search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Driver Dead"

    • விபத்தில் சிக்கிய லாரி மற்றும் அரசு பஸ் ஆகியவற்றை மீட்கும்பணி 30 நிமிடத்திற்கு மேலாக நடந்தது. அதற்கு பிறகு போக்குவரத்து சீரானது.
    • விரிஞ்சிபுரம் போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர்:

    பெங்களூரில் இருந்து சென்னைக்கு மளிகை பொருட்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. இன்று காலை வேலூர் அருகே உள்ள மேல் மொணவூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது திடீரென லாரி டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பின் மீது மோதியது.

    அந்த நேரத்தில் சேலத்தில் இருந்து வேலூர் நோக்கி அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. எதிர்பாராதவிதமாக அரசு பஸ் விபத்தில் சிக்கியிருந்த லாரியின் பின்புறம் பயங்கரமாக மோதியது.

    இந்த விபத்தில் அரசு பஸ் டிரைவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை உடையந்த அள்ளி கிராமத்தை சேர்ந்த மாதப்பன் (வயது 53). மற்றும் பயணிகள் 17 பேர் படுகாயம் அடைந்தனர். பஸ்சில் இருந்த பயணிகள் அலறி கூச்சலிட்டனர். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

    இது பற்றி தகவல் அறிந்த விரிஞ்சிபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அரசு பஸ் டிரைவர் மாதப்பன் பரிதாபமாக இறந்தார்.

    காயமடைந்த பயணிகள் 9 பேர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியிலும் 8 பேர் வேலூர் சிஎம்சி ஆஸ்பத்திரியிலும் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து காரணமாக பெங்களூர்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    விபத்தில் சிக்கிய லாரி மற்றும் அரசு பஸ் ஆகியவற்றை மீட்கும்பணி 30 நிமிடத்திற்கு மேலாக நடந்தது. அதற்கு பிறகு போக்குவரத்து சீரானது. விரிஞ்சிபுரம் போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அரசு பஸ் ஒன்று அஸின் மீது எதிர்பாராத விதமாக மோதியது. மோதிய வேகத்தில் பஸ் ரோட்டோரத்தில் இருந்த சுவர் மீது மோதி நின்றது.
    • இதையடுத்து அந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த அஸினை மீட்டு சிகிச்சைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    இரணியல்:

    திருவட்டார் அருகே வியன்னூர் குன்றுவிளை பகுதியைச் சேர்ந்தவர் அஸின் (வயது 28).

    இவர், அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். தினமும் காலை, மாலை நேரங்களில் பள்ளியிலிருந்து மாணவ-மாணவிகளை பள்ளிக்கு அழைத்து வருவதுடன் மாலையில் வீட்டிற்கு அழைத்து சென்று வந்தார்.

    நேற்று முன்தினம் மாலையில் மாணவிகளை வீட்டில் இறக்கி விட்டு பஸ்சை வில்லுக்குறி பகுதியில் நிறுத்திவிட்டு வீட்டுக்கு சென்றார். இன்று காலையில் பள்ளிக்கு மாணவர்களை அழைத்து செல்வதற்காக வில்லுக்குறியில் நிறுத்தி இருந்த பஸ்சை எடுப்பதற்காக வீட்டிலிருந்து வில்லுக்குறிக்கு வந்தார்.

    பஸ்சை விட்டு இறங்கி வில்லுக்குறி பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் ஒன்று அஸின் மீது எதிர்பாராத விதமாக மோதியது. மோதிய வேகத்தில் பஸ் ரோட்டோரத்தில் இருந்த சுவர் மீது மோதி நின்றது. இதையடுத்து அந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த அஸினை மீட்டு சிகிச்சைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் இரணியல் சப்-இன்ஸ்பெக்டர் தனிஷ்லாஸ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அஸின் பலியானது குறித்து அவரது வீட்டிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர்.

    விபத்து குறித்து இரணியல் போலீசார் அரசு பஸ் டிரைவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • வேடசந்தூரில் ரத்த காயத்துடன் டிரைவர் இறந்து கிடந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது
    • அவர் கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேடசந்தூர் :

    திண்டுக்கல்மாவட்டம் வேடசந்தூர் ஆத்து மேடு அருகே ராஜகோபால புரத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 40). தாய் தந்தை இல்லாத இவருடைய உறவினர்கள் அனைவரும் வெளியூரில் உள்ளனர். இங்கு டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    இவர் இன்று காலை காலில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் தனது வீட்டின் முன்பாக பிணமாக கிடந்தார். இதைப் பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் ராஜேஷ் உடலை மீட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உடலில் பலத்த காயங்கள் இருப்பதால் ராஜேசை யாரும் கொலை செய்து உடலை வீசிச் சென்றனரா? என விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கண்மாயில் மூழ்கி டிரைவர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சாத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஒ.மேட்டுப்பட்டி காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த புழுகாண்டி மகன் மகேஸ்வரன் (வயது 27). வேன் டிரைவர்.

    இவர் இன்று அந்த பகுதியில் உள்ள கண்மாயில் குளிக்க சென்றார். கடந்த சில நாட்களாக பெய்துவரும் மழையால் கண்மாயில் நீரின் வேகம் அதிகமாக இருந்துள்ளது. இதனை அறியாமல் கண்மாய்க்குள் இறங்கிய மகேஸ்வரன் ஆழமான பகுதிக்கு சென்றதால் திடீரென நீரில் மூழ்கி உள்ளார்.

    இதனை கண்டவர்கள் கண்மாய்க்குள் இறங்கி மகேஸ்வரனை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களது முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    அவர்கள் விரைந்து வந்து சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக கண்மாயில் இறங்கி தேடி மகேஸ்வரன் உடலை மீட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பலியான மகேஸ்வரனுக்கு மாரீஸ்வரி (24) என்ற மனைவியும், மகாலட்சுமி (5), திவ்யா (2) என்ற 2 குழந்தைகளும் உள்ளனர்.
    உடன்குடி அருகே லாரி மோதிய விபத்தில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
    உடன்குடி:

    உடன்குடி அருகே உள்ள வைத்தியலிங்கபுரத்தை சேர்ந்தவர் மந்திரம் (வயது 37). இவர் ஸ்டவ் அடுப்பு பழுது நீக்கும் தொழிலாளியாக இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். மணப்பாடு அமராபுரம் அருகே சென்ற போது எதிரே வந்த கண்டெய்னர் லாரி இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் தலையில் பலத்த காயமடைந்த மந்திரத்தை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு மந்திரம் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து காயல்பட்டினத்தை சேர்ந்த லாரி டிரைவர் அகமது என்பவரை கைது செய்தனர்.
    ×