search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Crystal tower"

    மும்பை பரேல் அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போய்வாடா போலீசார் கட்டுமான அதிபர் அப்துல் ரசாக் இஸ்மாயில் சுபாரிவாலாவை அதிரடியாக கைது செய்தனர். #MumbaiFire #CrystalTowerFire
    மும்பை:

    மும்பை பரேலில் உள்ள கிறிஸ்டல் டவர், அடுக்குமாடி குடியிருப்பின் 12-வது மாடியில் நேற்று முன்தினம் காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில், ஒரு பெண் உள்பட 4 பேர் பலியானார்கள். கட்டிடத்தில் இருந்து மீட்கப்பட்ட 21 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



    17 மாடிகளை கொண்ட அந்த கட்டிடத்திற்கு மாநகராட்சியிடம் இருந்து பெற வேண்டிய அனுமதி சான்றிதழ்களை பெறாமல் கட்டுமான அதிபர் அப்துல் ரசாக் இஸ்மாயில் சுபாரிவாலா என்பவர் வீடு வாங்கிய 58 குடும்பத்தினரை குடியமர்த்தி இருக்கிறார்.

    இதுபற்றி அறிந்த மாநகராட்சி நிர்வாகம் 2016-ம் ஆண்டே குடியிருப்புவாசிகளை வெளியேற்றகோரி நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. ஆனால் குடியிருப்புவாசிகள் கட்டிடத்தில் இருந்து காலி செய்யப்படவில்லை. இது தொடர்பான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

    இந்த நிலையில் தான் நேற்று முன்தினம் அந்த கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு 4 பேரின் உயிரை பலி வாங்கி விட்டது. தீ விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போய்வாடா போலீசார் கட்டுமான அதிபர் அப்துல் ரசாக் இஸ்மாயில் சுபாரிவாலாவை அதிரடியாக கைது செய்தனர்.

    நேற்று அவரை போய்வாடா மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். அவரை வருகிற 27-ந் தேதி வரை போலீஸ் காவலில் விசாரிக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.  #MumbaiFire #CrystalTowerFire
    மும்பை கிரிஸ்டல் டவரில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #MumbaiFire #CrystalTowerFire
    மும்பை:

    மும்பையில் மிகவும் பரபரப்பான பரேல் பகுதியில் உள்ளது இந்துமாதா சினிமா. இதன் அருகே உள்ள கிரிஸ்டல் டவர் என்ற அடுக்குமாடி கட்டிடத்தின் 12-வது தளத்தில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கரும்புகை வெளியானதால் அந்த தளத்தில் குடியிருந்தவர்கள் உள்ளே சிக்கிக்கொண்டனர். இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள், 10 வாகனங்களில் விரைந்தனர்.


     
    தீயணைப்பு படையினர் சென்ற சிறிது நேரத்தில் தீப்பிடித்த கட்டிடத்தில் இருந்து வெளியான புகையின் அளவு படிப்படியாக அதிகரித்து 4-ம் நிலையை எட்டியது. தீப்பிழம்புகள் வெளியே தெரிய ஆரம்பித்தது. இதனையடுத்து அந்த தளத்தில் இருந்தவர்கள் ராட்சத கிரேன் மூலம் மீட்கப்பட்டனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி தீயை அணைத்தனர்.

    மூச்சுத்திணறல் மற்றும் தீயில் கருகிய நிலையில் மீட்கப்பட்ட சுமார் 20 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 4 பேர் இறந்துவிட்டனர். மற்றவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். #MumbaiFire #CrystalTowerFire
    ×