search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "army high officer arrest"

    வெளிநாட்டில் இருந்து மேற்கு வங்காளம் மாநிலம் வழியாக கடத்தி வரப்பட்ட 15 கிலோ கடத்தல் தங்கத்தை பங்கிட்டு கொண்ட ராணுவ உயரதிகாரி உள்பட 5 பேரை சி.பி.ஐ. கைது செய்தது. #LtColarrested #goldsmuggling
    கொல்கத்தா:

    நேபாளம், மியான்மர், வங்காளதேசம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து மேற்கு வங்காளம் மாநிலம் வழியாக பெருமளவிலான தங்கம் இந்தியாவுக்குள் கடத்தி வரப்படுகிறது.

    அவ்வகையில், பூட்டானில் இருந்து அலிபுர்டவுர் மாவட்ட எல்லை வழியாக கடந்த பத்தாம் தேதி கடத்தி வரப்பட்ட 15 கிலோ தங்க கட்டிகளை பறிமுதல் செய்த எல்லைப்பகுதி ராணுவ அதிகாரிகள் அதை கருவூலத்தில் ஒப்படைக்காமல் தங்களுக்குள் பங்கிட்டு கொண்டு, கடத்தல்காரர்களை தப்பிச் செல்ல விட்டனர்.  

    இதற்கு சில உள்ளூர் போலீசாரும் உடந்தையாக இருந்ததாக சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது.

    இதையடுத்து, ராணுவ உளவுப்பிரிவு படையை சேர்ந்த லெப்டினன்ட் கர்னல் பவன் பிரம்மா, ராணுவ கான்ஸ்டபிள்  தஷ்ரத் சிங், அலிபுர்டவுர் மாவட்ட போலீஸ் உயரதிகாரி அனிருத்தா தாக்குர், ஜைகாவுன் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சத்யேந்திரநாத் ராய் மற்றும்  ஹசிமாரா புறக்காவல் நிலைய சோதனைச்சாவடியை சேர்ந்த அதிகாரி கமலேந்திரா நாராயணன் ஆகியோரை சி.ஐ.டி. போலீசார் நேற்று கைது செய்தனர்.

    அவர்கள் அனைவரும் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி, விசாரணை காவலில் சிறையில் அடைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. #LtColarrested  #goldsmuggling
    ×