என் மலர்

  நீங்கள் தேடியது "clean Marina"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  புத்தாண்டுக்குள் மெரினா கடற்கரையை சுத்தம் செய்ய வேண்டும் என சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #CleanMarina #MadrasHighCourt
  சென்னை:

  சென்னை வடபழனியில் கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டு 4 பேர் உயிரிழந்தனர். இந்தக் கட்டிடம் விதிகளை மீறிக் கட்டப்பட்டதாகக் கூறப்படுவதால் இது தொடர்பாக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை மாநகராட்சி தரப்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், மாநகராட்சி ஆணையர் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

  அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், மாநகராட்சி ஆணையர் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிப்பது குறித்து ஜனவரி 3-ம் தேதி முடிவு செய்யப்படும் என தெரிவித்தனர்.

  மேலும், புத்தாண்டுக்குள் மெரினாவை தூய்மைப்படுத்த திட்டம் வகுக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், முதலில் மெரினாவை சுத்தம் செய்யுங்கள், பின்னர் மாவட்டம், மாநிலத்தை சுத்தம் செய்யலாம் என்றனர். #CleanMarina #MadrasHighCourt
  ×