search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Anurag Kashyap"

    `ராவணன்' படத்திற்கு பிறகு சுமார் 8 வருடங்களுக்குப் பிறகு ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் இருவரும் ‘குளோப் ஜாமுன்’ என்ற படத்தின் மூலம் மீண்டும் இணைந்து நடிக்க இருக்கின்றனர். #AishwaryaRai #AbhishekBachchan
    மணிரத்னம் இயக்கத்தில் 2007–ல் தமிழ், இந்தியில் திரைக்கு வந்த ‘குரு’ படத்தில் ஐஸ்வர்யா ராயும் அபிஷேக் பச்சனும் ஜோடியாக நடித்து இருந்தனர். குரு படப்பிடிப்பில்தான் இருவருக்கும் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டார்கள். அதன்பிறகு மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் தமிழில் `ராவணன்' என்ற பெயரிலும் இந்தியில் `ராவண்' என்ற பெயரிலும் தயாரான படத்தில் இணைந்து நடித்தார்கள். இந்த படம் 2010–ல் வெளிவந்தது. 

    அதன்பிறகு இருவரும் ஜோடியாக நடிக்கவில்லை. 8 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது மீண்டும் இருவரும் ‘குளோப் ஜாமுன்’ என்ற புதிய படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். இந்த படத்தை அனுராக் காஷ்யப் இயக்குகிறார். படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது.

    இந்த படத்தில் நடிப்பது குறித்து ஐஸ்வர்யா ராய் கூறும்போது, ‘‘இயக்குனர் அனுராக் காஷ்யப் ஒரு வருடத்துக்கு முன்பே படத்தின் கதையை சொல்லிவிட்டார். மிகவும் பிடித்து இருந்தது. இப்போது அதில் நானும், அபிஷேக் பச்சனும் இணைந்து அந்த படத்தில் நடிக்கிறோம்’’ என்றார். 



    ஐஸ்வர்யா ராய் மற்ற நடிகர்களுடன் நெருக்கமாக நடிப்பது அபிஷேக் பச்சனுக்கு பிடிக்கவில்லை என்றும் இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு பிரிய முடிவு செய்துள்ளனர் என்றும் இந்தி பட உலகில் கிசுகிசு பரவிய நிலையில், இருவரும் சேர்ந்து நடிப்பதாக அறிவிப்பு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. #AishwaryaRai #AbhishekBachchan

    துருவங்கள் 16 படத்தின் வெற்றியை தொடர்ந்து நரகாசூரன் படத்தை இயக்கி இருக்கும் கார்த்திக் நரேனுக்கு பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார். #NaragaSooran
    'துருவங்கள் 16' படத்திற்குப் பிறகு கார்த்திக் நரேன் இயக்கியிருக்கும் படம் 'நரகாசூரன்'. அரவிந்த் சாமி, இந்ரஜித், சந்தீப் கிஷன், ஸ்ரேயா சரண், ஆத்மிகா ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். ரோன் ஈதன் யோகன் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில், படத்தை தணிக்கை குழுவிற்கு அனுப்பியுள்ளனர். படத்தை பார்த்த குழுவினர் யூ/ஏ சான்றிதழ் வழங்கினர். 

    இந்த செய்தியை படத்தின் புதிய போஸ்டருடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார் கார்த்திக் நரேன். இதற்கு பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப், "எப்போது படம் வெளியாகும்? உங்களுடைய 'துருவங்கள் 16' படத்திற்கு நான் பெரிய ரசிகன்" என பதிவு செய்திருந்தார். அதைப் பார்த்து உற்சாகமான கார்த்திக் நரேன், நன்றி தெரிவித்து "ஆகஸ்ட் மாதம் வெளியிட திட்டமிட்டிருக்கிறோம்" என பதிலளித்தார்.
    இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகியிருக்கும் அனுராக் காஷ்யப் தமிழில் ஜல்லிக்கட்டு படத்தை தயாரித்து வருகிறார். #Jallikattu
    இந்தியில் முக்கிய இயக்குனர் அனுராக் காஷ்யப். திரைக்கதையில் ஜாம்பவான் எனப்படும் அனுராக் நயன்தாராவின் `இமைக்கா நொடிகள்' படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். தமிழில் உருவாகும் ஒரு படத்துக்கு இணை தயாரிப்பாளராக இருந்து உருவாக்கி வருகிறார்.

    தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தன்னெழுச்சியாக நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்டம். உலக அளவில் பரபரப்பாக்கிய இந்த போராட்ட காட்சிகளை அப்படியே படம் பிடித்து போராட்டத்தின் பின்னணி, கலந்துகொண்டவர்கள் அதற்காக கூறும் காரணங்கள், உலக அளவில் நடந்த போராட்ட வடிவங்கள் ஆகியவையையும் சேர்த்து ஒரு படமாக மாற்றி இருக்கிறார்கள். முக்கியமாக ஒருவருக்கொருவர் தொடர்பில்லாத உலக தமிழர்கள் ஒன்றுபட்டு போராடியது எவ்வாறு என்பது இந்த படம் மூலம் தெரியவரும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் படத்தின் இயக்குனர் சந்தோஷ். உலக புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்திலும் கென்யா நாட்டில் உள்ள மசாய்மாரா பகுதியிலும் படம் பிடித்த முதல் தமிழ் படம் இதுதான்.



    மசாய்மாரா பகுதியில் உள்ள காளைகள் நமது பகுதி காளைகள் இனத்தை சேர்ந்தவை என்பதால் அங்கே சென்று படமாக்கி இருக்கிறார்கள். அகிம்சா புரடக்‌‌ஷன் சார்பில் அனுராக் காஷ்யப் மற்றும் நிருபமா இணை தயாரிப்பில் உருவாகி இருக்கிறது இந்த ஜல்லிக்கட்டு படம். #Jallikattu
    ×