search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cricket Australia"

    ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்த டேவிட் பீவெர் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார். #CA
    ஆஸ்திரேலியா அணி தென்ஆப்பிரிக்கா சென்று விளையாடும்போது கேப்டவுன் டெஸ்டில் பான் கிராப்ட், டேவிட் வார்னர், ஸ்மித் ஆகியோர் பந்தை சேதப்படுத்திய புகாரில் சிக்கினர். ஐசிசி அவர்களுக்கு அபராதத்துடன் ஒன்றிரண்டு போட்டிகளில் தடைவித்தாலும், ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அவர்களுக்கு ஓராண்டு தடைவித்தது.

    ஒருபக்கம் தடைவிதித்தாலும் மறுபக்கம் அவர்களுடைய தண்டனையை திரும்பப் பெற வேண்டும் என்று வலுயுறுத்தப்பட்டது. ஆனால் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அதை நிராகரித்தது.



    ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் வீரர்களுக்கான சங்கம் தடையை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த வாரம் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியதிற்கான தேர்தல் நடைபெற்றது. அப்போது டேவிட் பீவெர் 2-வது முறையாக சேர்மனாக தேர்வு செய்யப்பட்டார்.

    இந்நிலையில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் பொறுப்பேற்று பதவி விலகவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் டேவிட் பீவெர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இயர்ல் எட்டிங்ஸ் இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
    ஒசாமா என ஆஸ்திரேலியா வீரர்கள் அழைத்தனர் என்ற குற்றச்சாட்டிற்கு ஆதாரம் இல்லை என ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் இந்த விவகாரத்தை முடிவிற்கு கொண்டு வந்துள்ளது.
    இங்கிலாந்து அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக திகழ்பவர் மொயீன் அலி. இவர் தனது சுயசரிதை புத்தகத்தில் 2015 ஆஷஸ் தொடரின்போது கார்டிப் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வீரர் தன்னை ‘ஒசாமா’ என்று குறிப்பிட்டு இனவெறியை தூண்டிம் வகையில் நடந்து கொண்டதாக குற்றம்சாட்டியிருந்தார். இதனையடுத்து ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் மொயீன் அலி குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தப்படும் என்று கூறியிருந்தது.



    இந்நிலையில் மொயீன் அலி விவகாரம் குறித்து ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் கூறுகையில்  “இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துடன் இணைந்து இந்தச் சம்பவம் அப்போதே விசாரிக்கப்பட்டது. இதன் முடிவையும் மொயீன் அலியிடம் தெரிவிக்கப்பட்டது.  அவரும் இதனை மேலும் முன்னெடுத்துச் செல்ல விரும்பவில்லை.

    மேலும், புதிய விசாரணைகளில் அவரது புகாருக்கான புதிய ஆதாரங்களும் எதுவும் கிடைக்கவில்லை. ஆகவே இந்த விவகாரம் இத்துடன் முடிவுக்கு வருகிறது’’ என்று தெரிவித்துள்ளது.
    மிட்செல் ஸ்டார்க், ஹசில்வுட், நாதன் லயன், மிட்செல் மார்ஷ் ஆகியோரில் ஒருவருக்கு துணைக் கேப்டன் பதவி செல்ல இருக்கிறது. #CA
    ஆஸ்திரேலியா அணியின் டெஸ்ட் கேப்டன் ஸ்மித், துணைக் கேப்டன் வார்னர் ஆகியோர் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு தடைபெற்றனர். இதனால் ஒரே நேரத்தில் கேப்டன் மற்றும் துணைக் கேப்டன் பதவி காலியாக இருந்தது. கேப்டன் பதவிக்கு உடனடியாக விக்கெட் கீப்பர் டிம் பெய்ன் நியமிக்கப்பட்டார்.

    ஆனால் துணைக்கேப்டன் பதவிக்கு இன்னும் யாரும் நியமிக்கப்படவில்லை. ஆஸ்திரேலியா அணி விரைவில் பாகிஸ்தானுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கிறது. இந்த தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடக்கிறது.



    இந்த தொடருக்கு கட்டாயம் துணைக் கேப்டன் தேவை. தற்போது ஆஸ்திரேலியா அணியின் முன்னணி வீரர்களாக மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், ஹசில்வுட் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகியோரில் ஒருவருக்கு துணைக் கேப்டன் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் ஆஸ்திரேலியா தேர்வுக்குழு உறுப்பினராக கிரேக் சேப்பல் மிட்செல் மார்ஷ் துணைக் கேப்டனாக அதிக சாத்தியக்கூறுகள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.



    மிட்செல் மார்ஷ் வெஸ்டன் ஆஸ்திரேலியா அணியின் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் ஆஸ்திரேலியா ‘ஏ’ அணி இந்தியா வந்து விளையாடுகிறது. அப்போது அந்த அணிக்கு கேப்டனாக பணியாற்ற இருக்கிறார்.



    அதேவேளையில் ஹசிலவுட் 40 டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ளார். துணைக் கேப்டன் பதவியில் ஆர்வம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதேபோல் நாதன் லயனும், மிட்செல் ஸ்டார்க்கும் இந்த போட்டியில் இணைந்துள்ளனர்.
    கடந்த 6 சீசனில் முதன்முறையாக பிங்க் பால் டெஸ்ட் இல்லாமல் ஆஸ்திரேலியா உள்ளூர் கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. #CricketAustralia
    இந்திய கிரிக்கெட் வாரியத்தில் நடத்தப்படும் மிகப்பெரிய உள்ளூர் தொடரான ரஞ்சி டிராபியை போல், ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உள்ளூர் தொடர் ஷெஃப்பீல்டு ஷீல்டு. இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரர்கள் தேசிய அணியில் இடம்பெறுவார்கள்.

    இந்த வருடத்திற்கான தொடர் வரும் அக்டோபர் மாதம் 16-ந்தேதி தொடங்குகிறது. இது ஐந்து சுற்றுகளாக நடத்தப்படுகிறது. ஆஸ்திரேலியா கிரிக்கெட்டில் புதிய முயற்சி செய்ய விரும்பினால், இந்த தொடரை பயன்படுத்திக் கொள்ளும்.



    பிங்க் பந்தில் நடத்தப்படும் பகல்-இரவு டெஸ்டிற்கு ஆஸ்திரேலியா அணி தயாராகும்போது இந்த தொடரில் பெரும்பாலான ஆட்டங்கள் பகல்-இரவு ஆட்டமாக நடைபெற்றன. ஆனால் இந்தமுறை ஒரு போட்டி கூட பிங்க் பந்தில் நடத்தப்படவில்லை. அதற்குப் பதிலாக முதல் பாதி சீசன் ரெட் பந்திலும், 2-வது பாதி சீசன் இங்கிலாந்தில் தயாரிக்கப்படும் டியூக்ஸ் பந்தும் பயன்படுத்தப்பட இருக்கிறது.

    ஜேஎல்டி ஒருநாள் கோப்பை தொடர் செப்டம்பர் 16-ந்தேதி தொடங்குகிறது. இதில் 6 அணிகள் பங்கேற்கின்றன.
    பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு தடைபெற்ற ஸ்மித், வார்னருக்கு கிளப் கிரிக்கெட்டில் விளையாட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. #Smith #warner
    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது, கேப் டவுனில் நடைபெற்று 3-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டீவன் ஸ்மித், டேவிட் வார்னர், பான்கிராப்ட் ஆகியோர் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கினார்கள். இதில் ஸ்மித், வார்னருக்கு ஓராண்டு தடையும், பான்கிராப்ட்டுக்கு 9 மாத தடையும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் விதித்தது.



    தடைவிதிக்கப்பட்ட ஸ்மித் குடும்பத்துடன் அமெரிக்கா சென்றிருந்தார். அதன்பின் சமீபத்தில் சொந்த நாடு திரும்பினார். அவருக்கு ஆதரவாக ரசிகர்கள் குரல் கொடுத்து வருகிறன்றனர். ஆஸ்திரேலியா கிரக்கெட் வாரியத்தில் உள்ள முக்கிய நிர்வாகிகளும் ஸ்மித், வார்னரால் ஆஸ்திரேலியா அணிக்காக விளையாட முடியும் என்று கூறி வருகிறார்கள்.

    இந்த நிலையில் கிளப் கிரிக்கெட் போட்டியில் ஸ்மித், வார்னருக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்துள்ளது.
    ×