search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Alwarthinagari"

    • தேசிய ஊட்டச்சத்து மாத விழா நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் நடைபெற்றது.
    • ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ஜனஹர் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.

    தென்திருப்பேரை:

    சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பாக ஆழ்வார்திருநகரி வட்டார குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகம் மூலம் தேசிய ஊட்டச்சத்து மாத விழா நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ஜனஹர் தலைமை தாங்கி மாணவ, மாணவிகளுக்கு பாரம்பரிய உணவு முறைகள் குறித்து விளக்கம் அளித்து சிறப்புரையாற்றினார்.

    குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் சுருதி, கல்லூரி முதல்வர் குளோரியம் அருள்ராஜ் ஆகியோர் வரவேற்று பேசினர். மாவட்ட திட்ட அலுவலர் சரஸ்வதி ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் குறித்துப் பேசினார்.

    டாக்டர் வீரேஷ் ரத்த சோகை விழிப்புணர்வு குறித்தும், வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் மாரியப்பன் பாதுகாப்பான உணவு முறைகள் குறித்தும், வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன் ஊட்டத்சத்து நடைமுறைகள் குறித்தும் பேசினர்.

    விழாவில் ஆழ்வார் திருநகரி அங்கன்வாடி பணியாளர்களின் உணவு கண்காட்சியும், மாணவர்க ளுக்கு சிறுதானிய உணவு வகையில் சமையல் போட்டி யும் மற்றும் ஊட்டச்சத்து தொடர்பான வினாடி, வினாவும் நடைபெற்றது.

    தூத்துக்குடி சமையல் கலை வல்லுநர் நித்தியா னந்தன் கலந்து கொண்டு வெற்றியாளர்களை தேர்வு செய்தார். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் ஜனஹர் பரிசு வழங்கினார்.

    கல்லூரி ஆங்கிலத் துறை பேராசிரியர் பியூலா ஹேமலதா நன்றி கூறினார்.

    விழாவில் மேற்பார்வை யாளர்கள் பார்வதி, பொன்இசக்கி, ஊட்டச் சத்து பணியாளர்கள் எக்கோலியா, செல்வன், சர வணக்குமார், ஆழ்வார்திரு நகரி வட்டார அங்கன்வாடி பணியாளர்கள், மர்காஷிஸ் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள், மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ஏற்பாடுகளை ஆழ்வார் திருநகரி குழந்தை வளர்ச்சித் திட்டப் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • ஆழ்வார்திருநகரி வட்டாரத்தில் நெற்பயிரில் பாக்டீரியா இலைகருகல் நோய் அதிகம் காணப்படுகிறது.
    • வயல் ஆய்வின்போது தென்திருப்பேரை, சுற்றுவட்டார விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    தென்திருப்பேரை:

    ஆழ்வார்திருநகரி வட்டாரத்தில் நெற்பயிரில் பாக்டீரியா இலைகருகல் நோய் அதிகம் காணப்படுகிறது. இந்த நோயை கட்டுப்படுத்த தென்திருப்பேரை சுற்றுவட்டார நெல் வயல் பகுதிகளில் வேளாண்மை அதிகாரிகள், வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் விவசாயிகள் கூட்டாய்வு செய்தனர்.

    வேளாண் துறை சார்பில் தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் முகைதீன், வேளாண் துணை இயக்குனர் பழனி வேலாயுதம், வேளாண்மை உதவி இயக்குனர்கள் அல்லிராணி, கண்ணன், வேளாண்மை அலுவலர்கள் திருச்செல்வன், கார்த்திகா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கிள்ளிக்குளம் வேளாண் கல்லூரி நோயியல் துறை உதவி பேராசிரியர் ரஜினி மாலா கலந்து கொண்டு இலைகருகல் நோயினை வயலாய்வு செய்து நோயை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். விவசாயிகள் இலைகருகல் நோய் தென்படும் போது ஒரு ஏக்கருக்கு காப்பர் ஹைட்ராக்சைடு 77 டபுள்யு.பி. 500 கிராம் என்ற அளவில் ஒட்டுப்பசை கலந்து தெளிக்கலாம்.மேலும் இம்மருந்தினை வேறு ஏதேனும் பூச்சிக்கொல்லிகள் மற்றும் உரங்களுடன் கலந்து தெளிக்க கூடாது என தெரிவித்தார். வயல் ஆய்வின்போது தென்திருப்பேரை, சுற்றுவட்டார விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலர் நீலகண்ட பிள்ளை, அட்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர் ஏசுதாசன், உதவி தொழில்நுட்ப மேலாளர் சூசை மாணிக்கம் ஆகியோர் செய்திருந்தனர்.


    ×