search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "can apply"

    • விருப்பம் உள்ளவர்கள் இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
    • தகுதியான விண்ணப்பதாரருக்கு ‘யூசர் நேம்’, ‘பாஸ்வேர்டு’ வழங்கப்படும்.

    ஈரோடு:

    ஈரோடு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    இ–-சேவை மையம் தொடங்க படித்த இளைஞர்கள், தொழில் முனைவோர் முன் வரலாம். தமிழ்நாடு மின் ஆளுமை முகமையானது அரசு கேபிள் 'டிவி' நிறுவனம், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள், மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம், மீன் வளத்துறை, கிராமப்புற தொழில் முனைவோர் மூலம் இ–-சேவை மையங்களை செயல்படுத்தி அரசின் சேவைகளை இருப்பிடத்தில் வழங்குகிறது.

    அரசின் இணைய தள சேவையை மக்களுக்கான பொது இணைய தளம் மூலம் வழங்குகிறது. இதனை மேம்படுத்த 'அனைவருக்கும் இ–-சேவை மையம்' திட்டத்தை செயல்படுத்துகிறது.

    விருப்பம் உள்ளவர்கள் இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் https://www.tnesevai.tn.gov.in/ மற்றும் https://tnega.tn.gov.in/ என்ற இணைய தள முகவரியை பயன்படுத்தி வருகின்ற ஏப்ரல் மாதம் 14-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

    கிராமப்புறங்களில் இம்மையம் பெற விண்ணப்ப கட்டணம் 3,000 ரூபாய். நகர்புற கட்டணம் 6,000 ரூபாய். இக்கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். தகுதியான விண்ணப்பதாரருக்கு 'யூசர் நேம்', 'பாஸ்வேர்டு' வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • சிவகங்கை மாவட்ட இளைஞர்கள் ராணுவத்தில் சேர இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
    • இந்த தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை

    இந்திய ராணுவத்தில் (Agniveer) திட்டத்தின் கீழ் பல்வேறு வகையான பணிகளுக்கு ஆட்தேர்வு செய்ய விண்ணப்பிக்கும் பணி நடைபெற உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்ப முள்ள சிவகங்கை மாவட்டத்தைச் சார்ந்த இளை ஞர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதள முகவரி மூலமாக 15.3.2023-க்குள் விண்ணப்பிக்கலாம். இந்த ராணுவ ஆட்சேர்ப்பில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மேற்கண்ட இணையதள முகவரியில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    இந்த தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

    • சிறந்த திருநங்கைக்கான விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • இந்த விருதுக்கு ரூ.1 லட்சம் பரிசுத்தொகைக்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    முதல்-அமைச்சரால் 2023-ம் ஆண்டு ஏப்ரல் 15-ந் தேதி திருநங்கைகள் தினம் கொண்டாடப்படுவதை அடுத்து திருநங்கைகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்து முன்மாதிரியாக திகழும் திருநங்கைகளை சிறப்பிக்கும் வகையில் "2023-ம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கைக்கான விருது" வழங்கப்பட உள்ளது. இந்த விருதுக்கு ரூ.1 லட்சம் பரிசுத்தொகைக்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். கீழ்காணும் விதிமுறைகளைப் பின்பற்றி தகுதியுடைய நபர்கள் https://awards.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்து விரிவான கருத்துருக்களை சிவகங்கை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் வருகிற 28-ந் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

    விதிமுறைகள் வருமாறு:- அரசாங்கத்தின் உதவி பெறாமல் தனது வாழ்க்கையை கட்டமைத்துக் கொண்ட திருநங்கைகள், திருநங்கைகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்து, குறைந்தபட்சம் 5 திருநங்கைகள் தங்களது வாழ்வாதார ஆதரவைப் பெறவும், கண்ணியமான வாழ்க்கையை நடத்தவும் உதவி புரிந்த திருநங்கைகள், தமிழ்நாடு திருநங்கை நலவாரியத்தில் உறுப்பினராக இருக்க கூடாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
    • புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்கள் டிசம்பர் 6-ந் தேதிக்குள் இணையதளம் மூலம் கேட்புகள் சமர்ப்பிக்கப்படவேண்டும்

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ- மாணவிகளுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.

    அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்பட்டிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ-மாணவிகளுக்கு இலவச கல்வித்திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

    முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

    பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ-மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை இணையதளம் புதுப்பி த்தலுக்கு 10.11.2022 முதல் செயல்பட தொடங்கும்.

    புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்கள் டிசம்பர் 6-ந் தேதிக்குள் இணையதளம் மூலம் கேட்புகள் சமர்ப்பிக்கப்படவேண்டும். அதே போல் புதிய இனங்களுக்கு இணையதளம் வருகிற 15-ந் தேதி முதல் செயல்படத் தொடங்கும். புதிய இனங்களுக்கான விண்ணப்பங்கள் ஜனவரி 20-ந் தேதிக்குள் இணையதளம் மூலம் கேட்புகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

    மேலும் விவரங்களுக்கு விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுக வேண்டும்.

    அரசு இணையதளம் https://www.bcmbcmw.tn.gov.in/welfschemes.htm# scholarshipschemes -யிலும் இந்த திட்டங்கள் குறித்த விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவங்கள் ஆகியவற்றை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மீன்குஞ்சு வளர்ப்பு குளங்கள் அமைக்க விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்ப படிவம் பெற்று வருகிற 2-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டம் 2021-22-ன் கீழ் சிவகங்கை மாவட்டத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலமாக திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.

    புதிய மீன்குஞ்சு வளர்ப்பு குளங்கள் அமைக்கும் திட்டத்தில் பொதுப் பிரிவில் 1 ஹெக்டேர் (40 சதவீத மானியம்) மற்றும் பெண்களுக்கு 1 ஹெக்டேர் (60சதவீத மானியம்) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    புதிய மீன்வளர்ப்பு குளங்கள் அமைக்கும் திட்டத்தில் பெண்களுக்கு 4 ஹெக்டேர் (60 சதவீத மானியம்), ஆதிதிராவிடர்-பழங்குடியினருக்கு 1 ஹெக்டேர் (60சதவீத மானியம்) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    நன்னீர் மீன்வளர்ப்பு குளங்களுக்கு உள்ளீட்டு மானியம் வழங்குதல் திட்டத்தில் பெண்களுக்கு 4 ஹெக்டேர் (60 சதவீத மானியம்), ஆதிதிராவிடர்-பழங்குடியினருக்கு 1 ஹெக்டேர் (60சதவீத மானியம்) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிறிய அளவிலான பயோபிளாக் குளங்க ளில் மீன்வளர்ப்பு செய்த லுக்கான மானியம் வழங்குதல் திட்டத்தில் பொதுப் பிரிவில் 1 அலகு (40சதவீத மானியம்), பெண்களுக்கு 2 அலகுகள் (60சதவீத மானியம்), ஆதிதிராவிடர்-பழங்குடியினருக்கு 2 அலகுகள் (60சதவீத மானியம்) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    மேற்கண்ட திட்டங்களில் பயன்பெற விரும்புவோர் சிவகங்கை மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்ப படிவம் பெற்று வருகிற 2-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

    மேலும் விபரங்களுக்கு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, உதவி இயக்குநர் அலுவலகம், 5/3, யூனியன் வங்கி மாடி, பெருமாள் கோவில் தெரு, சிவகங்கை - 630561 என்ற முகவரிக்கும், 04575-240848 என்ற தொலைபேசி எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

    • மாதம் ரூ. 1500 உதவித்தொகை பெற தமிழ் திறனறிவு தேர்வுக்கு பிளஸ்-1 மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
    • மேற்கண்ட தகவலை மாநில அரசு தேர்வுகள் இயக்குனரகம் தெரிவித்து உள்ளது.

    மதுரை

    தமிழ் மொழி இலக்கிய திறனை மாணவர்கள் மேம்படுத்திக் கொள்ளும் வகையில், நடப்பு கல்வியாண்டு முதல் தமிழ் மொழி இலக்கிய திறனறிவு தேர்வு நடத்தப்பட உள்ளது. இது மாவட்ட தலைநகரங்களிலும் அக்டோபர் 1-ம்தேதி நடத்தப்படும்.

    அப்போது 10-ம் வகுப்பு தமிழ் பாடத் திட்டங்களின் அடிப்படையில் கொள்குறி வகையில் தேர்வு நடத்தப்படும். இதில் 1500 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை வழியாக மாதம் ரூ.1500/- வீதம் 2 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். எனவே அங்கீகாரம் பெற்ற அனைத்து பள்ளிகளில் பயிலும் (CBSE / ICSE /உட்பட) பிளஸ்-1 மாணவர்கள், தேர்விற்கான விண்ணப்பங்களை www.dge.tn.gov.in இணையதளம் மூலம் வருகிற 22-ம் தேதி முதல் அடுத்த மாதம் 9-ம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணத் தொகை ரூ.50 சேர்த்து சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியரிடம் அடுத்த மாதம் 9-ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும்.

    மேற்கண்ட தகவலை மாநில அரசு தேர்வுகள் இயக்குனரகம் தெரிவித்து உள்ளது.

    ×