search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bus stop"

    கயத்தாறு அருகே கடம்பூரில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் புதிய நிழற்குடை கட்டப்பட்டுள்ளது. இதை அமைச்சர் கடம்பூர் ராஜு திறந்து வைத்தார். #ministerkadamburraju
    கயத்தாறு:

    கயத்தாறு அருகே உள்ள கடம்பூர் ரெயில்வே பீடர் ரோட்டில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 8 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக நிழற்குடை கட்டப்பட்டுள்ளது. இதை தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு திறந்து வைத்து பேசினார். 

    இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, கோவில்பட்டி ஆர்.டி.ஓ. (பொறுப்பு) சங்கர நாராயணன், கயத்தாறு தாசில்தார் லிங்கராஜ், கடம்பூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் நாகராஜா, பேரூராட்சி நிர்வாக அலுவலர் ராதாகிருஷ்ணன், கயத்தாறு ஒன்றிய செயலாளர் வினோபாஜி, கடம்பூர் நகர செயலாளர் சமுத்திரராஜி, பேரவை ஒன்றிய செயலாளர் வண்டானம் கருப்பசாமி, கடம்பூர் பேரவை செயலாளர் மோகன், முன்னாள் ஒன்றிய  கவுன்சிலர் பாலமுருகன், நெல்லை ஆவின் தலைவர் என்.சின்னத்துரை, முன் னாள் எம்.எல்.ஏ.க்கள் மோகன் சின்னப்பன், ஈஸ்வர பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். #ministerkadamburraju
    டிரைவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால் தாறுமாறாக ஓடிய சரக்கு வாகனம் பயணிகள் நிழற்குடையில் மோதியது. இதில் மாணவிகள் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
    கோத்தகிரி:

    கோத்தகிரி தாலுகா அரவேனு அருகே சக்கத்தா பகுதியை சேர்ந்தவர் முருகன்(வயது 35). சரக்கு வாகன டிரைவர். இவர் நேற்று மாலை 5.15 மணிக்கு தனது சரக்கு வாகனத்தில் பஸ் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென அவருக்கு வலிப்பு ஏற்பட்டது. வாயில் நுரை தள்ளியபடி முருகன் கீழே சாய்ந்ததால், அவர் ஓட்டி வந்த சரக்கு வாகனம் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் தாறுமாறாக ஓடிய சரக்கு வாகனம் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரின் மீது மோதிவிட்டு, பயணிகள் நிழற்குடையில் மோதி நின்றது. இதில் காரும், சரக்கு வாகனமும் சேதம் அடைந்தது.

    மேலும் அங்கு பஸ்சுக்காக காத்திருந்த பள்ளி மாணவிகள் அபிதா(15), பிரசீபா(15), ஜனனி(11) மற்றும் வடமாநில தொழிலாளர்கள் அபிலேஷ்(28), திப்பேன்(28) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். உடனே அக்கம்பக்கத்தினர் டிரைவர் முருகன் மற்றும் மாணவிகள் 3 பேரையும் மீட்டு கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வடமாநில தொழிலாளர்கள் 2 பேரும் சரக்கு வாகனத்துக்கு அடியில் சிக்கி கொண்டதால் மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. பொதுமக்கள் இணைந்து சரக்கு வாகனத்தை தூக்கி, சிறிது நேர போராட்டத்துக்கு பிறகு 2 பேரையும் மீட்டனர். அவர்களும் கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    முதலுதவி சிகிச்சைக்கு பிறகு மாணவி பிரசீபா மற்றும் அபிலேஷ், திப்பேன் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்து குறித்த தகவல் பரவியதால் கோத்தகிரி பஸ் நிலைய பகுதியில் பொதுமக்கள் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. உடனே அங்கு வந்த போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர். இந்த விபத்து குறித்து கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சென்னையில் மாநகர பஸ்களில் பஸ் நிறுத்தத்தை அறிவிக்க தானியங்கி ஒலி பெருக்கி வசதி, ஜி.பி.எஸ். கருவிகள் விரைவில் பொருத்தப்படுகிறது. #MTCBus
    சென்னை:

    சென்னையில் 3,200 மாநகர பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. தினமும் 37 லட்சம் மாநகர, புறநகர் பயணிகள் இந்த பஸ்களில் பயணம் செய்து வருகிறார்கள். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 810 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதில் தினமும் 6.25 லட்சம் பயணிகள் பயணம் செய்கிறார்கள்.

    போக்குவரத்து கழகத்தின் சிக்கன நடவடிக்கையாக மாநகர், புறநகர் பஸ்களை கண்டக்டர்கள் இல்லாமல் இயக்க ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் சென்னை மாநகர் பஸ்களில் பஸ் நிறுத்தத்தை அறிவிக்க தானியங்கி ஒலி பெருக்கி வசதி, மற்றும் ஜி.பி.எஸ். கருவிகள் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை மாநகர பஸ்களில் விரைவில் தானியங்கி ஒலி பெருக்கி வசதி அமைக்கப்படுகிறது. ஒவ்வொரு பஸ் நிறுத்தங்கள் வரும்போது இந்த தானியங்கி ஒலி பெருக்கி தானாகவே அறிவிக்கும். ஜி.பி.எஸ். கருவி மூலம் இது செயல்படும் வகையில் அமைக்கப்படுகிறது. மின்சார ரெயில்களில் ஒவ்வொரு நிறுத்தங்கள் வரும்போது முன்கூட்டியே அறிவிப்புகள் வெளியாகும். அதுபோல மாநகர பஸ்களிலும் இந்த அறிவிப்புகள் வெளியாகும்.


    பயணிகள் இந்த அறிவிப்பின் மூலம் தாங்கள் இறங்க வேண்டிய நிறுத்தங்களை எளிதில் தெரிந்துகொள்ளலாம். எந்தவித சிரமமும் இன்றி பயணம் மேற்கொள்ளலாம்.

    இதேபோன்ற வசதிகளை மதுரை, கோவையில் மாநகர், புறநகர் போக்குவரத்து கழகங்களிலும் விரைவில் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் பஸ் பயணிகள் பெரிதும் பயன்பெறுவார்கள். போக்குவரத்து கழக செயலாளர் டேவிதார் இதற்கான வசதிகளை மாநகர பஸ்களில் அமல்படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். #MTCBus
    ×