search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூத்துக்குடியில் இன்று மாலைக்குள் இணையதள சேவை வழங்க நடவடிக்கை- கலெக்டர் தகவல்
    X

    தூத்துக்குடியில் இன்று மாலைக்குள் இணையதள சேவை வழங்க நடவடிக்கை- கலெக்டர் தகவல்

    தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மாலைக்குள் இன்டர்நெட் சேவையை மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார். #SandeepNanduri #Thoothukudi
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு மற்றும் கலவரம் தொடர்பான தகவல்கள் வாட்ஸ்அப், பேஸ்புக் குறுஞ்செய்திகள் மூலமாக பொதுமக்கள் மத்தியில் பரவியது. இதனால் ஏற்பட்ட பதட்டத்தை தணிக்கும் விதமாக தமிழக அரசு தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணைய தள சேவையை ரத்து செய்தது.

    இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளானார்கள். ஆன்லைன் மூலம் நடைபெறும் சேவைகள் பாதிக்கப்பட்டன. வங்கி பணபரிவர்த்தனைகளும் பாதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து இனையதள சேவையை தொடங்க வலியுறுத்தி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

    இதை விசாரித்த நீதிபதி சம்பவம் நடந்த தூத்துக்குடி மாவட்டத்துடன் சேர்ந்து நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை ரத்து செய்யப்பட்டதற்கு என்ன காரணம் என்று கேள்வி எழுப்பினார். இதை தொடர்ந்து நேற்று மாலை நெல்லை, குமரி மாவட்டங்களுக்கு இணைய தள சேவை வழங்கப்பட்டது. தொடர்ந்து தூத்துக்குடிக்கும் இணையதள சேவை வழங்கவேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இது தொடர்பாக கலெக்டர் சந்தீப் நந்தூரி நிருபர்களிடம் கூறிய‌தாவது:-


    தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மாலைக்குள் இன்டர்நெட் சேவையை மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடியில் 100 சதவீத கடைகள் திறக்கப்பட்டுள்ளது. மேலும் 90 சதவீத பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. போலீசாரின் எண்ணிக்கையை குறைக்காமல் தீவிரமாக கண்காணித்து வருகிறோம்.

    இவ்வாறு கலெக்டர் கூறினார்.  #SandeepNanduri #Thoothukudi
    Next Story
    ×