    • 80 விவசாயிகள் 15 டன் முருங்கைகாய் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
    • ஒரு கிலோ முருங்கை ரூ.13 முதல் ரூ.16 வரைக்கும் கொள்முதல் செய்தனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவிலில் வாரச்சந்தையையொட்டி ஞாயிறுதோறும் முருங்கைக்காய் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த முருங்கைக்காய் கொள்முதல் நிலையத்திற்கு வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.

    நேற்று 80 விவசாயிகள் 15 டன் முருங்கைகாய் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம், மூலனூர் பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் கலந்துகொண்டு ஒரு கிலோ செடிமுருங்கை ரூ.13 முதல் 14 வரைக்கும், மரம் முருங்கை ரூ.12முதல் 13வரைக்கும், கரும்புமுருங்கை ரூ.15 முதல் 16 வரைக்கும் கொள்முதல் செய்தனர். நேற்று கொள்முதல் செய்த முருங்கைக் காய்களை வியாபாரிகள் சென்னை, மதுரை, கோவை, ஒட்டன்சத்திரம், பெங்களூர், சட்டீஸ்கர், மும்பை,நாக்பூர், பூனே, கொல்கத்தா ஆகிய பகுதியில் உள்ள ஓட்டல் மற்றும் மார்கெட்டுகளுக்கு அனுப்பி வைத்ததாக முருங்கைக்காய் வியாபாரி கே.ஆர்.கே.நாச்சிமுத்து கூறினார்.

    • 90 விவசாயிகள் 20 டன் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
    • ஒரு கிலோ முருங்கை ரூ.15 முதல் ரூ.25 வரைக்கும் கொள்முதல் செய்தனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவிலில் வாரச்சந்தையையொட்டி ஞாயிற்றுக்கிழமைதோறும் முருங்கைக்காய் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த கொள்முதல் நிலையத்திற்கு வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.

    அந்தவகையில் இந்த வாரம் 90 விவசாயிகள் 20 டன் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கயம், மூலனூர் பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் கலந்துகொண்டு ஒரு கிலோ செடிமுருங்கை ரூ.15 முதல் ரூ.17 வரைக்கும், மரம் முருங்கை ரூ.12 முதல் ரூ.15 வரைக்கும், கரும்பு முருங்கை ரூ.18 முதல் ரூ.25 வரைக்கும் கொள்முதல் செய்தனர்.

    • 80 விவசாயிகள் 30 டன் முருங்கைகாய் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
    • ஒரு கிலோ முருங்கை ரூ.10 முதல் 20 வரைக்கும் கொள்முதல் செய்தனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவிலில் வாரச்சந்தையையொட்டி ஞாயிறுதோறும் முருங்கைக்காய் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது.இந்த முருங்கைக்காய் கொள்முதல் நிலையத்திற்கு வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.

    நேற்று 80 விவசாயிகள் 30 டன் முருங்கைகாய் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம், மூலனூர் பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் கலந்துகொண்டு ஒரு கிலோ செடிமுருங்கை ரூ.10 முதல் 14 வரைக்கும், மரம் முருங்கை ரூ.10 முதல் 12 வரைக்கும், கரும்புமுருங்கை ரூ.17 முதல் 20 வரைக்கும் கொள்முதல் செய்தனர். நேற்று கொள்முதல் செய்த முருங்கைக் காய்களை வியாபாரிகள் சென்னை, மதுரை, கோவை, ஒட்டன்சத்திரம், பெங்களூர், சட்டீஸ்கர், மும்பை,நாக்பூர், பூனே, கல்கத்தா ஆகிய பகுதியில் உள்ள ஹோட்டல் மற்றும் மார்க்கெட்டுகளுக்கு அனுப்பி வைத்ததாக முருங்கைக்காய் வியாபாரி கே.ஆர்.கே.நாச்சிமுத்து கூறினார். வரக்கூடிய வாரங்களில் முருங்கைக்காய் விலை இன்னும் கூட வாய்ப்பு உள்ளது என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

    • நேற்று 90 விவசாயிகள் 30 டன் முருங்கைகாய் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
    • வட மாநிலங்களில் கனமழை காரணமாக வரத்து குறைவானதால் இங்கு கடந்த வாரத்தை விட இந்த வாரம் விலை கூடி இருப்பதாக முருங்கைக்காய் வியாபாரி கே.ஆர்.கே.நாச்சிமுத்து கூறினார்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவிலில் வாரச்சந்தையையொட்டி ஞாயிறுதோறும் முருங்கைக்காய் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த முருங்கைக்காய் கொள்முதல் நிலையத்திற்கு வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.நேற்று 90 விவசாயிகள் 30 டன் முருங்கைகாய் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம், மூலனூர் பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் கலந்துகொண்டு ஒரு கிலோ செடிமுருங்கை ரூ - 11 க்கும், மரம் முருங்கை ரூ.9 க்கும், கரும்புமுருங்கை ரூ.13க்கும் கொள்முதல் செய்தனர். நேற்று கொள்முதல் செய்த முருங்கைக் காய்களை வியாபாரிகள் சென்னை, மதுரை, கோவை, ஒட்டன்சத்திரம், பெங்களூர், சட்டீஸ்கர், மும்பை, நாக்பூர், பூனே, கொல்கத்தா ஆகிய பகுதியில் உள்ள ஹோட்டல் மற்றும் மார்க்கெட்டுகளுக்கு அனுப்பி வைக்க வாங்கி சென்றனர். வட மாநிலங்களில் கனமழை காரணமாக வரத்து குறைவானதால் இங்கு கடந்த வாரத்தை விட இந்த வாரம் விலை கூடி இருப்பதாக முருங்கைக்காய் வியாபாரி கே.ஆர்.கே.நாச்சிமுத்து கூறினார்.

    ×