search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Curfew"

    கொரோனாவுக்கு எதிராக மாநிலங்களிடமும், யூனியன் பிரதேசங்களிடமும் 21 கோடியே 65 லட்சத்து 9 ஆயிரத்து 916 தடுப்பூசிகள் கையிருப்பாக உள்ளன.
    புதுடெல்லி:

    கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக அமல்படுத்தி வருகின்றன. வீடுகள்தோறும் தடுப்பூசி திட்டத்தை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    கொரோனா தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்துவதற்கு மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு இதுவரை 131 கோடியே 62 லட்சத்து 3 ஆயிரத்து 540 தடுப்பூசிகளை வினியோகம் செய்துள்ளது.

    கொரோனா வைரஸ்


    இவற்றில் பயன்படுத்தியது போக மாநிலங்களிடமும், யூனியன் பிரதேசங்களிடமும் 21 கோடியே 65 லட்சத்து 9 ஆயிரத்து 916 தடுப்பூசிகள் கையிருப்பாக உள்ளன.

    இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்டது.

    தமிழகத்தில் தற்போது 8,484 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.

    அதன்படி, தமிழகத்தில் இன்று  744 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 22 ஆயிரத்து 506 ஆக அதிகரித்துள்ளது.

    தமிழகத்தில் தற்போது 8,484 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,01,624 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன.

    வைரஸ் பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 782 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 77 ஆயிரத்து 607 ஆக உயர்ந்துள்ளது.

    ஆனாலும் வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 36,415 ஆக உயர்ந்துள்ளது.

    ரஷ்யாவில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து 81,26,376 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
    மாஸ்கோ:

    உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன. இதுவரை உலக அளவில் 25.93 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 51.87 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் தற்போது ரஷ்யா 5-வது இடத்தில் உள்ளது.

    இந்நிலையில் அந்நாட்டு சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 33,558 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதன்மூலம் ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 94,34,393 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு ஒரேநாளில் மேலும் 1,240 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 2 லட்சத்து 67 ஆயிரத்து 819 ஆக உயர்ந்துள்ளது.

    ரஷ்யாவில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து 81,26,376 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 10,40,198 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

    தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 76 ஆயிரத்து 825 ஆக உயர்ந்துள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.

    அதன்படி, தமிழகத்தில் இன்று  741 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 21 ஆயிரத்து 762 ஆக அதிகரித்துள்ளது.

    தமிழகத்தில் தற்போது 8,536 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,00,817 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன.

    வைரஸ் பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 808 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 76 ஆயிரத்து 825 ஆக உயர்ந்துள்ளது.

    ஆனாலும் வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 36,401 ஆக உயர்ந்துள்ளது.

    சென்னையில் இன்று மேலும் 114 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருவது குறித்து உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

    வாஷிங்டன்:

    ஐரோப்பிய கண்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.

    இங்கிலாந்து, ஜெர்மனி, ரஷியா, ஹங்கேரி, நெதர்லாந்து உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளில் தினசரி பாதிப்பு அதிகமாக உள்ளது.

    இதையடுத்து ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதை தவிர்க்குமாறு பல்வேறு நாடுகள் தங்களது குடிமக்களை கேட்டு கொண்டுள்ளது.

    அமெரிக்கா அரசு தங்களது நாட்டு குடிமக்களுக்கு வெளி நாடுகளுக்கு பயணம் செல்வது தொடர்பாக அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. அதில், கொரோனா பாதிப்பை நான்கு பிரிவுகளாக வகுத்துள்ளது.

    அதில் 4-வது பிரிவு மிகவும் மோசமான கொரோனா பாதிப்பு உள்ள நாடுகளை குறிக்கும். இந்த 4-வது பிரிவில் தற்போது ஐரோப்பிய நாடுகளான பிரிட்டன், பெல்ஜியம், கிரீஸ், நார்வே, சுவிட்சர்லாந்து, அயர்லாந்து, செக் குடியரசு, ருமேனியா உள்ளிட்ட நாடுகள் உள்ளன.

    இந்த நிலையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து உள்ளதால் ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி, டென்மார்க் ஆகிய நாடுகளுக்கும் அமெரிக்கர்கள் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று அந்நாட்டு நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இந்த இரு நாடுகளும், மோசமான கொரோனா பாதிப்பை குறிக்கும் 4-வது பிரிவில் வைக்கப்பட்டுள் ளது.

    ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருவது குறித்து உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

    கொரோனா பாதிப்பை தடுக்க ஐரோப்பிய நாடுகள் கடுமையாக உழைக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.

    இதையும் படியுங்கள்... அ.தி.மு.க. அரசு இயற்றிய நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்- திருமாவளவன் வேண்டுகோள்

    நீலகிரியில் 10-ம் கட்ட முகாமில் 13 ஆயிரத்து 761 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் 10-ம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது. 256 நிலையான மையங்கள் மற்றும் 20 வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. முதல் டோஸ் செலுத்தி 2-வது டோஸ் செலுத்தாமல் உள்ள நபர்களை கண்டறிந்து தடுப்பூசி போடப்பட்டது. முதல் டோஸ் 45 வயதுக்கு மேல் 220 பேர், 18 வயது முதல் 44 வயதுக்குள் 434 பேர் என 654 பேருக்கு செலுத்தப்பட்டது. 2-வது டோஸ் 45 வயதுக்கு மேல் 6 ஆயிரத்து 695 பேர், 18 வயது முதல் 44 வயதுக்குள் 6,412 பேர் என மொத்தம் 13 ஆயிரத்து 107 பேருக்கு போடப்பட்டது. 10-ம் கட்ட முகாமில் 13 ஆயிரத்து 761 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவால் 8 பேர் பாதிக்கப்பட்டனர். 11 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த 82 வயது முதியவர் கொரோனா பாதிப்புடன் கடந்த 19-ந் தேதி கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதற்கிடையே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று கொரோனாவால் 8 பேர் பாதிக்கப்பட்டனர். 11 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர். இதுவரை மாவட்டத்தில் 43 ஆயிரத்து 782 பேர் பாதிக்கப்பட்டனர். அதில் 43 ஆயிரத்து 350 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர். 79 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். இதுவரை சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் எண்ணிக்கை 353 ஆக உள்ளது.
    நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக 41 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருப்பதால், இதுவரை பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 53,128 ஆக அதிகரித்து உள்ளது.
    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை 53,083 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் பிற மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வந்த 4 பேரின் பெயர் நாமக்கல் மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 53 ஆயிரத்து 87 ஆக அதிகரித்தது.

    இதற்கிடையே நேற்று புதிதாக 41 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதுவரை பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 53 ஆயிரத்து 128 ஆக அதிகரித்து உள்ளது.

    இந்த நிலையில் நேற்று 46 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். இதுவரை 52,216 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 505 பேர் இறந்து விட்ட நிலையில் மீதமுள்ள 407 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் சற்று அதிகரித்து உள்ளதால், பொதுமக்கள் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
    சென்னையில் இன்று மேலும் 110 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.

    அதன்படி, தமிழகத்தில் இன்று  750 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 21 ஆயிரத்து 021 ஆக அதிகரித்துள்ளது.

    தமிழகத்தில் தற்போது 8,616 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,01,397 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன.

    கொரோனா பரிசோதனை


    வைரஸ் பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 843 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 76 ஆயிரத்து 017 ஆக உயர்ந்துள்ளது.

    ஆனாலும் வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 36,388 ஆக உயர்ந்துள்ளது.

    சென்னையில் இன்று மேலும் 110 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    தென்காசி அருகில் உள்ள மேலகரத்தில் நேற்று காலையில் இருந்து வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டன.
    தென்காசி:

    தென்காசி அருகில் உள்ள மேலகரத்தில் நேற்று காலையில் இருந்து வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு அவர்களது வீடுகளிலேயே தடுப்பூசி செலுத்தினர். இவ்வாறு நேற்று மாலை வரை மொத்தம் 167 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டன. மேலகரம் நகர பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி பரமசிவன், சுகாதார மேற்பார்வையாளர் தங்கராஜ், அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் சரவணன் மற்றும் நகர பஞ்சாயத்து பணியாளர்கள் இதற்கான பணியில் ஈடுபட்டனர்.
    கடலூர் மாவட்டத்தில் 64 ஆயிரத்து 340 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 64 ஆயிரத்து 340 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 871 பேர் பலியான நிலையில், 63 ஆயிரத்து 338 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இந்த நிலையில் நேற்று வெளியான பரிசோதனை முடிவில் புதிதாக 5 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது. மேலும் 17 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். இதற்கிடையே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட குறிஞ்சிப்பாடியை சேர்ந்த 62 வயது முதியவர், தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதன் மூலம் மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 872 ஆக உயர்ந்துள்ளது.
    செங்கல்பட்டு மாவட்டத்தில் 56 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 56 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 73 ஆயிரத்து 247- ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1 லட்சத்து 70 ஆயிரத்து 25 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 2,529 பேர் உயிரிழந்துள்ளனர். 693 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று 14 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 75 ஆயிரத்து 425- ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 73 ஆயிரத்து 945 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 1.262 பேர் உயிரிழந்துள்ளனர். 218 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    ×