search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Breakfast Plan"

    • கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பேட்டி
    • வேலூர் மாநகராட்சி பகுதியில் 48 பள்ளிகளில் படித்து வரும் 3,250 குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது

    வேலூர்:

    வேலூர் மாநகராட்சி பகுதியில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் முதல்அமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே அமைக்கப்பட்டுள்ள உணவுக் கூடத்தில் காலை உணவு தயாரிக்கப்பட்டு அங்கிருந்து வாகனங்கள் மூலம் தொடக்கப் பள்ளிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு வழங்கி வருகின்றனர். கலெக்டர் குமாரவேல் பாண்டியன் இன்று காலை இந்த திட்டம் குறித்து ஆய்வு செய்தார்.

    சத்துவாச்சாரியில் உள்ள உணவு கூடத்தில் பணியாளர்கள் காலை உணவு தயாரிக்கும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் சித்தேரி, வேலப்பாடி பகுதியில் உள்ள தொடக்கப் பள்ளிகள் நேரில் சென்று குழந்தை களுக்கு காலை உணவு வழங்கப்படுவதை பார்வையிட்டார். காலை உணவு தரமாக தயாரிக்கப்படுகிறதா சரியான நேரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறதா என ஆய்வு மேற்கொண்டார். அப்போது கலெக்டர், மேயர் சுஜாதா ஆகியோர் குழந்தைகளுக்கு காைல உணவு பரிமாறினர்.

    இது குறித்து அவர் கூறுகையில்:-

    வேலூர் மாநகராட்சி பகுதியில் 48 பள்ளிகளில் படித்து வரும் 3,250 குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் மாநகராட்சி பகுதியில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. உணவு தரமாக உள்ளது. இதனை சாப்பிடும் குழந்தைகள் மகிழ்ச்சியாக உள்ளனர். பணியாளர்கள் திறம்பட இதில் ஈடுபட்டுள்ளனர். ஏதாவது குறைபாடுகள் இருந்தாலும் களையப்படும் என்றார்.

    கலெக்டர் ஆய்வின் போது கார்த்திகேயன் எம்.எல்.ஏ, மேயர் சுஜாதா, மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள் உடன் இருந்தனர்.

    • கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேரில் ஆய்வு
    • சமையல் ஒப்பந்ததாரருக்கு பாராட்டு

    ஆற்காடு:

    ஆற்காடு நகராட்சிக்கு உட்பட்ட 6 பள்ளிகளில் 661 மாணவ- மாணவிகளுக்கு தமிழக முதல்-அமைச்சரால் தொடங்கப் பட்ட காலை உணவு திட்டம் கடந்த சில மாதங்களாகச் செயல்பட்டு வருகிறது.

    ஆற்காடு நகராட்சி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி 1-ல் உள்ள முதல்- அமைச்சரின் காலை உணவு திட்ட சமையல் கூடத்தில் குழந்தை களுக்காக சமைக்கப்பட்ட உணவின் சுவை மற்றும் தரத்தினை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேரில் சென்று பார்வையிட்டு சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தார்.

    உணவு தரமாகவும் சுவையாகவும் உள்ளது என சமையல் ஒப்பந்ததாரர் ஜெமினி ராமச்சந்திரனை பாராட்டினார்.

    பின்னர் ஆற்காடு தோப்புக்கானா வடக்கு உயர்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுடன் அமர்ந்து சாப்பிட்டார்.

    அப்போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) சீனிவாச சேகர், நகராட்சி பொறியாளர் கணேசன், நகர மன்ற உறுப்பினர் குணா, முன்னாள் நகரமன்ற உறுப்பினர் பென்ஸ் பாண்டியன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • முதல்-அமைச்சரின் காலை உணவு திட்ட சாதனை துண்டு பிரசுரம் திருமங்கலத்தில் வினியோகம் செய்யப்பட்டது.
    • மாவட்ட செயலாளர் மணிமாறன் ஏற்பாட்டில் தி.மு.க.வினர் வினியோகம் செய்தனர்.

    திருமங்கலம்

    தமிழக முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் சரித்திர சாதனையை பொது மக்களிடம் கொண்டு சென்றிடும் வகையில் பள்ளியில் பசியாறு எனும் சாதனை விளக்க துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி திருமங்கலத்தில் நடந்தது.

    மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மணிமாறன் ஏற்பாட்டின் பேரில் பொதுமக்களிடம் தி.மு.க.வினர் துண்டு பிரசுரங்களை வழங்கினர். திருமங்கலம் பஸ் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டு பொமக்களிடம் துண்டு பிரசுரங்களை நேரில் விநியோகம் செய்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் மாவட்ட அவைத்தலைவர் நாகராஜன்,பொருளா ளர் பொடா.நாகரா ஜன், மாவட்ட அணி அமை ப்பாளர்கள் மதன்குமார், பாசபிரபு,திருமங்கலம் நகர கழகச் செயலாளர் ஸ்ரீதர்,திருமங்கலம் நகர் மன்ற தலைவர் ரம்யா முத்துக்குமார், துணை தலை வர் ஆதவன்அதியமான், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் முத்துக்குமார், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • திண்டுக்கல் மற்றும் கொடைக்கானலில் 48 பள்ளிகளில் முதல் கட்டமாக தொடங்குவத ற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • இத்திட்டங்களை மாநகராட்சிப் பள்ளிகளில் நகராட்சி பள்ளி இயக்கு நரகமும், மலைப்பகுதி பள்ளிகளில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுத்துறை இயக்குநரகமும் செயல்படு த்தும் என தெரிவித்தனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தின் கீழ் திண்டுக்கல் மற்றும் கொடைக்கானலில் 48 பள்ளிகளில் முதல் கட்டமாக தொடங்குவத ற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    தமிழகத்தில் அரசு தொடக்கப்பள்ளி மாணவ ர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. முதல்கட்டமாக குறிப்பிட்ட சில பள்ளிகளில் மட்டும் இத்திட்டத்தை தொடங்கு வதற்கு நடவடிக்கை எடுக்க ப்பட்டு வருகிறது. அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் 48 அரசு தொடக்கப்பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு ள்ளது.

    இது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    திண்டுக்கல் மாவட்ட த்தைப் பொறுத்தவரை மாநகராட்சி மற்றும் மலைப்பகுதியிலுள்ள பள்ளிகள் பிரிவின் கீழ் காலை சிற்றுண்டித் திட்டத்திற்கு 48 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாநகராட்சியில் 14 தொடக்கப் பள்ளிகளைச் சேர்ந்த 1,223 மாணவர்கள், கொடைக்கானல் பகுதியில் 14 தொடக்கப் பள்ளிகளைச் சேர்ந்த 1,305 மாணவர்கள் என 2,238 மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற உள்ளனர்.

    இத்திட்டங்களை மாநகராட்சிப் பள்ளிகளில் நகராட்சி பள்ளி இயக்கு நரகமும், மலைப்பகுதி பள்ளிகளில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுத்துறை இயக்குநரகமும் செயல்படு த்தும் என தெரிவித்தனர்.

    ×