search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Auto Tips"

    பண்டிகை காலத்தில் புதிதாக கார் வாங்க நினைப்போர், வாங்கும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்களை தொடர்ந்து பார்ப்போம். #automobile
    வாழ்க்கையின் மகிழ்ச்சியான சமயங்களில் புதிய கார் வாங்கும் நிகழ்வும் ஒன்று. பொதுவாக கார் வாங்கும் சமயங்களில் பல காகிதங்களில் கையெழுத்து போடுவதிலேயே பலரும் கவனமாக இருந்துவிடுவர். விற்பனையகத்திலிருந்து காரை வெளியே எடுப்பதற்கு முன்பு கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் இதோ...

    நீங்கள் விரும்பிய நிறத்தில் காரை தேர்வு செய்த பிறகு அதை பதிவு எண்ணுக்கு அனுப்பும் முன்பு சில சோதனைகளை நீங்கள் செய்வது அவசியம். அப்போதுதான் அந்த காரில் பிரச்சனை இருந்தால் நீங்கள் வேறொன்றை மாற்ற முடியும். பதிவு செய்த பிறகு மாற்ற முடியாது.

    டெலிவரிக்கு முன்பாக நீங்கள் அனைத்து அம்சங்களையும் பார்த்து சம்மதம் தெரிவிக்காமல் உங்கள் பெயரில் இன்வாய்ஸ் தயாரிக்கக் கூடாது என்று விற்பனையாளரிடம் கண்டிப்பாக தெரிவித்துவிடுங்கள். காரை பகல் நேரத்தில் சென்று பார்த்து சோதனை செய்யுங்கள்.



    காரின் உள்புறமும், வெளிப்புறமும் எவ்வித சேதமும் இல்லாமல் இருக்கிறதா என்பதை கவனமாக பார்க்க வேண்டும்.

    பொதுவாக கார் உற்பத்தி ஆலையிலிருந்து போக்குவரத்து மூலம் கார் விற்பனையகத்துக்கு வரும். இதனால் காரில் சேதம் ஏற்பட வாய்ப்புண்டு.

    சில விற்பனையகங்களில் காட்சி (டெமோ) கார் என வைத்திருப்பர். புதிதாக டெலிவரி எடுக்கும் முன்புவரை சில விற்பனையாளர்கள் அதை டெமோ காராக பயன்படுத்தி இருக்கலாம். ஸ்பீடோமீட்டர் வயர் இணைப்பை துண்டித்துவிட்டு பயன்படுத்தியிருப்பதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே அதை கவனமாகப் பார்க்க வேண்டும்.



    சில கார்களில் உற்பத்தி சார்ந்த குறைபாடு இருக்கும். அவற்றை உன்னிப்பாக கவனித்தால் கண்டுபிடித்துவிட முடியும். புதிய கார்கள் பல சமயங்களில் விற்பனையகங்களில் நீண்ட காலம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். வெயில், மழை இவற்றில் காய்ந்திருக்கும். இவற்றையெல்லாம் கட்டாயம் பார்க்க வேண்டும்.

    முதலில் காரின் வெளிப்புறத்தை உன்னிப்பாக கவனியுங்கள். பம்ப்பரில் தொடங்கி பக்கவாட்டு பகுதி முழுவதுமாக பாருங்கள். காரில் ஏதேனும் கீறல், அடிபட்டிருந்தால், நசுங்கியிருப்பது தெரியும். முனைப் பகுதிகளில் ரீ-பெயிண்ட் செய்திருக்கிறார்களா என்று கவனியுங்கள்.

    வெளிப்புறத்தை கவனமாக பார்த்த பிறகு உள்புறமும் கவனியுங்கள். டேஷ் போர்டு, டோர் பேட் ஆகியவை அனைத்தும் சரியாக பொருந்தும்படி உள்ளதா என்று கவனியுங்கள். டேஷ்போர்டு பகுதியில் உள்ள பெட்டிகளை திறந்து, மூடி சரியாக செயல்படுகிறதா என்று பாருங்கள். சீட்களில் ஏதேனும் கறை உள்ளதா என்று கவனியுங்கள். கீழ்ப்பகுதியில் உள்ள மேட்டை எடுத்து ஏதேனும் நீர் கசிவு இருக்கிறதா என்று பாருங்கள். முன்புற கண்ணாடி, ஜன்னல்கள் சரியாக உள்ளனவா அதில் விரிசல்கள் உள்ளதா என்று பார்க்கவும். சீட் பெல்ட் சரியாக உள்ளதா, டிரைவர் சீட் சரியாக நகர்கிறதா என்பதை கவனிக்கவும்.



    பிறகு முன்புற பானட்டைத் திறந்து பேட்டரி வயர்கள் சரியாக உள்ளனவா, அதில் துரு பிடித்திருக்கிறதா, பேட்டரி லீக் உள்ளதா என்று பார்க்கவும். பேட்டரிக்கான உத்தரவாத அட்டையை கண்டிப்பாக வாங்கவும். என்ஜின் ஸ்டார்ட் ஆன சமயத்தில் காரினுள் சத்தம் எந்த அளவு உள்ளது என்பதை பார்க்கவும். வினோதமான சத்தம் வந்தால் அதை கவனிக்கவும். ஆக்சிலரேட்டரை அழுத்தினாலும் என்ஜின் அதிர்வு அளவுக்கு அதிகமாக இருக்கக் கூடாது. என்ஜின் இயங்கிக் கொண்டிருக்கும்போது பின்பகுதியில் சைலன்சரை பார்க்கவும். புகை வெளியாகிறதா என்று பார்க்கவும். புதிய கார் கருப்பு புகையை வெளியிடாது.

    முகப்பு விளக்கு, பின்புற விளக்கு, இன்டிகேட்டர் ஆகியன செயல்படுகிறதா என்பதை பார்க்கவும். டயரின் காற்று அழுத்தத்தை சோதித்த பிறகு அந்த காரை சிறிது தூரம் ஓட்டிப் பாருங்கள். அப்போதுதான் காரின் சஸ்பென்ஷன் எந்த அளவுக்கு உறுதியாக உள்ளது என்பது தெரியும். கார் டயரின் உற்பத்தி நாளையும் பார்த்துக் கொள்ளவும். கூடுதலாக தரப்பட்டுள்ள ஸ்டெப்னி டயர் மற்றும் ஜாக்கி போன்றவற்றையும் பார்வையிட வேண்டும்.  #automobile
    இந்தியாவில் கார் பயனாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், நீங்கள் வாங்கும் காரில் இ.எஸ்.சி. தொழில்நுட்பம் உள்ளதா என்பதை பார்க்க வேண்டிய அவசியம் அதிகரித்துள்ளது. #Car
    மகிழுந்து எனப்படும் கார் ஆடம்பரம் அற்ற அத்தியாவசிய தேவைகளின் பட்டியலில் நுழைந்து விட்டது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கார் பயன்பாடு அதிகரித்து வருகிறது. கார் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை போன்றே, புதிய கார்களில் வழங்கப்படும் அம்சங்களும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

    வளர்ந்து வரும் தொழில்நுட்ப காலத்திற்கு ஏற்ப கார் பயன்படுத்துவோருக்கு பயன்தரும், பாதுகாப்பை அதிகரிக்க பல்வேறு புதிய வசதிகள் புதிய கார்களில் சேர்க்கப்படுகின்றன. அந்த வகையில் நீங்கள் பயன்படுத்தும் அல்லது புதிதாக வாங்க இருக்கும் காரில் இ.எஸ்.சி. எனப்படும் எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிடி கண்ட்ரோல் சிஸ்டம் இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளுங்கள்.

    சில கார்களில் இந்த தொழில்நுட்பம் முன்னேறிய வகையில் உள்ளது. அதாவது வாகனம் கட்டுப்பாட்டை இழக்கும்போது அது இன்ஜின் செயல்பாட்டைக் குறைக்கும். மீண்டும் வாகனம் கட்டுக்குள் வந்தால் மட்டுமே அது செயல்பட அனுமதிக்கும். வாகனம் கட்டுப்பாடு இழந்து செல்வதைத் தடுக்க இ.எஸ்.சி. உதவும்.


    புகைப்படம் நன்றி: MBWorld

    அமெரிக்காவில் இத்தகைய தொழில்நுட்பம் பின்பற்றப்பட்ட பிறகு நெடுஞ்சாலைகளில் பெருமளவிலான விபத்துகள் குறைந்துவிட்டதாக அந்நாட்டின் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகம் மற்றும் தேசிய நெடுஞ்சாலை காப்பீடு அமைப்புகள் கூறியுள்ளன.

    மூன்றில் ஒரு பங்கு விபத்துகள் இதனால் குறைவதாக சுட்டிக்காட்டியுள்ளன. ஐரோப்பிய யூனியன் நாடுகளும் இதே கருத்தைத் தெரிவித்ததோடு மட்டுமில்லாமல் தங்கள் நாடுகளில் தயாராகும் கார்களில் இத்தகைய தொழில்நுட்பம் கட்டாயமாக இடம்பெற வேண்டும் என்ற உத்தரவையும் பிறப்பித்துள்ளன.

    1983-ம் ஆண்டு முதல் முதலில் கார்களில் ஆன்டி ஸ்கிட் எனும் தொழில்நுட்பத்தை டொயோடா நிறுவனம் அறிமுகம் செய்தது. இதையடுத்து 1987-ல் மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம் மற்றும் பி.எம்.டபிள்யூ. நிறுவனங்கள் டிராக்‌ஷன் கண்ட்ரோல் சிஸ்டத்தை தங்களது தயாரிப்புகளில் அறிமுகப்படுத்தின. ஆனால் இவை அனைத்துமே ஸ்டீரிங்குடன் தொடர்பு கொண்டவையாக இருக்கவில்லை.



    1990-ம் ஆண்டில் மிட்சுபிஷி நிறுவனம் முதல் முறையாக ஒருங்கிணைந்த கண்ட்ரோல் சிஸ்டத்தை அறிமுகம் செய்தது. இதற்கு டி.சி.எல். என பெயரிடப்பட்டது. இதன் மேம்பட்ட நுட்பமாக ஆக்டிவ் ஸ்கிட் அண்ட் டிராக்‌ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் (ஏ.எஸ்.டி.சி.) புழக்கத்திற்கு வந்தது.

    திருப்பத்தில் காரின் ஆக்ஸிலரேட்டரை டிரைவர் வேகமாக மிதித்தாலும், இதில் உள்ள சென்சார் (உணர் கருவி) காரின் வேகத்தைக் குறைத்துவிடும். ஆனால் படிப்படியாக இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியின் விளைவாக பி.எம்.டபிள்யூ. நிறுவனம் 1992-ம் ஆண்டில் புதிய நுட்பத்தைக் கண்டுபிடித்தது.

    1987-ம் ஆண்டிலிருந்து 1992-ம் ஆண்டு வரையான காலத்தில் இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி மற்றும் பயன்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு எலெக்ட்ரானிக் ஸ்டெபிலைசேஷன் கண்ட்ரோல் புரோகிராம் உருவாக்கப்பட்டது.

    Pic 3

    1995-ம் ஆண்டில் பி.எம்.டபிள்யூ., மெர்சிடஸ் பென்ஸ் மற்றும் டொயோடா ஆகிய நிறுவனங்கள் முதல் முறையாக தங்கள் வாகனங்களில் இ.எஸ்.சி. எனப்படும் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்தன. 2010-ம் ஆண்டுக்குப் பிறகு அனேகமாக அனைத்து கார் தயாரிப்பு நிறுவனங்களும் இந்த தொழில்நுட்பத்தை தங்களது கார்களில் வைக்கத் தொடங்கின.

    பொதுவாக கார் ஓடும்போது பின் சக்கரங்கள் சரியாக இயங்குகின்றனவா என்பதை இது கண்காணிக்கும். காரின் பாதை மாறாமல் இருக்கிறதா என்பதை இது தொடர்ந்து கண்காணிக்கும். ஸ்டீரிங் கட்டுப்பாடு இழக்கும் போது தான் இ.எஸ்.சி. செயல்பட தொடங்கும். உடனடியாக வாகனத்தின் வேகத்தைக் குறைத்து இன்ஜின் செயல்பாட்டை நிறுத்தும்.

    கார் கட்டுப்பாட்டை இழக்கிறது என்பதை டிரைவர் உணர்வதற்கு முன்பாகவே இ.எஸ்.சி. உணர்ந்துவிடும். எத்தகைய தளத்திலும் அதாவது வழுக்கும் தரையாக இருந்தாலும் சரி இது செயல்படும். #Car
    ஆப்பிள் கார் பிளேயில் கூகுள் மேப்ஸ் பயன்படுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் நிலையில், இதனை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம். #GoogleMaps



    ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ள ஐ.ஓ.எஸ். 12 இயங்குதளத்தில் இனி கூகுள் மேப் மற்றும் கார் பிளேயின் பிரதான ஆப்பிள் மேப் ஆகிய வசதிகள் கிடைக்கின்றன. பொதுவாக ஆப்பிள் ஸ்மார்ட்போனின் ஐ.ஓ.எஸ். இயங்குதளம் மற்ற செயலிகளை அதாவது கூகுள் மேப்ஸ் போன்றவற்றை அனுமதிப்பதில்லை. 

    இதனால் ஆப்பிள் ஐ-போன் மூலம் கார் செயல்பாடுகளை மேற்கொள்வோர் பெரும் பிரச்சினையை எதிர்கொண்டு வந்தனர். ஆனால் இப்போது அப்பிரச்சினை தீர்க்கப்பட்டுவிட்டது. தற்போதைய ஐ.ஓ.எஸ். இயங்குதளம் மூலம் கூகுள் மேப்ஸ் மட்டுமின்றி வேஸ் (Waze), ஹியர் (Here) உள்ளிட்ட செயலிகளையும் இணைக்க முடியும்.

    ஆப்பிள் கார்பிளே சிஸ்டமானது பெரும்பாலான கார்களில் அதாவது மாருதி சுஸுகி ஸ்விப்ட், ஹூண்டாய் கிராண்ட் ஐ10, ஹோண்டா ஜாஸ் மற்றும் எஸ்.யு.வி. ரகங்களான டாடா நெக்சான், ஹூன்டாய் கிரெட்டா, ஜீப் கம்பாஸ் கார்களிலும் சொகுசு மாடல்களான பி.எம்.டபுள்யூ. 3 சீரிஸ், மெர்சிடஸ் பென்ஸ் இ-கிளாஸ், ஜாகுவார் எக்ஸ்.இ. மாடல்களிலும் பயன்படுத்தப்படுகிறது. 

    பொதுவாக கார்களில் ஆப்பிள் கார்பிளே பொழுது போக்கு அம்சம் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்பது எழுதப்படாத சட்டமாக உள்ளது. அந்த வகையில் ஆப்பிள் கார் பிளேயில் கூகுள் மேப்ஸ் பயன்படுத்துவது எப்படி என தொடர்ந்து பார்ப்போம்..


    புகைப்படம் நன்றி: 9To5Mac

    முதலில் உங்களது ஐபோனில் ஐ.ஓ.எஸ். 12 இயங்குதளம் கொண்டிருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். பின் கூகுள் மேப்ஸ் 5.0 அல்லது அதற்கும் அதிக வெர்ஷன் இருக்க வேண்டும்.

    செட்டிங்ஸ் ஆப்ஷனில் ஜெனரல் மற்றும் கார்பிளே ஆப்ஷன்களை கிளிக் செய்ய வேண்டும்.

    இனி உங்களது வாகனத்தை தேர்வு செய்து, செயலிகளின் இரண்டாவது பக்கத்திற்கு செல்ல வேண்டும்.

    அடுத்து கூகுள் மேப்ஸ் ஆப்ஷனை கிளிக் செய்து ஹோம் ஸ்கிரீன் செல்ல வேண்டும்.

    உங்களது வாகனத்தை தேர்வு செய்ததும், ஆப்பிள் மேப்ஸ்-ஐ இரண்டாவது பக்கத்தில் வைக்க வேண்டும். இனி கூகுள் மேப்ஸ் ஆப்ஷனை கிளிக் செய்து ஹோம் ஸ்கிரீனில் ஸ்லைடு செய்ய வேண்டும். கார் பிளேயில் வேஸ் நேவிகேஷன் ஆப்ஷனில் காண்பிக்கிறது.
    கார் பயன்படுத்துவோர் அதனை எப்போதும் புதிது போன்று ஜெலிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.
    கார் வாங்க வேண்டும் என்பது பலரது விருப்பமாக உள்ளது. கார் வாங்கிய பிறகு அதை சிலர் சரியாக பராமரிப்பதுண்டு. சிலர் பராமரிப்பில் ஆர்வம் இல்லாமல் இருப்பார்கள்.

    ‘கார் வாங்கி ஓராண்டு ஆகிறது’ என்று கூறினாலும் நம்புவதற்கே கடினமாக இருக்கும் அளவுக்கு புத்தம் புதிய கார் போல பராமரிப்பவர்களும் உள்ளனர். அதுபோல, ‘கார் வாங்கி 6 மாதம்தான் ஆகிறதா?, பார்த்தால் 6 ஆண்டுகள் பழைய கார் போல இருக்கிறதே’ என்று நமக்கு ஷாக் கொடுப்பவர்களும் உண்டு.

    காரை வெறும் இயந்திரம்தானே என்று பார்ப்பவர்கள் இரண்டாவது ரகத்தினர். அவர்கள் பயணிக்க ஒரு வாகனம் என்ற அளவில்தான் அவர்களது எண்ணமும் செயலும் இருக்கும். கார் மீது சிறு கீறல் விழுந்தால் கூட துடித்துப் போகும் அளவுக்கு கார் காதலர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்கள் காரைப் பராமரிக்கும் அழகே தனி.

    சரி, நம்மால் பராமரிக்க முடியவில்லை, காரை பார்க்க பளபளவென வைத்திருந்தால்தானே மதிப்பு என்று நினைப்பவர்களுக்கு உதவ பல கார் பராமரிப்பு நிறுவனங்கள் வந்துள்ளன.

    பொதுவாக கார்களை வாங்கிய பின் அதற்கு வாட்டர் வாஷ் மற்றும் இயந்திரங்களில் பழுது நீக்குதல் போன்ற தேவைகளுக்காக விற்பனைக்கு பிந்தைய சேவை மையங்களில் காரை விடுபவர்கள்தான் ஏராளம். ஆனால் கார் பராமரிப்பு மையங்கள் என்பவை காருக்கு புது பொலிவு தருபவை. இவை பெரும்பாலும் காரின் வெளிப்புறத் தோற்றத்தை ஜொலிக்கச் செய்பவை.



    பொதுவாக விலை உயர்ந்த மாடல் கார்களை வைத்திருப்பவர்கள்தான், தங்கள் கார் எப்போதும் புதிது போல பளபளப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக பாலிஷ் செய்து கொள்வது வழக்கம். ஆனால் இப்போது சிறிய ரகக் கார்கள் வைத்திருப்பவர்களும் தங்கள் காருக்கும் பாலிஷ் போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர்.

    கார் எப்போதும் புதிது போன்று ஜொலிக்க, அதனை அவ்வப்போது சரியாக சுத்தம் செய்ய வேண்டும். வெளிப்புறங்களில் சுத்தம் செய்ய ஷாம்பு பயன்படுத்தலாம்.

    மெழுகு மற்றும் பாலிஷ் செய்யும் போது, சரியானதை தேர்வு செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது சில வகை பெயின்ட்கள் அனைத்து பாலிஷ் மற்றும் மெழுகு போன்றவற்றுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. இதனால் காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் பெயின்ட் வகையை அறிந்து கொண்டு அதற்கு ஏற்ற பாலிஷ் அல்லது மெழுகு பயன்படுத்தலாம்.

    சமீபத்தில் காருக்கு பெயின்ட் அடித்திருந்தாலோ அல்லது புதிய கார் வாங்கியிருந்தாலோ பெயின்ட் கன்டிஷனர் பயன்படுத்தலாம். கன்டிஷனர் பயன்படுத்தும் போது அதனுடன் வழங்கப்படும் வழிமுறைகளை சரியாக பின்பற்றுவது அவசியமாகும்.

    காரின் வெளிப்புறத்தில் பாலிஷ் மற்றும் வேக்சிங் செய்வது சிறப்பான தோற்றத்தை வழங்கினாலும், அவற்றை நீண்ட காலத்திற்கு பாதுகாக்க அன்டர்கோட்டிங் அல்லது ரஸ்ட்-ப்ரூஃபிங் செய்ய வேண்டியது அவிசயம் ஆகும். இவ்வாறு செய்யும் போது காரில் துரு பிடிக்காது.
    ×