search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "condition"

    • குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு தற்போது 200 கனஅடி நீர் மட்டும் திறக்கப்பட்டு வருகிறது.
    • குண்டேரிப் பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 33.81 அடியாக உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

    இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில மாதங்களாகவே மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது. அதேநேரம் அணைக்கு வரும் நீர் வரத்தை விட பாசனத்திற்கு அதிக அளவில் தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 47.28 அடியாக குறைந்துள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேல் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 50 கன அடிக்கு கீழ் வருவது குறிப்பிடத்தக்கது. கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 5 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    காளிங்கராயன் வாய்க்கால் பாசனம், தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசனம் ஆகிய வற்றுக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு தற்போது 200 கனஅடி நீர் மட்டும் திறக்கப்பட்டு வருகிறது.

    இதேபோல் குண்டேரிப் பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 33.81 அடியாக உள்ளது. வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 23.40 அடியாக உள்ளது. அதே சமயம் 30.84 அடி கொள்ளளவு கொண்ட பெரும்பள்ளம் அணைக்கு கடந்த சில நாட்களாக நீர் வரத்து இன்றி அணை முழுமையாக வறண்டது.

    ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து அணைகளில் நீர்மட்டம் குறைந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    • பாராளுமன்ற தொகுதியில் தான் போட்டியிட வாய்ப்பு தரும்படி கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
    • முதலமைச்சர் ரங்கசாமி, தேர்தல் தொடர்பாக நேரில் பேசலாம், காலையில் கவர்னர் மாளிகைக்கு வருவதாக தெரிவித்தார்.

    புதுச்சேரி:

    தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் புதுவையில் பா.ஜனதா போட்டியிட உள்ளது.

    தேசிய ஜனநாயக கூட்டணி தலைவரும், முதலமைச்சருமான ரங்கசாமியை சமீபத்தில் பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா ரேநில் சந்தித்து பேசினார்.

    அப்போது, பாராளுமன்ற தேர்தலில் புதுவையில் பா.ஜனதா போட்டியிடுவதற்கான விருப்பத்தை தெரிவித்தார். முதலமைச்சர் ரங்கசாமியும், அதற்கு ஒப்புதல் அளித்தார்.

    மேலும் வெற்றி பெறக்கூடிய பிரபலமான, பலமான வேட்பாளரை நிறுத்தும்படி முதலமைச்சர் ரங்கசாமி கேட்டுக்கொண்டார்.

    இதனிடையே புதுவை பாராளுமன்ற தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட கவர்னர் தமிழிசை, காரைக்காலை சேர்ந்த தொழிலதிபர், சுயேட்சை எம்.எல்.ஏ., நியமன எம்.எல்.ஏ., வனத்துறை அதிகாரி ஆகியோர் சீட் கேட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் கவர்னர் தமிழிசை உள்துறை மந்திரி அமித்ஷாவை டெல்லியில் சந்தித்தார். அப்போது, புதுவை பாராளுமன்ற தொகுதியில் தான் போட்டியிட வாய்ப்பு தரும்படி கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    அதற்கு மத்திய மந்திரி அமித்ஷா, புதுவை தேசிய ஜனநாயக கூட்டணி தலை வரும், முதலமைச்சருமான ரங்கசாமியின் ஒப்புதலை பெறுங்கள் எனக் கூறியதாக தெரிகிறது.

    இந்த சந்திப்புக்கு பிறகு நேற்று இரவு கவர்னர் தமிழிசை புதுவைக்கு வந்தார். அவர் முதலமைச்சர் ரங்கசாமியை தொடர்புகொண்டு மத்திய மந்திரியுடனான சந்திப்பு குறித்து தெரிவித்தார். தனக்கு ஆதரவளிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

    இதற்கு முதலமைச்சர் ரங்கசாமி, தேர்தல் தொடர்பாக நேரில் பேசலாம், காலையில் கவர்னர் மாளிகைக்கு வருவதாக தெரிவித்தார்.

    இதனால் இன்று காலை கவர்னர் தமிழிசை நீண்ட நேரம் கவர்னர் மாளிகையில் காத்திருந்தார். ஆனால் காலை 10.30 மணி வரை முதல்-அமைச்சர் ரங்கசாமி வரவில்லை.

    இதனால் காரைக்காலில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்பதற்காக கவர்னர் தமிழிசை புறப்பட்டு சென்றார். காரைக்காலிலிருந்து அவர் திரும்பிய பின் முதலமைச்சரை சந்திக்க கவர்னர் தமிழிசை திட்டமிட்டுள்ளார்.

    • சேலம் வ.ஊ.சி. பூ மார்க்கெட்டுக்கு கன்னங்குறிச்சி, பனமரத்துப்பட்டி, ஓமலூர், மேச்சேரி, மேட்டூர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து டன் கணக்கில் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.
    • சேலம் வ.ஊ.சி. பூ மார்க்கெட்டில் இன்றைய பூக்களின் விலை நிலவரம் (கிலோ கணக்கில்) : குண்டு மல்லி - ரூ.400,

    சேலம்:

    சேலம் வ.ஊ.சி. பூ மார்க்கெட்டுக்கு கன்னங்குறிச்சி, பனமரத்துப்பட்டி, ஓமலூர், மேச்சேரி, மேட்டூர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து டன் கணக்கில் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. அதே போல் சேலத்தில் இருந்து வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு பூக்கள் விற்பனைக்கும், ஏற்றுமதிக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. வருகிற 6 ந் தேதி புதன்கிழமை கிருஷ்ண ஜெயந்தி, தொடர்ந்து 18-ந் தேதி விநாயகர் சதுர்த்தி அடுத்தடுத்து முகூர்த்த நாட்கள் வருவதையொட்டி சேலம் பூ மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு குண்டு மல்லி கிலோ ரூ.250, ரூ.300 என்கிற விலைகளில் விற்கப்பட்டது. ஆனால் இன்று குண்டு மல்லி கிலோ ரூ.400- க்கு விற்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது பண்டிகை சீசன் என்பதால் பூக்கள் விலை சற்று உயர்ந்து உள்ளது. ஒரு சில ரகங்கள் விலை குறைந்தும் உள்ளன. சேலம் வ.ஊ.சி. பூ மார்க்கெட்டில் இன்றைய பூக்களின் விலை நிலவரம் (கிலோ கணக்கில்) : குண்டு மல்லி - ரூ.400, முல்லை - ரூ.240, ஜாதி மல்லி - ரூ.260, காக்கட்டான் - ரூ.100, கலர் காக்கட்டான் - ரூ.100, மலை காக்கட்டான்- ரூ.100, சி.நந்தியா வட்டம் - ரூ.200, சம்மங்கி - ரூ.100, சாதா சம்மங்கி - ரூ.100, அரளி - ரூ.40, வெள்ளை அரளி - ரூ.60, மஞ்சள் அரளி - ரூ.60, செவ்வரளி - ரூ.80, ஐ.செவ்வரளி - ரூ.50, நந்தியா வட்டம் - ரூ.120க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    • உச்சநீதிமன்றம் மதானிக்கு ஜாமீன் நிபந்தனைகளில் தளர்வு வழங்கியது.
    • உடல்நிலை மோசமடைந்ததால் மீயன்னூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார்.

    திருவனந்தபுரம்:

    பெங்களூருவில் 2008-ம் ஆண்டு நடந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளி கேரள மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் அப்துல் நாசர் மதானி. இவர் தனது உடல்நலம் பாதித்த தந்தையை பார்ப்பதற்காகவும், கேரளாவில் தங்கியிருக்க அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    அதனை விசாரித்த உச்சநீதிமன்றம் மதானிக்கு ஜாமீன் நிபந்தனைகளில் தளர்வு வழங்கி, அவர் கேரளாவில் தங்கியிருந்து சிகிச்சை பெற அனுமதி வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து அவர் கடந்த 20-ந்தேதி கேரளாவுக்கு வந்தார். இந்நிலையில் அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு இருப்பதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அவரது உடல்நிலை மோசமடைந்ததால் மீயன்னூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

    • ஜூவல்லரி மற்றும் வங்கிகளில் போலி தங்க நகைகளை விற்றல், அடமானம் வைத்தல் உள்ளிட்ட பல்வேறு மோசடி வழக்கில் ஈடுபட்ட 10 பேர் கைது.
    • ஜெரோம், புவனேஸ்வரி ஆகியோருக்கு, சென்னை உயர்நீதிமன்றம் கடந்த சில நாட்களுக்கு முன், ஜாமின் வழங்கி இருந்தது.

    புதுச்சேரி:

    காரைக்காலில் உள்ள ஜூவல்லரி மற்றும் வங்கிகளில் போலி தங்க நகைகளை விற்றல், அடமானம் வைத்தல் உள்ளிட்ட பல்வேறு மோசடி வழக்கில், காரைக்கால் நகர போலீசார், கடந்த மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்ட புதுச்சேரி சப்.இன்ஸ்பெக்டர் ஜெரோம், அவரது கள்ளக்காதலி புவனேஸ்வரி, சிவக்குமார், தேவதாஸ், ரிபாத் காமில் உள்ளிட்ட 10 பேரை, கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், ஜெரோம், புவனேஸ்வரி, சிவக்குமார், தேவதாஸ் ஆகிய 4 பேர், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமின் கோரி மனு அளித்திருந்தனர்.

    னேஸ்வரி ஆகியோருக்கு, சென்னை உயர்நீதிமன்றம் கடந்த சில நாட்களுக்கு முன், ஜாமின் வழங்கி இருந்தது. மற்ற 2 பேருக்கு நேற்று ஜாமின் வழங்கியுள்ளது. இந்த 4 பேரும், தினசரி காரைக்கால் நகர போலீஸ் நிலையத்தில் காலை, மாலை என 2 வேளை கையெழுத்து போடவேண்டும் என அந்த நிபந்தனை ஜாமினில் குறிப்பிடபட்டுள்ளது.

    பாராளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக பா.ஜனதாவுக்கு சிவசேனா திடீர் நிபந்தனை விதித்து உள்ளது. எப்போதுமே நாங்கள் தான் பெரிய அண்ணன் என்பதால், பேச்சுவார்த்தைக்கு நீங்கள் தான் எங்களிடம் வர வேண்டும் என்று தெரிவித்து இருக்கிறது. #ParliamentElection2019 #BJP #ShivSena
    மும்பை :

    பாராளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன.

    மராட்டியத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுவது என முடிவு செய்துள்ளன. நட்பு கட்சிகளான பா.ஜனதா, சிவசேனா கூட்டணி இழுபறியில் உள்ளது. சிவசேனாவுடன் தேர்தல் கூட்டணி வைக்க விரும்புவதாக சமீப நாட்களாக பா.ஜனதா பல தடவை தெரிவித்தது. ஆனால், சிவசேனாவோ அதை பற்றி பேசவே இல்லை. பா.ஜனதா அரசை வசைபாடுவதிலேயே குறியாக உள்ளது.

    இந்தநிலையில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று தனது மாதோ இல்லத்தில் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார். இதில், தேர்தல் கூட்டணி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    பின்னர் வெளியே வந்த சஞ்சய் ராவத் எம்.பி.யிடம் நிருபர்கள் பேட்டி கண்டனர். அவர் பதிலளித்து கூறியதாவது:-

    மராட்டியத்தை பொறுத்தவரை கூட்டணியில் எப்போதும் சிவசேனா கட்சி தான் பெரிய அண்ணனாக செயல்பட்டது. இனியும் பா.ஜனதா மற்றும் மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைத்தாலும் சிவசேனாவே பெரிய அண்ணனாக செயல்படும். அவர்கள்(பா.ஜனதா) கூட்டணி வைக்க விரும்பினால் எங்களுடன் வந்து பேச்சுவார்த்தை நடத்தவேண்டும். பேச்சுவார்த்தைக்காக யாராவது அழைப்பு விடுப்பார்கள் என்று நாங்கள் எதிர்பார்த்து காத்திருக்கவில்லை.

    பாந்திராவில் உள்ள சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயின் மாதோஸ்ரீ வீட்டில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது. அங்கு சஞ்சய் ராவத் உள்ளிட்ட எம்.பி.க்கள் வந்த போது எடுத்தபடம்.

    வருமான வரி விலக்கை ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்தில் இருந்து ரூ.8 லட்சமாக உயர்த்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூட்டத்தில் முடிவு எடுத்துள்ளோம். பொதுப்பிரிவில் நலிவடைந்தோருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டில் ஆண்டு வருமானம் ரூ.8 லட்சம் வரை அனுமதிக்கப்படுகிறது. பின்னர் ஏன் அவர்களுக்கு வருமான வரி விலக்கிலும் ரூ.8 லட்சம் அனுமதிக்க கூடாது.

    மேலும் மாநிலத்தில் நிலவும் வறட்சி, ரபேல் போர் விமான முறைகேடு தொடர்பாக வரும் தேர்தல் பிரசாரத்தில் பேசுவது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்தநிலையில் ஜல்னாவில் பா.ஜனதா நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டுவிட்டு வெளியே வந்த முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், சிவசேனாவின் பேச்சுக்கு சுடச்சுட பதில் அளித்துள்ளார்.

    அதில், “பா.ஜனதா கட்சி சிவசேனாவுடன் கூட்டணி அமைக்க விரும்புகிறது. ஆனால் கண்டிப்பாக கூட்டணி வைக்கவேண்டும் என்ற கட்டாயத்தில் இல்லை. நாங்கள் இந்துத்துவா கொள்கையின் அடிப்படையிலும், ஊழலுக்கு எதிராக போராடவே கூட்டணி அமைக்க விரும்புகிறோம். 60 ஆண்டுகளாக ஏற்படுத்தப்பட்ட குண்டு, குழிகளை வெறும் 5 ஆண்டுகளில் சரிசெய்ய முடியாது. நாங்கள் இந்த வேலையை தொடர விரும்புகிறோம்” என்றார்.

    2014-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு வரை சிவசேனா, பா.ஜனதா கட்சிகள் கூட்டணி அமைத்தே போட்டியிட்டன. நான் பெரியவனா? நீ பெரியவனா? என்ற போட்டியே அந்த தேர்தலில் இரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி பிளவு ஏற்பட முக்கிய காரணமாக அமைந்தது.

    தேர்தலுக்கு பிறகு இரு கட்சிகளும் கூட்டணி ஆட்சி அமைத்தது குறிப்பிடத்தக்கது. #ParliamentElection2019 #BJP #ShivSena
    உத்தரகாண்ட் முன்னாள் முதல்–மந்திரி என்.டி.திவாரி உடல்நிலை குறைவால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். #NDTiwari
    புதுடெல்லி:

    உத்தரகாண்ட் மாநில முன்னாள் முதல்–மந்திரி என்.டி.திவாரி, மூளை செயல் இழப்பால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் டெல்லியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் தொடர் சிகிச்சை பெற்றுவருகிறார்.

    92 வயதான என்.டி.திவாரிக்கு நேற்று  முதல் இரண்டு சிறுநீரகங்களும் செயல்படாமல் பழுதடைந்தது. இதைத்தொடர்ந்து அவருக்கு டயாலிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் அவருக்கு வயிற்றில் ஏற்பட்ட தொற்றால் கடுமையாக உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் அவர் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு உள்ளார். அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

    இதுகுறித்து அவரது மகனான ரோகித் சேகர் திவாரி கூறுகையில், ‘எனது தந்தையின் உடல் நிலை மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. ஆஸ்பத்திரியில் அவர் உயிருக்காக போராடிக்கொண்டிருக்கிறார்.

    அவர் உடல் நலம் பெற உத்தரகாண்ட் மக்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும்’ என கேட்டுக்கொண்டு உள்ளார். #NDTiwari  #Tamilnews
    ×