search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "centre withdraw"

    சுப்ரீம் கோர்ட்டு கண்டனம் தெரிவித்ததை தொடர்ந்து, வாட்ஸ் அப் தகவல்களை கண்காணிக்கும் நடவடிக்கையை மத்திய அரசு திரும்ப பெற்றது. #SupremeCourt #SocialMedia
    புதுடெல்லி:

    சமூக வலைதளங்களான வாட்ஸ் அப், ஃபேஸ்புக், டுவிட்டர் போன்றவற்றை கண்காணிக்க மையம் ஒன்றை அமைக்க மத்திய அரசின் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் சமீபத்தில் முடிவு செய்தது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கடந்த 13-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது சுப்ரீம் கோர்ட்டு, மத்திய அரசு இந்திய மக்களின் வாட்ஸ் அப் செய்திகளை டேப் செய்ய விரும்புகிறது. இது கண்காணிக்கும் அரசை உருவாக்குவது போன்றது. ஒரு கண்காணிப்பு நிலையை ஏற்படுத்துவது போன்றது.

    இதுதொடர்பாக 2 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என்றும், இவ்விவகாரம் தொடர்பாக தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபாலின் வழிகாட்டலையும் கேட்டுள்ளது. 



    மத்திய அரசு இவ்விவகாரம் தொடர்பாக டெண்டர் கோருவதற்கு முன்னதாக ஆகஸ்ட் 3-ம் தேதி விசாரணைக்கு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், இந்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த திட்டத்தை திரும்பப் பெறுவதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான நகர்வு மத்திய அரசால் ஆய்வு செய்யப்படும் என தலைமை வழக்கறிஞர் கூறியுள்ளார். #SupremeCourt #SocialMedia
    ×