search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Co-operative Society"

    • விவசாயிகளின் பெயரில் கடன் பெற்று அதனையும் ஏமாற்றி வருகிறார். என்று மனுவில் கூறியுள்ளனர்.
    • கலெக்டர் ஆய்வு செய்து மோசடிகளில் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா ரெட்டியப்பட்டி பகுதியை சேர்ந்த சுந்தரராஜன் தலைமையில் அந்தப் பகுதியை சார்ந்த விவசாயிகள் மாவட்ட கலெக்டரை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளனர்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    ரெட்டியபட்டி கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஒருவர் தொடர்ந்து செயலாளராக பணிபுரிந்து வருகிறார்.

    இவர் இந்தக் கூட்டுறவு சங்கத்தின் மூலம் விவசாய பயிர் கடன் மற்றும் நகை கடன் மூலம் பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார்.

    மேலும் விவசாய பயிர் கடன் என்ற பெயரில் எங்கள் பகுதியில் வாழை பயிர் செய்துள்ளதாக கூறி சுமார் 98 க்கும் மேற்பட்ட விவசாயிகளின் பெயரில் கடன் பெற்று அதனையும் ஏமாற்றி வருகிறார்.

    ரெட்டியபட்டி கிராமம் வானம் பார்த்த பூமியாகும். இங்கு பெய்து வரும் மழையை மட்டுமே நம்பி இங்குள்ள விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர். இது வரை இந்தப் பகுதியில் எந்த விவசாயியும் வாழை பயிரிட்டது கிடையாது. அந்த அளவுக்கு இந்தப் பகுதியில் தண்ணீர் கிடையாது.

    ஆனால் எங்கள் பகுதியில் 98 விவசாயிகள் வாழை பயிர் செய்துள்ளதாக போலியான ஆவணங்களை தயார் செய்து அவர்களுக்கே தெரியாமல் அவர்கள் பெயரில் பல கோடி ரூபாய் கடன் பெற்று பிறகு அந்தக் கடனையும் அரசு தள்ளுபடி செய்து விட்டதாக கூறி எடுத்துக்கொண்ட சம்பவமும் இந்த பகுதியில் நடந்து உள்ளது.

    இதுபற்றி பலமுறை கூட்டுறவுத்துறை அதிகாரிகள் முதல் கூட்டுறவு துறை அமைச்சர், தமிழக முதல்-அமைச்சர் தனிப்பிரிவு வரை பல்வேறு புகார்களை பல்வேறு தரப்பினர் வழங்கியும் இன்றுவரை சம்பந்தப்பட்டவர் மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப் படவில்லை.

    எனவே தென்காசி மாவட்ட கலெக்டர் உடனடியாக இந்தப் பிரச்சனையில் தலையிட்டு மோசடிகளை ஆய்வு செய்து அதில் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் அந்த கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளார்.

    • ரேஷன் கார்டுதாரருக்கு முன்கூட்டியே அறிவிப்பு செய்வதில்லை.
    • சிறப்பு முகாம் என்ற பெயரில், அந்தந்த இடங்களிலேயே பதிவு முகாம் நடக்கிறது.

    உடுமலை :

    ரேஷன் கடையில் கைவிரல் ரேகை பதிவாகாத கார்டுதாரருக்கு பதிவேட்டில் கையொப்பம் பெற்று, ரேஷன் பொருள் வழங்க திருப்பூர் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.இருப்பினும் மாவட்டத்தின் பல கடைகளில் இத்தகைய உத்தரவு பின்பற்றப்படுவதில்லை.

    அதிகாரிகளும் மேலாய்வு நடத்தவில்லை.கைவிரல் ரேகை பதிவு செய்ய இயலாதவரின், ஆதார் பதிவுகளை அப்டேட் செய்ய வேண்டுமெனஅரசு உத்தரவிட்டுள்ளது.அதற்காக பயோமெட்ரிக் பதிவுகளை புதுப்பிக்கும் முகாம் நடத்த மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது வழக்கமாக ஆதார் பதிவு நடக்கும் இடத்திலேயே, அப்டேட் பதிவு முகாம் நடப்பதாக அறிவிப்பு செய்கின்றனர்.

    இதுகுறித்து ரேஷன் கார்டுதாரருக்கு முன்கூட்டியே அறிவிப்பு செய்வதில்லை.அப்படியே தகவல் தெரிந்தாலும், நடமாட முடியாத மற்றும் பஸ்சில் சென்றுவர சிரமப்படும் முதியோர் என ஒவ்வொரு கிராமத்திலும் ஏராளமான கார்டுதாரர்கள், அப்டேட்செய்ய முடியாமல் சிரமப்படுகின்றனர்.மாவட்ட நிர்வாகம் ஒவ்வொரு முறையும் நடக்கும் இம்முகாம்களால் பயன்பெறுவோர் எண்ணிக்கையை ஆய்வு செய்ய வேண்டும்.பொதுமக்கள் வசதிக்காக, ஆதார் அப்டேட்முகாம்களை தொலைவில் உள்ள தாலுகா அலுவலகத்தில் நடத்தாமல் கூட்டுறவு சங்கங்கள் வாரியாக நடத்த திட்டமிட வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    பாதிக்கப்பட்ட முதியோர் சிலர் கூறியதாவது: -

    தாலுகா அலுவலகம் சென்றுவர முடியாததால், கைவிரல் ரேகை புதுப்பிக்க இயலாமல் தவிக்கிறோம். சிறப்பு முகாம் என்ற பெயரில், அந்தந்த இடங்களிலேயே பதிவு முகாம் நடக்கிறது.மாறாக சனி அல்லது ஞாயிற்றுக்கிழமை என வாரம் ஒருநாள் அந்தந்த கூட்டுறவு சங்கங்களில் ஆதார் பதிவு முகாம் நடத்தினால், பாதிக்கப்பட்டவர்களில் அதிகப்படியானவர்கள் பயன்பெறுவர்.மாவட்ட நிர்வாகம், அதிகாரிகளுடன் ஆலோசித்து தகுந்த ஏற்பாடுகளை செய்து கொடுக்க வேண்டும் என்றனர்.  

    • சிவகங்கை மாவட்டத்தில் இதர கடன்களுக்கு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.
    • வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் தகவல் தெரிவித்துள்ளது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகளுக்கு பொது நகைகடன், வட்டியில்லா பயிர்க்கடன், வட்டி இல்லா கால்நடை பராமரிப்பு கடன், குறைந்த வட்டியில் மாற்றுத்திறனாளிகளுக்கான கடன், சுய உதவிகுழு கடன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் கடன் போன்ற அனைத்து விதமான கடன் உதவிகள் வழங்கப்படுகிறது. புதிய உறுப்பினர் சேர்க்கையும் நடைபெற்று வருகிறது‌.

    எனவே சிவகங்கை மாவட்ட விவசாயிகள் தங்களின் ஆதார் அட்டை நகல், ரேஷன் கார்டு நகல், நில உடமை தொடர்பான 10 (1) கணினி சிட்டா, பயிர் சாகுபடி தொடர்பாக கிராம நிர்வாக அதிகாரி அடங்கல் சான்று, பாஸ்போர்ட் அளவு போட்டோ ஆகியவற்றுடன் தங்கள் எல்லைக்குட்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை தொடர்பு கொண்டு கடன் மனு சமர்ப்பித்து பயிர்கடன் மற்றும் இதர கடன்கள் பெற்று பயனடையலாம்.

    கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக இல்லாத விவசாயிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினர் படிவத்தை பெற்று பங்குதொகை மற்றும் நுழைவு கட்டணமாக ரூ.110 செலுத்தி உறுப்பினராக சேர்ந்து உரிய ஆவணங்களுடன் மனுவை சமர்ப்பித்து கடன்களை பெற்று பயனடையலாம்.

    இது தொடர்பான விவரங்களுக்கு சிவகங்கை, திருப்புவனம் வட்டத்திற்கு கள அலுவலர் குறிஞ்சி இளவரசனையும், காளையார்கோவில் வட்டத்திற்கு நவநீதகிருஷ்ண னையும், மானாமதுரை வட்டத்துக்கு மாரியையும், இளையான்குடி வட்டத்திற்கு அழகர்சாமியையும், கல்லல் தேவகோட்டை, திருப்பத்தூர் வட்டத்திற்கு பொன்னையாவையும், எஸ். புதூர், சிங்கம்புணரி வட்டத்துக்கு வனிதாவையும், சாக்கோட்டை, கண்ணங்குடி வட்டத்திற்கு பூங்கோதையையும் தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ராசிபுரம் அருகே காக்காவேரியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நடந்த கொள்ளை முயற்சியில் ரூ.5 கோடி மதிப்புள்ள நகைகள் தப்பியது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராசிபுரம்:

    ராசிபுரம் அருகேயுள்ள காக்காவேரியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த கூட்டுறவு சங்கத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள், பொதுமக்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த கூட்டுறவு சங்கத்தின் மூலம் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் உள்பட பல்வேறு கடன்களை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் விவசாயிகள், பொதுமக்களுக்கு நகைக் கடன் வழங்கப்பட்டு வருகிறது.

    தினந்தோறும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த கூட்டுறவு சங்கத்தின் செயலாளராக முத்துசாமி இருந்து வருகிறார். இவரை தவிர பணியாளர்கள், காவலர்கள் பணியாற்றி வருகின்றனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை கூட்டுறவு சங்கத்திற்கு விடுமுறை. இதையொட்டி நேற்று மாலையில் செயலாளர் முத்துசாமி கூட்டுறவு சங்கத்திற்கு வந்து மின் விளக்கு போட்டுவிட்டுச் சென்றுள்ளார்.

    இரவு நேரத்தில் மர்ம நபர்கள் யாரோ கூட்டுறவு சங்க கட்டிடத்தின் கிழக்குப்புறத்தில் ஏணியை வைத்து மேலே ஏறியுள்ளனர். இரும்புத் தகரத்தால் மூடப்பட்டுள்ள கட்டிடத்தின் மேல்பகுதியில் உள்ள சிமெண்ட் பட்டைகளை கடப்பாரையால் உடைத்து கட்டிடத்திற்குள் இறங்கி உள்ளனர். உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் அந்த அறையின் கதவைத் திறந்து கொண்டு லாக்கர் உள்ள அறையின் கதவை கடப்பாரையால் நெம்பி உள்ளனர். அந்த சமயத்தில் அலாரம் அடித்தால் கொள்ளையர்கள் தங்களது கொள்ளை முயற்சியை கைவிட்டு விட்டு தப்பித்து சென்றார்களா? அல்லது வேறு காரணமா? என்று தெரியவில்லை. சங்கத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்காக வைக்கப்பட்டிருந்த ஏணியை கொள்ளையர்கள் சுவற்றின் மீது ஏறுவதற்கு பயன்படுத்தி உள்ளனர்.

    இந்த சமயத்தில் வழக்கம் போல் இரவு காவலர் சேகர் (54) பணிக்கு வந்துள்ளார். அவர் உள்ளே சென்று பார்த்தபோது சங்க கட்டிடத்தின் மேற்கூரை உடைக்கப்பட்டு இருப்பதையும், லாக்கர் வைத்துள்ள அறையின் கதவை கடப்பாரையால் நெம்பி இருப்பதையும் கண்டு திடுக்கிட்டார். இது பற்றி கூட்டுறவு சங்கத்தின் மேலாளர் முத்துசாமிக்கு தகவல் தந்தார். இது பற்றி கேள்விபட்டதும் செயலாளர் முத்துசாமி சங்கத்திற்கு விரைந்து வந்தார்.

    இது பற்றி அவர் நாமகிரி பேட்டை போலீசாருக்கு தகவல் தந்தார். அதன்பேரில் நாமகிரி பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், சப் இன்ஸ்பெக்டர் செட்டியண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கூட்டுறவு சங்கத்தில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளனவா? என்று விசாரணை நடத்தினார்கள். நாமக்கல்லில் இருந்து துப்பறியும் போலீஸ் நாய் பொய்கை வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை முயற்சி நடந்த கூட்டுறவு சங்க கட்டிடத்தை சுற்றி வந்தது. பிறகு ராசிபுரம்-நாமகிரிபேட்டை சாலையில் மேற்கே சிறிது தூரம் ஓடியது. ஆனால் எந்தவித தடயமும் கிடைக்கவில்லை. கைரேகை நிபுணர்களுக்கு தகவல் தந்துள்ளனர்.

    கொள்ளை முயற்சி நடந்த கூட்டுறவு சங்கத்திற்கு கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பாலமுருகன், துணை பதிவாளர் ரவிச்சந்திரன், வட்டார கள அலுவலர் வைத்திலிங்கம், பீல்டு ஆபீசர் ஈஸ்வரமூர்த்தி, பேங்க் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் விரைந்து வந்தனர். அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையர்கள் லாக்கர் வைத்துள்ள அறையை திறக்க முடியாமல் தப்பித்து சென்றுள்ளதால் ரூ. 5 கோடி மதிப்புள்ள பலரது நகைகள் தப்பின.

    நாமகிரிபேட்டை போலீசார் மற்றும் கூட்டுறவு சங்க அதிகாரிகள் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். கூட்டுறவு சங்கத்தில் கொள்ளை முயற்சி நடந்திருப்பதை கேள்விப்பட்டதும் அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்தனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    கொடுமுடி அருகில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை உறுப்பினர்கள் முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கொடுமுடி:

    கொடுமுடி அருகில் இச்சிப்பாளையத்தில் அஞ்சூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. நேற்று இரவு 9.30 மணிக்கு சங்கத்தின் செயலாளர் பரமேஸ்வரன் (51) எழுத்தர் வைத்தி(45) இருவரும் சங்கத்தின் ‌ஷட்டரை திறந்து உள்ளே நுழைந்துள்ளார்கள்.

    அப்போது அங்கு அருகில் உள்ள சங்க உறுப்பினர்கள் மற்ற உறுப்பினர்களுக்கு தகவல் கொடுத்து இரவு நேரத்தில் சங்கத்தை திறப்பதன் அவசியம் என்ன என்று சங்கத்தை முற்றுகை இட்டார்கள். இது குறித்து தகவல் அறிந்த கொடுமுடி போலீசார் விரைந்து வந்து சங்க செயலாளாளர் பரமேஸ்வரனிடம் விசாரனை நடத்தினர்.

    ஈரோடு கூட்டுறவு துணைப்பதிவாளர் இன்று ஐகோர்ட்டில் தாக்கல் செய்திட சில ஆவணங்களை உடனடியாக கொண்டு வரச் சொல்லி உள்ளார் அதற்காக தான் வந்தோம் என்று கூறியதை உறுதி செய்த பிறகு சங்க உறுப்பினர்களிடம் கூறி ஆவணங்களை எடுத்துக் செல்ல அனுமதித்தனர்.

    இதுகுறித்து சங்க உறுப்பினர்கள் கடந்த 16 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. 18 ஆம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ் இதுவரையிலும் வழங்கப்படவில்லை எனவே தான் இந்த நிலையில் இரவு நேரத்தில சங்கம் திறக்கப்பட்டதால் எங்களுக்கு சந்தேகம் ஏற்ப்பட்டது அதனால் தான் அனைவரும் ஒன்று திரண்டோம் என கூறினார்கள்.

    இதனால் அந்தப் பகுதியில் கமர் 3 மணி நேரம் பரபரப்பான சூழல் ஏற்ப்பட்டது. #tamilnews
    ×