search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Agricultural officers"

    • ஆழ்வார்திருநகரி வட்டாரத்தில் நெற்பயிரில் பாக்டீரியா இலைகருகல் நோய் அதிகம் காணப்படுகிறது.
    • வயல் ஆய்வின்போது தென்திருப்பேரை, சுற்றுவட்டார விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    தென்திருப்பேரை:

    ஆழ்வார்திருநகரி வட்டாரத்தில் நெற்பயிரில் பாக்டீரியா இலைகருகல் நோய் அதிகம் காணப்படுகிறது. இந்த நோயை கட்டுப்படுத்த தென்திருப்பேரை சுற்றுவட்டார நெல் வயல் பகுதிகளில் வேளாண்மை அதிகாரிகள், வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் விவசாயிகள் கூட்டாய்வு செய்தனர்.

    வேளாண் துறை சார்பில் தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் முகைதீன், வேளாண் துணை இயக்குனர் பழனி வேலாயுதம், வேளாண்மை உதவி இயக்குனர்கள் அல்லிராணி, கண்ணன், வேளாண்மை அலுவலர்கள் திருச்செல்வன், கார்த்திகா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கிள்ளிக்குளம் வேளாண் கல்லூரி நோயியல் துறை உதவி பேராசிரியர் ரஜினி மாலா கலந்து கொண்டு இலைகருகல் நோயினை வயலாய்வு செய்து நோயை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். விவசாயிகள் இலைகருகல் நோய் தென்படும் போது ஒரு ஏக்கருக்கு காப்பர் ஹைட்ராக்சைடு 77 டபுள்யு.பி. 500 கிராம் என்ற அளவில் ஒட்டுப்பசை கலந்து தெளிக்கலாம்.மேலும் இம்மருந்தினை வேறு ஏதேனும் பூச்சிக்கொல்லிகள் மற்றும் உரங்களுடன் கலந்து தெளிக்க கூடாது என தெரிவித்தார். வயல் ஆய்வின்போது தென்திருப்பேரை, சுற்றுவட்டார விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலர் நீலகண்ட பிள்ளை, அட்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர் ஏசுதாசன், உதவி தொழில்நுட்ப மேலாளர் சூசை மாணிக்கம் ஆகியோர் செய்திருந்தனர்.


    ×