search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dharamabad court"

    2010-ம் ஆண்டு தடையை மீறி நுழைந்த வழக்கில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்பட 16 பேருக்கு மகாராஷ்டிரா மாநிலம் துர்ஹமபாத் கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. #TDP #ChandrababuNaidu
    மும்பை:

    கோதாவரி ஆற்றின் குறுக்கே நான்ந்டெட் பகுதியில் மகாராஷ்டிரா அரசு பாப்லி என்ற அணையை கட்டியது. 2010-ம் ஆண்டு இந்த அணை கட்டுமானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு (தற்போது ஆந்திர முதல்வர்) தனது கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் அணைய முற்றுகையிட போவதாக அறிவித்திருந்தார்.

    இதனை அடுத்து, அப்பகுதியில் மகாராஷ்டிரா அரசு 144 தடை உத்தரவை பிறப்பித்திருந்தது. தடையை மீறி நுழைய முயன்ற சந்திரபாபு நாயுடு உள்பட 30 எம்.எல்.ஏ.க்கள் 8 எம்.பி.க்கள் ஆகியோர் கைது செய்து பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கு துர்ஹமபாத் கோர்டில் நடந்து வரும் நிலையில் பல முறை சந்திரபாபு நாயுடு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.

    ஆனால், அவர் ஆஜராகாததால் இன்று சந்திரபாபு நாயுடு உள்பட 16 பேருக்கு நீதிபதி பிடிவாரண்ட் பிறப்பித்தார். 
    ×