என் மலர்

  நீங்கள் தேடியது "Bridgetown"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் ஜேசன்ராய், ஜோரூட் ஆகியோரது சதத்தால் இங்கிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #ENGvWI
  பிரிட்ஜ்டவுன்:

  வெஸ்ட் இண்டீஸ்- இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டி பிரிட்ஜ்டவுனில் நேற்று பகல்-இரவாக நடந்தது.

  முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 360 ரன் குவித்தது.

  கிறிஸ் கெய்லின் ஆட்டம் அதிரடியாக இருந்தது. அவர் 129 பந்தில் 3 பவுண்டரி, 12 சிக்சர்களுடன் 135 ரன் குவித்தார். கிட்டத்தட்ட 7 மாதங்களுக்கு பிறகு சர்வதேச ஒருநாள் போட்டியில் விளையாடிய கெய்ல் முத்திரை பதிக்கும் வகையில் ஆடினார். ஹோப் 64 ரன்னும், டாரன் பிராவோ 40 ரன்னும் எடுத்தனர். பென் ஸ்டோக்ஸ், ஆதில் ரஷீத் தலா 3 விக்கெட்டும் கிறிஸ்வோக்ஸ் 2 விக்கெட்டும் எடுத்தனர்.

  இங்கிலாந்து அணி 361 ரன் இலக்கை சேஸ் செய்து சாதனை வெற்றி பெற்றது. அந்த அணி 48.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 364 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடக்க வீரர், ஜேசன்ராய், ஜோரூட் ஆகியோரது சதத்தால் இந்த வெற்றி எளிதில் கிடைத்தது.  ஜேசன் ராய் 85 பந்தில் 123 ரன்னும் (15 பவுண்டரி, 3 சிக்சர்), ஜோரூட் 97 பந்தில் 102 ரன்னும் (9 பவுண்டரி) கேப்டன் மார்கன் 51 பந்தில் 65 ரன்னும் (4 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர். ஹோல்டர் 2 விக்கெட்டும், தேவேந்திர பிஷூ, தாமஸ் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

  இந்த வெற்றி மூலம் 5 போட்டிக் கொண்ட ஒரு நாள் தொடரில் இங்கிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 2-வது ஆட்டம் பிரிட்ஜ்டவுனில் நாளை (22-ந்தேதி) நடக்கிறது. #ENGvWI
  ×