காரைக்காலில் போலி நகை மோசடி வழக்கில் 4 பேருக்கு நிபந்தனை ஜாமின்

ஜூவல்லரி மற்றும் வங்கிகளில் போலி தங்க நகைகளை விற்றல், அடமானம் வைத்தல் உள்ளிட்ட பல்வேறு மோசடி வழக்கில் ஈடுபட்ட 10 பேர் கைது.ஜெரோம், புவனேஸ்வரி ஆகியோருக்கு, சென்னை உயர்நீதிமன்றம் கடந்த சில நாட்களுக்கு முன், ஜாமின் வழங்கி இருந்தது.
காரைக்காலில்  போலி நகை மோசடி வழக்கில்  4 பேருக்கு நிபந்தனை ஜாமின்
Published on

புதுச்சேரி:

காரைக்காலில் உள்ள ஜூவல்லரி மற்றும் வங்கிகளில் போலி தங்க நகைகளை விற்றல், அடமானம் வைத்தல் உள்ளிட்ட பல்வேறு மோசடி வழக்கில், காரைக்கால் நகர போலீசார், கடந்த மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்ட புதுச்சேரி சப்.இன்ஸ்பெக்டர் ஜெரோம், அவரது கள்ளக்காதலி புவனேஸ்வரி, சிவக்குமார், தேவதாஸ், ரிபாத் காமில் உள்ளிட்ட 10 பேரை, கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், ஜெரோம், புவனேஸ்வரி, சிவக்குமார், தேவதாஸ் ஆகிய 4 பேர், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமின் கோரி மனு அளித்திருந்தனர்.

னேஸ்வரி ஆகியோருக்கு, சென்னை உயர்நீதிமன்றம் கடந்த சில நாட்களுக்கு முன், ஜாமின் வழங்கி இருந்தது. மற்ற 2 பேருக்கு நேற்று ஜாமின் வழங்கியுள்ளது. இந்த 4 பேரும், தினசரி காரைக்கால் நகர போலீஸ் நிலையத்தில் காலை, மாலை என 2 வேளை கையெழுத்து போடவேண்டும் என அந்த நிபந்தனை ஜாமினில் குறிப்பிடபட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com