search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "driver murder"

    அஞ்சுகிராமம் அருகே உள்ள பஸ் நிலையத்தில் டிரைவர் கொலையில் வாலிபரை கைது செய்த போலீசார் தலைமறைவான 2 பேரை தேடி வருகின்றனர்.
    அஞ்சுகிராமம்:

    அஞ்சுகிராமம் அருகே உள்ள மேட்டுக்குடியிருப்பைச் சேர்ந்தவர் சுயம்புலிங்கம் (வயது 35). திருமணம் ஆகாதவர். இவர் மினி டெம்போவில் தண்ணீர் கேன் வினியோகம் செய்யும் பணி செய்து வந்தார்.

    நேற்று மாலை சுயம்புலிங்கம் அஞ்சுகிராமம் பஸ் நிலையம் அருகே உள்ள சிதம்பரநகர் பகுதியில் டெம்போவை நிறுத்தி அந்த பகுதியில் தண்ணீர் கேன்களை இறக்கிக் கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக அஞ்சுகிராமத்தைச் சேர்ந்த ஆனந்த் (30) என்பவர் மோட்டார்சைக்கிளில் வந்தார். மற்ற வாகனங்கள் செல்ல முடியாதவாறு மினி டெம்போவை ரோட்டில் நிறுத்தி வைத்திருந்ததாகச் சொல்லி சுயம்புலிங்கத்திடம் ஆனந்த் தகராறில் ஈடுபட்டார். தகராறு முற்றி 2 பேருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

    இதுதொடர்பாக சுயம்புலிங்கம், அஞ்சுகிராமம் போலீஸ் நிலையம் சென்று புகார் செய்தார். போலீசார் ஆனந்த்தை தேடி அவரது வீட்டுக்கு சென்றனர். அப்போது அங்கிருந்து அவர் தலைமறைவாகி இருந்தார்.

    பின்னர் சுயம்புலிங்கம், அந்த பகுதியில் நிறுத்தியிருந்த தனது டெம்போவை எடுப்பதற்காக பஸ்நிலையம் வழியாக நடந்து சென்றார். அப்போது ஆனந்த் தனது நண்பர்கள் விஸ்வநாதபுரத்தைச் சேர்ந்த சிவகுமார், சிவராமபுரத்தைச் சேர்ந்த சரத்குமார் (22) ஆகியோருடன் அங்கு வந்தார்.

    அவர்கள் சுயம்பு லிங்கத்துடன் மீண்டும் தகராறு செய்தனர். இதில் ஆத்திரம் அடைந்த ஆனந்த், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சுயம்புலிங்கத்தை சரமாரியாக குத்தினார். இதில் சுயம்புலிங்கம் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். உயிருக்கு போராடிய அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சுயம்புலிங்கம் இறந்தார்.

    இதுகுறித்து அஞ்சுகிராமம் போலீசார் ஆனந்த், சிவகுமார், சரத்குமார் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அவர்களில் சரத்குமார் கைது செய்யப்பட்டார். மற்ற 2 பேரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். தலை மறைவான ஆனந்த் மீது அஞ்சு கிராமம், பழவூர், கூடங்குளம் உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளன.

    இதற்கிடையே முக்கிய குற்றவாளியான ஆனந்த்தை கைது செய்யக் கோரி சுயம்புலிங்கத்தின் ஊரைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்களும், ஆட்டோ டிரைவர்களும் அஞ்சுகிராமம் போலீஸ் நிலையத்தில் இன்று திரண்டனர். போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஆனந்த்தை விரைவில் கைது செய்வதாக உறுதி அளித்தனர். அதை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர். #tamilnews
    ஊரப்பாக்கம் அருகே தலையை துண்டித்து ஆட்டோ டிரைவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Murdercase

    செங்கல்பட்டு:

    கூடுவாஞ்சேரியை அடுத்த ஊரப்பாக்கம் அருகே உள்ள காரணை புதுச்சேரி ராஜீவ் காந்தி நகர் பகுதி சாலையில் இன்று அதிகாலை 30 வயது மதிக்கத்தக்க வாலிபரின் தலை மட்டும் துண்டாக கிடந்தது.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் கூடுவாஞ்சேரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் விரைந்து வந்து தலையை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    இதில் கொலையுண்டது தாம்பரத்தை அடுத்த கடப்பேரியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் கமல் என்கிற கமலக்கண்ணன் என்பது தெரிந்தது.

    அவரை மர்ம நபர்கள் கடத்தி கழுத்தை அறுத்து கொன்று இருப்பது தெரியவந்தது.அவரது உடல் எங்கு வீசப்பட்டது என்பது தெரியவில்லை. அதனை போலீசார் தேடி வருகிறார்கள்.

    நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் கொலை நடந்ததா? அல்லது பெண் தகராறு காரணமா? என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.

    கொலை நடந்த இடத்தில் இருந்து சிறிது தூரம் வரை மோப்ப நாய் ஓடி நின்றுவிட்டது. எனவே அங்கிருந்து வாகனத்தில் கொலைக் கும்பல் தப்பி சென்று உள்ளனர். அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தலை துண்டித்து வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் கூடுவாஞ்சேரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    குமாரபாளையம் அருகே டிரைவர் கொலையில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகிறார்கள்.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே உள்ள படைவீடு பகுதியில் கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த சின்னதம்பி என்பவரின் லாரி நேற்று முன்தினம் திருட்டு போனது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த சின்னத்தம்பி ஜி.பி.ஆர்.எஸ். கருவி உதவியுடன் தேடியபொழுது குமாரபாளையம் அருகே உள்ள கத்தேரி பிரிவில் திருட்டுப்போன லாரி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து மற்ற டிரைவர்கள் மற்றும் உறவினர்கள் அங்கு விரைந்து சென்று லாரியை மீட்டனர். அப்போது லாரியின் உள்ளே வீ.மேட்டூர் பகுதியினை சேர்ந்த முருகேசன் என்பவர் படுத்திருந்தார். அவரை பிடித்து லாரிகள் நிறுத்தும் இடத்திற்கு கொண்டு சென்றனர்.

    பின்னர் அங்கிருந்த லாரி ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் முருகேசனை மரத்தில் கட்டி வைத்து தாக்கினார்கள். இதில் அவர் இறந்து விட்டார்.

    இது குறித்து குமாரபாளையம் போலீசார், முருகேசன் திருடிசென்ற லாரியின் உரிமையாளர் சின்னதம்பி உட்பட பலர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். தலைமறைவானவர்களை போலீசார் தேடி வந்தனர்.

    அப்போது குமாரபாளையம் பச்சாம்பாளையம் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த சின்னதம்பி (47) மற்றும் டிரைவர்கள் மலையம்பாளையத்தை சேர்ந்த சந்திரன் (எ) ராஜா கண்ணு (58) படைவீடு பகுதியினை சேர்ந்த சதாசிவம் (40) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    இச்சம்பவம் தொடர்பாக மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர். 

    ×