search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கார்கள் எப்போதும் புதுசு போல ஜொலிக்க...
    X

    கார்கள் எப்போதும் புதுசு போல ஜொலிக்க...

    கார் பயன்படுத்துவோர் அதனை எப்போதும் புதிது போன்று ஜெலிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.
    கார் வாங்க வேண்டும் என்பது பலரது விருப்பமாக உள்ளது. கார் வாங்கிய பிறகு அதை சிலர் சரியாக பராமரிப்பதுண்டு. சிலர் பராமரிப்பில் ஆர்வம் இல்லாமல் இருப்பார்கள்.

    ‘கார் வாங்கி ஓராண்டு ஆகிறது’ என்று கூறினாலும் நம்புவதற்கே கடினமாக இருக்கும் அளவுக்கு புத்தம் புதிய கார் போல பராமரிப்பவர்களும் உள்ளனர். அதுபோல, ‘கார் வாங்கி 6 மாதம்தான் ஆகிறதா?, பார்த்தால் 6 ஆண்டுகள் பழைய கார் போல இருக்கிறதே’ என்று நமக்கு ஷாக் கொடுப்பவர்களும் உண்டு.

    காரை வெறும் இயந்திரம்தானே என்று பார்ப்பவர்கள் இரண்டாவது ரகத்தினர். அவர்கள் பயணிக்க ஒரு வாகனம் என்ற அளவில்தான் அவர்களது எண்ணமும் செயலும் இருக்கும். கார் மீது சிறு கீறல் விழுந்தால் கூட துடித்துப் போகும் அளவுக்கு கார் காதலர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்கள் காரைப் பராமரிக்கும் அழகே தனி.

    சரி, நம்மால் பராமரிக்க முடியவில்லை, காரை பார்க்க பளபளவென வைத்திருந்தால்தானே மதிப்பு என்று நினைப்பவர்களுக்கு உதவ பல கார் பராமரிப்பு நிறுவனங்கள் வந்துள்ளன.

    பொதுவாக கார்களை வாங்கிய பின் அதற்கு வாட்டர் வாஷ் மற்றும் இயந்திரங்களில் பழுது நீக்குதல் போன்ற தேவைகளுக்காக விற்பனைக்கு பிந்தைய சேவை மையங்களில் காரை விடுபவர்கள்தான் ஏராளம். ஆனால் கார் பராமரிப்பு மையங்கள் என்பவை காருக்கு புது பொலிவு தருபவை. இவை பெரும்பாலும் காரின் வெளிப்புறத் தோற்றத்தை ஜொலிக்கச் செய்பவை.



    பொதுவாக விலை உயர்ந்த மாடல் கார்களை வைத்திருப்பவர்கள்தான், தங்கள் கார் எப்போதும் புதிது போல பளபளப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக பாலிஷ் செய்து கொள்வது வழக்கம். ஆனால் இப்போது சிறிய ரகக் கார்கள் வைத்திருப்பவர்களும் தங்கள் காருக்கும் பாலிஷ் போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர்.

    கார் எப்போதும் புதிது போன்று ஜொலிக்க, அதனை அவ்வப்போது சரியாக சுத்தம் செய்ய வேண்டும். வெளிப்புறங்களில் சுத்தம் செய்ய ஷாம்பு பயன்படுத்தலாம்.

    மெழுகு மற்றும் பாலிஷ் செய்யும் போது, சரியானதை தேர்வு செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது சில வகை பெயின்ட்கள் அனைத்து பாலிஷ் மற்றும் மெழுகு போன்றவற்றுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. இதனால் காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் பெயின்ட் வகையை அறிந்து கொண்டு அதற்கு ஏற்ற பாலிஷ் அல்லது மெழுகு பயன்படுத்தலாம்.

    சமீபத்தில் காருக்கு பெயின்ட் அடித்திருந்தாலோ அல்லது புதிய கார் வாங்கியிருந்தாலோ பெயின்ட் கன்டிஷனர் பயன்படுத்தலாம். கன்டிஷனர் பயன்படுத்தும் போது அதனுடன் வழங்கப்படும் வழிமுறைகளை சரியாக பின்பற்றுவது அவசியமாகும்.

    காரின் வெளிப்புறத்தில் பாலிஷ் மற்றும் வேக்சிங் செய்வது சிறப்பான தோற்றத்தை வழங்கினாலும், அவற்றை நீண்ட காலத்திற்கு பாதுகாக்க அன்டர்கோட்டிங் அல்லது ரஸ்ட்-ப்ரூஃபிங் செய்ய வேண்டியது அவிசயம் ஆகும். இவ்வாறு செய்யும் போது காரில் துரு பிடிக்காது.
    Next Story
    ×