என் மலர்
நீங்கள் தேடியது "ADMK"
- தணிக்கை விவகாரம் தொடர்பாக இதுவரை நடிகரும், தவெக தலைவருமான விஜய்யே வாய்திறக்கவில்லை.
- மாபெரும் தலைவர் மோடி.
விஜய்யின் ஜனநாயகன் பட தணிக்கை சான்றிதழ் விவகாரம், சினிமாவைத்தாண்டி அரசியலில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. அரசியல் உள்நோக்கத்திற்காகத்தான் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்காமல் இழுத்தடிக்கப்படுகிறது என பலதரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை நடிகரும், தவெக தலைவருமான விஜய்யே வாய்திறக்கவில்லை. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவிடம், கரூர் விவகாரம் தொடர்பான சிபிஐ சம்மன், தற்போது தணிக்கை சான்றிதழ் இழுபறி இவையெல்லாம் விஜய்யை கூட்டணிக்குள் கொண்டுவருவதற்காக கொடுக்கப்படும் நெருக்கடிகளா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர்,
"எந்த நெருக்கடியும் கொடுக்கப்படவில்லை. அப்படி பார்த்தால் கட்சி ஆரம்பித்திருக்கிறார்; வேறு வழிகளில் நெருக்கடி கொடுக்கலாம். ஒரு படத்தை தடைசெய்வதால் நெருக்கடி கொடுத்துவிட முடியுமா? இதற்கெல்லாம் அரசியல் சாயம் பூசினால்?. மாபெரும் தலைவர் மோடி. கூட்டணிக்குள் யாரையும் வற்புறுத்தி சேர்க்கமுடியாது. மனமுவந்து வரவேண்டும். தொண்டர்கள், தலைவர்கள் விரும்பி இணைந்து வந்தால்தான் கூட்டணி. கூட்டணிக்காக இப்படி செய்வார்கள் என கொச்சைப்படுத்தக்கூடாது." என தெரிவித்துள்ளார்.
- ஜனநாயகன் விவகாரத்தில் அரசியல் சாயம் பூசப்படுகிறது.
- அ.தி.மு.க. பலமிழக்கவில்லை. தி.மு.க. தான் பலமிழந்து இருக்கிறது.
மதுரை:
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மதுரை கூடல் நகர் பகுதியில் கால்வாய் பாலம் மற்றும் கரிசல் குளம் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையத்தின் இரண்டாம் தளத்தை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இதன்பின் அவர் பேசியதாவது:-
தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று, கடந்த நான்கரை ஆண்டுகளாக ஆமை வேகத்தில் மதுரையில் முல்லைப் பெரியாறு குடிநீர் திட்டப்பணி நடைபெற்று திறந்து வைக்கப்பட்டதால், இணைப்புகள் சரியாக கொடுக்கப்படாமல் ஆங்காங்கே குடிநீர்க் குழாய்கள் அழுத்தம் தாங்காமல் வெடித்து சிதறுகிறது.
முதலமைச்சர் பயத்தில் ஏதேதோ பேசுகிறார். அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், பா.ஜ.க. தனது கட்டுப்பாட்டில் ஆட்சியை நடத்தும் என கூறுகிறார். போதைக் கலாச்சாரம் தமிழகத்தில் தலை விரித்தாடுகிறது. சட்டம் ஒழுங்கு மோசமாக இருக்கிறது. பள்ளி, கல்லூரிகள் அருகே போதைப் பொருட்கள் விற்கப்படுகிறது. இப்படி அவர்கள் கூட்டணியில் உள்ள வைகோவே சொல்லி இருக்கிறார்.
அ.தி.மு.க. கூட்டணிக்கு வரக்கூடிய கட்சிகள் குறித்து, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் முடிவு செய்கிறார். மக்கள் இந்த ஆட்சியை அகற்ற ஆர்வமோடு இருக்கிறார்கள்.
125 நாட்களாக வேலை உறுதி திட்டத்தை உயர்த்திக் கொடுத்த அமித்ஷாவிற்கு நன்றி சொல்லத்தான் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமித்ஷாவை டெல்லியில் சந்தித்தார். விஜய் கட்சி நடத்துவதற்கு எத்தனையோ விதத்தில் நெருக்கடி கொடுக்கலாம். அதை விட்டு விட்டு ஜனநாயகன் படம் வெளியிடுவதற்கு நெருக்கடி என்பது தவறு. ஜனநாயகன் விவகாரத்தில் அரசியல் சாயம் பூசப்படுகிறது.
கூட்டணிப் பலத்தில் தான் தி.மு.க. இருக்கிறது. எங்கள் அம்மா போன்று யாருடைய கூட்டணியையும் எதிர்பாராமல் தனித்துப் போட்டி போட மு.க.ஸ்டாலின் தயாரா?
ரூ. 3 ஆயிரம் கொடுத்தாலும் சரி. கொள்ளை அடித்த 4 லட்சம் கோடி ரூபாயை தேர்தலுக்காக இறக்கினாலும் தி.மு.க. வெற்றிப் பெற முடியாது.
அ.தி.மு.க. பலமிழக்கவில்லை. தி.மு.க. தான் பலமிழந்து இருக்கிறது. முருகப் பெருமானுக்கு சக்தி அதிகம். அதனால் தான் திருப்பரங்குன்றம் அருகே முதலமைச்சர் கார் டயர் பஞ்சராகிப் போனதோ? திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பை அரசு மதிக்க வேண்டும்.
அமித்ஷா மாபெரும் தலைவர். விஜய் கட்சி மற்றும் அவரது படத்திற்கு நெருக்கடி கொடுப்பது போன்ற வேலை எல்லாம் அவர் செய்ய மாட்டார் என்றார்.
- கரூரில் 41 பேர் உயிரிழந்த நேரத்தில் விஜய் அங்கு இருந்ததால் தான் விசாரிக்க சி.பி.ஐ. அழைத்துள்ளது.
- தமிழகத்தை பொருத்தமட்டில் தனி கட்சியின் பெரும்பான்மை ஆட்சி தான் நடைபெறும்.
விருதுநகர்:
விருதுநகர் அருகே புல்லலக்கோட்டை கிராமத்தில் அ.தி.மு.க. மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார்.
வருகிற சட்டமன்ற தேர்தலில் வலுவான கூட்டணியை அமைத்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பொறுப்பேற்பார். அ.தி.மு.க.வில் நிர்வாகத்தில் உள்ளவர்கள், மக்களோடு செயலாற்றி வரும் நிர்வாகிகள் யாரும் வேறு கட்சிக்கு செல்ல மாட்டார்கள். கேப்டன் விஜயகாந்த் முடிவை பின்பற்றி தே.மு.தி.க. அ.தி.மு.க. பக்கம் தான் வருவார்கள். தான் இருக்கும் வரை தி.மு.க.வை எதிர்த்தவர் விஜயகாந்த். பிரேமலதா தனது கணவரின் கொள்கைக்கு எதிராகவோ தனது இயக்கத்தை நிறுவிய விஜயகாந்த் எண்ணங்களுக்கு எதிராகவோ செல்ல மாட்டார்.
கரூரில் 41 பேர் உயிரிழந்த நேரத்தில் விஜய் அங்கு இருந்ததால் தான் விசாரிக்க சி.பி.ஐ. அழைத்துள்ளது.
தி.மு.க.வுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் கருத்து மோதல் உள்ளது. ஆட்சியில் அதிகாரம் வேண்டும் என்று மாணிக்கம் தாகூர் எம்.பி. பகிரங்கமாக குரல் கொடுத்துள்ளார்.
தி.மு.க. கூட்டணி பிளவு ஏற்படும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தமிழகத்தை பொருத்தமட்டில் தனி கட்சியின் பெரும்பான்மை ஆட்சி தான் நடைபெறும். அதைத்தான் பொதுமக்கள் விரும்புவார்கள். அ.தி.மு.க. தனித்து ஆட்சி அமைக்கும். அதற்கான நடவடிக்கைகளில் எடப்பாடியார் இறங்குவார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- தமிழக அரசு அறிவித்துள்ள ஓய்வூதிய திட்டம் என்பது ஏமாற்று வேலை.
- திமுக ஆட்சியில் 5 ஆண்டுகளில் 5.5 லட்சம் கோடி கடன் அதிகரித்துள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடனான சந்திப்பு குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
* அமித்ஷாவை சந்தித்து தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்து பேசினேன்.
* தமிழகத்தில் தி.மு.க.வை வீழ்த்த வேண்டும் என்பதற்காக வலுவாக கூட்டணி அமைத்துள்ளோம்.
* தி.மு.க. வை வீழ்த்தி 2026-ல் அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும்.
* தமிழக அரசு அறிவித்துள்ள புதிய பென்சன் திட்டத்தில் அரசு ஊழியர்களின் பங்களிப்பு உள்ளது.
* மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை மாற்றி அமல்படுத்துகின்றனர்.
* தமிழக அரசு அறிவித்துள்ள ஓய்வூதிய திட்டம் என்பது ஏமாற்று வேலை.
* பழைய ஓய்வூதிய திட்டத்தில் அரசு ஊழியர்களின் பங்களிப்பு கிடையாது.
* திமுக ஆட்சியில் தமிழகத்தின் கடன் பல மடங்கு அதிகரித்து விட்டது.
* திமுக ஆட்சியில் 5 ஆண்டுகளில் 5.5 லட்சம் கோடி கடன் அதிகரித்துள்ளது.
* அதிமுகவில் மீண்டும் சசிகலாவை இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை.
* ஓ.பன்னீர்செல்வத்தையும் அதிமுகவில் இணைக்கும் பேச்சிற்கு இடமில்லை.
* சசிகலா, ஓபிஎஸ் இல்லாமலே அதிமுக வலுவாக உள்ளது.
* அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் பாஜக ஒரு போதும் தலையிடாது.
* அனைத்து கட்சிகளும் கூட்டணியில் இணைந்த பின்னர் தொகுதி பங்கீடு குறித்து அறிவிக்கப்படும்.
* தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்தால் அதிமுக தலைமையில் தான் ஆட்சி.
* தமிழகத்தில் கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை என்பதில் மாற்றமில்லை.
* யாருடன் பேச்சுவார்த்தை என்ற கேள்விகளுக்கு தற்போது பதிலளிக்க முடியாது.
* பேச்சுவார்த்தை முடிந்து ஒப்பந்தம் ஏற்பட்டதும் முறையாக அறிவிக்கப்படும் என்றார்.
- அஇஅதிமுக- பாமக கூட்டணி, தமிழக மக்களின் எண்ணங்களை அறிந்து செயல்படும் கூட்டணி!
- நானும், மருத்துவர் அன்புமணி அவர்களும் சந்தித்து நம் வெற்றிக் கூட்டணிக்கான அச்சாரமிட்டோம்!
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் கட்சி நிர்வாகிகள் வருகை தந்தனர். இதன்பின், எடப்பாடி பழனிசாமி- அன்புமணி இடையே நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பான கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்நிலையில், அதிமுக - பாமக கூட்டணி குறித்து எடப்பாடி பழனிச்சாமி தந்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் - பாரதிய ஜனதா வெற்றிக் கூட்டணியில் இணைந்துள்ள பாட்டாளி மக்கள் கட்சியை மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம்.
அஇஅதிமுக- பாமக இயற்கையான கூட்டணி; தமிழக மக்களின் எண்ணங்களை அறிந்து செயல்படும் கூட்டணி!
அந்த அடிப்படையில், இன்றைய தினம், நானும், மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களும் சந்தித்து நம் வெற்றிக் கூட்டணிக்கான அச்சாரமிட்டோம்!
மக்கள் விரோத விடியா திமுக ஆட்சியை அகற்றி, தமிழக மக்களின் ஒருமித்த எண்ணப்படி 2026ல் அஇஅதிமுகநல்லாட்சியினை அமைப்போம்!" என்று தெரிவித்துள்ளார்.
- மேலும் சில கட்சிகள் கூட்டணியில் இணைவார்கள் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
- கூட்டணிக் கட்சி தலைவர்களை ஒரே மேடையில் ஏற்றி உரையாற்ற உள்ளதாகவும் கூறப்படுகிறது.
சென்னை:
தமிழக சட்டசபைக்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, இன்று காலை அ.தி.மு.க- பா.ம.க. இடையே கூட்டணி உறுதியாகி உள்ளது. மேலும் பா.ம.க. ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்து பின்னர் தெரிவிக்கப்படும் என்றும் மேலும் சில கட்சிகள் கூட்டணியில் இணைவார்கள் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
இந்த நிலையில், பிரதமர் மோடி வருகிற 28-ந்தேதி தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கன்னியாகுமரியில் நடைபெற உள்ள தாமரை மகளிர் மாநாட்டில் பிரதமர் பங்கேற்க உள்ளதாகவும், கூட்டணிக் கட்சி தலைவர்களை ஒரே மேடையில் ஏற்றி உரையாற்ற உள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதனை தொடர்ந்து கூட்டணியை உறுதி செய்யும் பணிதீவிரமாக நடைபெற்று வருகிறது. பிரதமர் வருகைக்குள் கூட்டணி பேச்சுவார்த்தையை முடிக்க பா.ஜ.க. தீவிர பணியாற்றி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சட்டசபை தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், இன்று அதிமுக- பாமக கூட்டணி உறுதியாகி உள்ளதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது.
- மாறிமாறி ஊழல் குற்றச்சாட்டுகளை கூறுவது வழக்கமான வேடிக்கை தான்.
- அதிமுக- பாமக கூட்டணி என்பது எதிர்பார்த்த ஒன்றுதான்.
ஈரோடு:
கடந்த ஆண்டு நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நடத்தை விதிகளை மீறியதாக சீமான் மீது 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கின் விசாரணைக்காக சீமான் இன்று ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைக்கு பிறகு இவ்வழக்கு தொடர்பாக மார்ச் மாதம் 9-ந்தேதி சீமான் மீண்டும் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன்பின், நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த சீமான், அதிமுக- பாமக கூட்டணி என்பது எதிர்பார்த்த ஒன்றுதான் என்று கூறினார். செய்தியாளர்கள் சந்திப்பில் சீமான் மேலும் கூறியதாவது:-
* திமுக- அதிமுக மாறிமாறி ஊழல் குற்றச்சாட்டுகளை வைத்து கொடுந்துயரம்.
* மாறிமாறி ஊழல் குற்றச்சாட்டுகளை கூறுவது வழக்கமான வேடிக்கை தான்.
* அதிமுக- பாமக கூட்டணி என்பது எதிர்பார்த்த ஒன்றுதான்.
* கடந்த முறை பொங்கல் கொண்டாடிய போது ஏன் ரூ.3000 கொடுக்கவில்லை என கேள்வி எழுப்பினார்.
- அதிகாரத்தில் பங்கு வேண்டும் என சொல்வது நியாயமானது தான்.
- எங்களை பொறுத்தவரை தி.மு.க. எங்களுக்கு சிறந்த தோழமை கட்சி.
திருவாரூர்:
திருவாரூரில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
திருப்பரங்குன்றத்தில் கடந்த 100 ஆண்டுகளாக தீபம் ஏற்றப்படாத ஒரு கல் தூணில், இந்த ஆண்டு தீபம் ஏற்ற வேண்டும் என ஒரு தரப்பினர் கூறுவதை தேர்தலுக்காக சொல்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அவர்களுடைய தெய்வபக்தியும், மத உணர்வும் அவ்வளவு தான். இந்த விவகாரத்தில் தமிழக அரசு அரசியல் செய்யவில்லை. தீபம் ஏற்ற வேண்டும் என்று சொல்பவர்களுக்கு அரசியல் உள்நோக்கம் உள்ளது.
ஒவ்வொரு அரசியல் கட்சியும் வளர வேண்டும். அதிகாரத்தில் பங்கு வேண்டும் என சொல்வது நியாயமானது தான். இதை காங்கிரஸ் கட்சி மட்டும் சொல்லவில்லை. வைகோ, திருமாவளவன் மற்றும் கம்யூனிஸ்டுகளும் அதிக தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.
எங்களை பொறுத்தவரை தி.மு.க. எங்களுக்கு சிறந்த தோழமை கட்சி. நாங்கள் அவர்களிடம் பேரம் பேச தேவையில்லை. சிறந்த ஆட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி வருகிறார்.
காங்கிரஸ் தொண்டர்கள் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என விரும்புகிறார்கள். நாங்கள் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். அ.தி.மு.க. விளிம்பு நிலைக்கு சென்று விட்டது. தமிழகத்தின் உரிமையை பற்றி அவர்களால் பேச முடியவில்லை. அமித்ஷா என்.டி.ஏ. கூட்டணி ஆட்சி அமைக்கும் என்கின்றார்.
ஆனால் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. தலைமையிலான ஆட்சி அமையும் என்கிறார். கூட்டணியை பொறுத்தவரை எங்களை போன்ற தெளிவு அவர்களிடம் இல்லை என்றார்.
- தி.மு.க. அரசை தூக்கி எறிந்து அ.தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.
- டெல்லியில் எடப்பாடி பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ.க.வின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலை சந்திக்கிறார்.
சென்னையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று சந்தித்து பேசினார்.
இதையடுத்து எடப்பாடி பழனிசாமி- அன்புமணி இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பான கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதன்பின் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து கூட்டணியை உறுதி செய்தனர். அப்போது, இயற்கையாக அமைந்த கூட்டணி அ.தி.மு.க. - பா.ம.க. கூட்டணி. தி.மு.க. அரசை தூக்கி எறிந்து அ.தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். எங்களது கூட்டணி வெற்றிக்கூட்டணி என்று தெரிவித்தனர்.
அ.தி.மு.க. - பா.ம.க. கூட்டணி உறுதியானதை தொடர்ந்து இன்று மாலை எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்கிறார்.
டெல்லியில் எடப்பாடி பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ.க.வின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலை சந்திக்கிறார். தொகுதி பங்கீடு விவகாரங்கள் குறித்து அவர் பேச உள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழ்நாட்டுக்கு வந்திருந்தபோது எடப்பாடி பழனிசாமி சந்திக்கவில்லை. திருச்சியில் அமித் ஷாவை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மட்டும் சந்தித்தார்.
- பாமக தொண்டர்கள் எதிர்பார்த்த கூட்டணி அமைந்துள்ளது.
- மக்கள் விரோத திமுக கூட்டணியை அகற்றுவதற்காக அதிமுகவுடன் கைகோர்த்துள்ளோம்.
சென்னை:
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் கட்சி நிர்வாகிகள் வருகை தந்தனர். இதன்பின், எடப்பாடி பழனிசாமி- அன்புமணி இடையே நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பான கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்பின், இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது முதலில் பேசிய எடப்பாடி பழனிசாமி,
* அதிமுக கூட்டணியில் அன்புமணி தலைமையிலான பாமக இணைந்துள்ளது.
* மேலும் சில கட்சிகள் எங்கள் கூட்டணியில் இணைவார்கள்.
* இயற்கையாக அமைந்த கூட்டணி அதிமுக-பாமக கூட்டணி.
* திமுக அரசை தூக்கி எறிந்து அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.
* எங்களது கூட்டணி வெற்றிக்கூட்டணி என்றார்.
இதன்பின்னர் பேசிய அன்புமணி,
* பாமக தொண்டர்கள் எதிர்பார்த்த கூட்டணி அமைந்துள்ளது.
* மக்கள் விரோத திமுக கூட்டணியை அகற்றுவதற்காக அதிமுகவுடன் கைகோர்த்துள்ளோம்.
* வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக பெருவாரியான தொகுதிகளில் வென்று ஆட்சி அமைக்கும் என்றார்.
- அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்திக்கிறார்.
- கடந்த 2021 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இடம் பெற்றிருந்தது.
சட்டசபை தேர்தல் கூட்டணி தொடர்பாக அ.தி.மு.க. - பா.ம.க. இடையே ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்திக்கிறார்.
அ.தி.மு.க. உடனான கூட்டணியில் பா.ம.க.வுக்கு எத்தனை தொகுதிகள் என்ற விவரமும் இன்றே தெரிய வரும் என தகவல் வெளியாகி உள்ளது.
அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 30 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2021 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இடம் பெற்றிருந்தது. பா.ம.க. இரண்டாக பிளவுபட்டுள்ள நிலையில் அன்புமணி தரப்பு அ.தி.மு.க.வுடன் கைகோர்க்கிறது.
ராமதாஸ் தரப்பு யாருடன் கூட்டணி வைக்கிறது என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.
- எடப்பாடி பழனிசாமி உடன் முன்னாள் அமைச்சர்களும் ஆளுநரை சந்தித்தனர்.
- தமிழக சட்டசபை வருகிற 20-ந்தேதி கூட உள்ள நிலையில் ஆளுநருடனான எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை அ.திமு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் சந்திப்பானது நடைபெற்று வருகிறது. எடப்பாடி பழனிசாமி உடன் முன்னாள் அமைச்சர்களும் ஆளுநரை சந்தித்தனர்.
தமிழக அமைச்சரவை கூட்டம் மற்றும் தமிழக சட்டசபை வருகிற 20-ந்தேதி கூட உள்ள நிலையில் ஆளுநருடனான எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.






