search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "collector sandeep nanduri"

    உயர்மட்டக்குழு ஆய்வு முடிந்துள்ளதால், ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள மற்ற ரசாயனங்களை அகற்றுவது எப்போது? என்பது குறித்து கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார். #Sterlite #CollectorSandeepNanduri
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த மாதம் 22-ந் தேதி கலெக்டர் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தின் போது நடந்த கலவரம் காரணமாக போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் உயிர் இழந்தனர்.

    இதைத் தொடர்ந்து கடந்த மாதம் 28-ந் தேதி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. இதற்கிடையே ஆலையில் உள்ள கன்டெய்னரில் இருந்து கந்தக அமிலம் கசிவு ஏற்பட்டது. கந்தக அமிலத்தை அகற்றுவதற்கான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டது. ஆலையில் இருந்து மொத்தம் 94 டேங்கர் லாரிகள் மூலம் 2,124 டன் கந்தக அமிலம் முற்றிலும் அகற்றப்பட்டது.

    இதுகுறித்து கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறியதாவது:-

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்த கன்டெய்னரில் கசிவு ஏற்பட்டதை தொடர்ந்து கந்தக அமிலத்தை அகற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி கந்தக அமிலம் முழுமையாக வெளியேற்றப்பட்டு உள்ளது. இதனால் கசிவு தடுக்கப்பட்டு உள்ளது. ஆலையில் உள்ள மற்ற ரசாயனங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் ஒரு உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவினர் ஆய்வை முடித்து உள்ளனர். அவர்கள் அரசிடம் விரைவில் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளனர்.



    ஸ்டெர்லைட் ஆலையில் மேலும் சுமார் 5 ஆயிரம் டன் கந்தக அமிலம், சுமார் 3 ஆயிரம் டன் பாஸ்பாரிக் அமிலம், 50 டன் கியாஸ், பர்னஸ் ஆயில், டீசல், குழாய் உடைப்பை சரிசெய்வதற்கான ரசாயனம், தாமிரம் தயாரிக்கப்பட்ட பிறகு கிடைக்கப்பெற்ற விலை உயர்ந்த பொருட் கள் உள்ளிட்டவை உள்ளன.

    இந்த ரசாயனங்களை எப்போது அகற்றுவது? அதனை எப்படி அகற்றலாம்? என்பது குறித்து உயர்மட்டக்குழு அறிக்கையின் அடிப்படையில் முடிவு செய்யப்படும்.

    மேலும் அனைத்து தொழிற்சாலைகளும் மாசுகட்டுப்பாட்டு வாரிய விதிகளுக்கு உட்பட்டுதான் செயல்பட வேண்டும். இந்த விதிகளை ஏதேனும் தொழிற்சாலைகள் மீறி இருந்தால் நோட்டீஸ் கொடுத்து, அதனை சரி செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார். #Sterlite #CollectorSandeepNanduri
    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியான 7 பேரின் மறுபிரேத பரிசோதனையில் எந்தவித சந்தேகமும் இல்லை என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். #SandeepNanduriIAS
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கலெக்டர் சந்தீப் நந்தூரி நிருபர்களிடம் கூறியதாவது:-

    உயர்நீதிமன்ற உத்தரவுப்படி துப்பாக்கி சூட்டில் பலியான 7 பேரின் மறுபிரேத பரிசோதனை நேற்று மதியம் 1 மணிக்கு தொடங்கி இன்று காலை 2.30 வரை நடைபெற்றது. மறுபிரேத பரிசோதனையை மாஜிஸ்திரேட்டு, பலியானவர்களின் உறவினர்கள் முன்னிலையில் டாக்டர்கள் சுடலைமுத்து, மனோகரன், ஜிப்மர் மருத்துவமனை டாக்டர் அம்பிகாபிரசாத், பத்ரா ஆகியோர் செய்திருந்தனர். நேற்று இரவே 3 பேரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இன்று காலை மேலும் 2 பேரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மற்ற 2 பேரின் உடல் இன்று மாலைக்குள் ஒப்படைக்கப்படும்.

    அதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. மறுபிரேத பரிசோதனையில் எந்தவித சந்தேகமும் இல்லை. இதுகுறித்து 100 சதவீத வீடியோ காட்சிகள் உள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் வருகை பதிவு வழக்கம்போல் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #SandeepNanduriIAS
    தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டில் பலியான 7 பேரின் உடல்களும் இன்று பிற்பகலுக்குள் மறு பிரேதபரிசோதனை செய்யப்படும் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார். #ThoothukudiFiring #SandeepNanduri
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டுக்கு பலியான 13 பேரில் 7 பேர்களின் உடல்கள் பிரேதபரிசோதனை நடந்து முடிந்துள்ளது. அந்த உடல்களை மறு பிரேதபரிசோதனை செய்ய வேண்டுமென சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    அதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்காக தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி அரசு ஆஸ்பத்திரிக்கு இன்று வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தூத்துக்குடி கலவரத்தில் பலியான 7 பேரின் உடல்கள் ஐகோர்ட் உத்தரவுப்படி மறு பிரேதபரிசோதனை இன்று மதியம் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர் வருகிறார். ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர், தமிழக மருத்துவர்கள் 2 பேர் பிரேத பரிசோதனை செய்வார்கள்.

    மாஜிஸ்திரேட் மற்றும் பலியானவர்களின் உறவினர்கள் முன்னிலையில் பிரேத பரிசோதனை நடத்தப்படும். இன்று பிற்பகலுக்குள் பிரேத பரிசோதனை முடிக்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மனித உரிமை ஆணைய சிறப்புக்குழு வந்தால் அவர்களுக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குவோம். ஒருநபர் விசாரணை கமி‌ஷனுக்கான அலுவலகம் தயார் நிலையில் உள்ளது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகள் அரசு அறிவித்தபடி நாளை திறக்கப்படும். மாணவர்கள், பெற்றோர்கள் அச்சப்பட தேவையில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #ThoothukudiFiring #SandeepNanduri
    தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மாலைக்குள் இன்டர்நெட் சேவையை மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார். #SandeepNanduri #Thoothukudi
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு மற்றும் கலவரம் தொடர்பான தகவல்கள் வாட்ஸ்அப், பேஸ்புக் குறுஞ்செய்திகள் மூலமாக பொதுமக்கள் மத்தியில் பரவியது. இதனால் ஏற்பட்ட பதட்டத்தை தணிக்கும் விதமாக தமிழக அரசு தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணைய தள சேவையை ரத்து செய்தது.

    இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளானார்கள். ஆன்லைன் மூலம் நடைபெறும் சேவைகள் பாதிக்கப்பட்டன. வங்கி பணபரிவர்த்தனைகளும் பாதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து இனையதள சேவையை தொடங்க வலியுறுத்தி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

    இதை விசாரித்த நீதிபதி சம்பவம் நடந்த தூத்துக்குடி மாவட்டத்துடன் சேர்ந்து நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை ரத்து செய்யப்பட்டதற்கு என்ன காரணம் என்று கேள்வி எழுப்பினார். இதை தொடர்ந்து நேற்று மாலை நெல்லை, குமரி மாவட்டங்களுக்கு இணைய தள சேவை வழங்கப்பட்டது. தொடர்ந்து தூத்துக்குடிக்கும் இணையதள சேவை வழங்கவேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இது தொடர்பாக கலெக்டர் சந்தீப் நந்தூரி நிருபர்களிடம் கூறிய‌தாவது:-


    தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மாலைக்குள் இன்டர்நெட் சேவையை மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடியில் 100 சதவீத கடைகள் திறக்கப்பட்டுள்ளது. மேலும் 90 சதவீத பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. போலீசாரின் எண்ணிக்கையை குறைக்காமல் தீவிரமாக கண்காணித்து வருகிறோம்.

    இவ்வாறு கலெக்டர் கூறினார்.  #SandeepNanduri #Thoothukudi
    ×