என் மலர்
நீங்கள் தேடியது "ADMK"
- செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விஜயின் மனைவி சங்கீதா இன்று புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
- தி.மு.க. கூட்டணி ஒரு மூழ்கும் கப்பல்.
சேலம்:
நடிகரும், தமிழக வெற்றிக்கழகத் தலைவருமான விஜயிடம் இருந்து விவாகரத்து வழங்கக்கோரி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விஜயின் மனைவி சங்கீதா மனு தாக்கல் செய்து இருந்தார். இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் நடைபெற்ற திருமண விழாவில் விஜய்- திரிஷா பங்கேற்றது பேசு பொருளாகி உள்ளது.
இதனிடையே, தன்னை நீலாங்கரை வீட்டிற்குள் அனுமதிக்குமாறு விஜய்க்கு உத்தரவிடக்கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விஜயின் மனைவி சங்கீதா இன்று புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார். இதுதொடர்பாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் விஜய்- சங்கீதா விவகாரத்து தொடர்பாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுகையில்,
* விவாகரத்து விவகாரத்தில் விஜய் இமேஜை தி.மு.க. கெடுக்க பார்க்கிறது.
* தி.மு.க. கூட்டணி ஒரு மூழ்கும் கப்பல் என்றார்.
- தமிழக முழுவதும் 189 தொகுதிகளில் எடப்பாடி பழனிசாமி தனது பிரசாரத்தை மேற்கொண்டு முடித்துள்ளார்.
- அந்தியூர் சட்டமன்றத் தொகுதியில் மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
ஈரோடு:
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலை சந்திக்கும் வகையில் அனைத்து அரசியல் கட்சிகளும் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றன. அ.தி.மு.க பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம். தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.
தமிழக முழுவதும் மாவட்ட வாரியாக சட்டமன்ற பகுதிகளில் தனது பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். பிரசாரத்தில் தி.மு.க.வை கடுமையாக சாடி வருகிறார். அதேபோல் பல்வேறு புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறார்.
இதுவரை தமிழக முழுவதும் 189 தொகுதிகளில் எடப்பாடி பழனிசாமி தனது பிரசாரத்தை மேற்கொண்டு முடித்துள்ளார். ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரை ஈரோடு கிழக்கு, மொடக்குறிச்சி, கோபிசெட்டிபாளையம், பவானிசாகர் என 4 தொகுதிகளில் தனது பிரசாரத்தை எடப்பாடி பழனிசாமி முடித்துள்ளார்.
பல்வேறு கட்டங்களாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் எடப்பாடி பழனிசாமி அடுத்த கட்டமாக இன்று மாலை 190-வது தொகுதியாக ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்றத் தொகுதியில் மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
அந்தியூர் அருகே கந்தம்பாளையத்தில் உள்ள தனியார் இடத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு பிரசாரம் நடைபெறுகிறது. இதற்காக இன்று மாலை சேலம் மாவட்டம் எடப்பாடியில் இருந்து சாலை மார்க்கமாக காரில் அந்தியூருக்கு தேர்தல் பிரசாரத்துக்கு எடப்பாடி பழனிசாமி வருகிறார். அவருக்கு ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம் சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. பிரசாரம் நடைபெறும் இடத்தில் அ.தி.மு.க கட்சி கொடிகள் கட்-அவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. இன்று புதிய அறிவிப்புகளை வெளியிடுவாரா என அ.தி.மு.க.வினரும் பொதுமக்களும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இதைத்தொடர்ந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) 191-வது பகுதியாக மாலை 4 மணி அளவில் பெருந்துறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காஞ்சி கோவில் ரோட்டில் தாய்நகர் குடியிருப்பு எதிரே எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்கிறார். இதற்கான பணிகளும் விரைவாக நடந்து வருகிறது.
இதை முடித்துக் கொண்டு நாளை மாலை 5.30 மணி அளவில் ஈரோடு மாவட்டம் பவானியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார். இதற்காக சேலம் மேட்டூர் ரோடு டி ஏ கே வளாகத்தில் 10 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
இந்த கூட்டத்தில் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த பிரசார கூட்டத்திலும் எடப்பாடி பழனிசாமி புதிய அறிவிப்பை வெளியிடுவாரா என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து இரண்டு நாட்கள் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளதால் அ..தி.மு.க.வினர் உற்சாகத்தில் உள்ளனர்.
- எடப்பாடி பழனிசாமி கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்து சேலம் வந்தார்.
- நாளை பெருந்துறை, பவானி பகுதிகளில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்கிறார்.
சேலம்:
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்து சேலம் வந்தார். அவர் நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது இல்லத்தில் தங்கி உள்ளார். இன்று அவர் ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியிலும், நாளை (8-ந்தேதி) பெருந்துறை, பவானி பகுதிகளிலும் பிரசாரம் செய்கிறார்.
இந்த நிலையில் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியை இன்று காலை முன்னாள் அமைச்சர்கள் கே.சி.வீரமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், பரஞ்ஜோதி ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
- குடும்ப நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருவது மிகுந்த வேதனைக்குரிய விஷயமாகும்.
- சென்னை, பல்லவன் இல்லம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நிறைவேற்ற முடியாத பல்வேறு வாக்குறுதிகளை அளித்து ஆட்சியில் அமர்ந்த விடியா திமுக அரசு, மக்கள் நலனில் சிறிதும் அக்கறை இல்லாமலும், தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளைக் கூட நிறைவேற்றித் தராமலும், குடும்ப நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருவது மிகுந்த வேதனைக்குரிய விஷயமாகும்.
அந்த வகையில் நிர்வாகத் திறனற்ற விடியா திமுக அரசு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி வரும் தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்த பணப் பலன்கள், விடுப்பு ஒப்படைப்பு உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித் தராமல் காலம் தாழ்த்தி வரும் விடியா திமுக அரசைக் கண்டித்தும், தொழிலாளர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் சார்பில் 13.3.2026 பிற்பகல் 3 மணியளவில், சென்னை, பல்லவன் இல்லம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக அமைப்புச் செயலாளரும், வட சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் தலைமையிலும், கழக அண்ணா தொழிற்சங்கப் போவைச் செயலாளர் கமலக்கண்ணன், தலைவர் தாடி ம. இராசு, பொருளாளர் எம். அப்துல் அமீது ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும்.
கழக அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் சார்பில் நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், அண்ணா தொழிற்சங்கப் போவையின் மாநில நிர்வாகிகள், போக்குவரத்துப் பிரிவு நிர்வாகிகள், தமிழ் நாடு முழுவதும் உள்ள போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்களைச் சேர்ந்த நிர்வாகிகளும், தொழிலாளர்களும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு ஆதாவாக, விடியா திமுக அரசைக் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், தொழிலாளப் பெருமக்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கூட்டணி கட்சியை பா.ஜ.க. கபளீகரம் செய்து பதவிக்கு வருகிறது.
- தமிழகத்திலும் அ.தி.மு.க. என்ற கட்சிக்கு கடைசி தேர்தலாக இது இருக்கும்.
கரூரில் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி நிருபர்களிடம் கூறியதாவது:-
பா.ஜ.க. தமிழகத்தில் வெற்றி பெறாது என்று முடிவு செய்துவிட்டார்கள். இந்தியா கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும். அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி இந்த தேர்தலில் 3-வது இடத்திற்கு செல்லும், நிதிஷ்குமாரை பதவி விலக செய்துள்ளனர். அந்த மாநிலத்தில் கூட்டணி கட் சியை பா.ஜ.க. கபளீகரம் செய்து பதவிக்கு வருகிறது.
அதேபோல் தமிழகத்திலும் அ.தி.மு.க. என்ற கட்சிக்கு கடைசி தேர்தலாக இது இருக்கும். இளைஞர்கள் ஆதரவு அதிகமாக இருக்கக்கூடிய விஜய் நிச்சயமாக 2-வது இடத்திற்கு வரக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்றார்.
- 2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திருச்சி (கிழக்கு) தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 2021 தேர்தலில் தோல்வியடைந்தார்.
அண்மையில் அதிமுகவில் இணைந்த வெல்லமண்டி நடராஜனுக்கு அமைப்புச் செயலாளர் பதவி வழங்கியுள்ளார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. கடந்த 1972-ம் ஆண்டு முதல் அதிமுகவில் பயணித்த இவர், 2016-2021 காலக்கட்டத்தில் சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்தார். கடந்த 2022-ல் நிலவிய உட்கட்சி மோதலில் ஓபிஎஸ் பக்கம் நின்றதால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
இந்நிலையில் ஓபிஎஸ் திமுகவில் இணைந்தார். அதனைத்தொடர்ந்து இவரும் திமுகவில் இணைவார் என எதிர்பார்த்தநிலையில், ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட என்னால் திமுகவில் பயணிக்க முடியாது என மறுப்புத் தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து கடந்தமாத இறுதியில் மீண்டும் எடப்பாடி தலைமையிலான அதிமுகவில் இணைந்தார். இந்நிலையில் அவருக்கு பதவி வழங்கப்பட்டது.
- பாஜகவின் ஆக்டோபஸ் கரங்கள் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை பல துண்டுகளாக பிரித்தது.
- பவார் குடும்பமும், கட்சியும் ஒன்றாக இணையும் தருணத்தில் மர்மமான முறையில் விமான விபத்தில் (?) இறந்தார் அஜித் பவார்.
பீகாரின் முதலமைச்சர் நிதிஷ் குமார் தற்போது மாநிலங்களவை சீட்டுக்காக தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளார். இதனைக் குறிப்பிட்டு பாஜக தமிழ்நாட்டிலும் இதே ஃபார்முலாவை முன்னெடுப்பதாகவும், அதிமுக ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் எனவும் விசிக துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
"பீகார் மாநிலத்தை பாஜக தமது சதியால் கைப்பற்றியுள்ளது. பீகார் மாநிலத்தின் உரிமைகளுக்காகவும், சமூகநீதி-இட ஒதுக்கீட்டு கொள்கை நாயகனாகவும் களமாடி வந்த நிதிஷ் குமார் பாஜகவோடு கூட்டணி வைத்ததிலிருந்தே தடுமாற ஆரம்பித்து விட்டார்.
தற்போது, முதலமைச்சர் பதவியை ராஜினமா செய்ய வைக்கப்பட்டதன் மூலம் நிதிஷ்குமாரை பாஜக மாநில அரசியலிலிருந்தே அப்புறப்படுத்தியுள்ளது. 243 இடங்கள் கொண்ட பீகார் சட்டப்பேரவையில் பெரும்பான்மைக்கு 122 இடங்கள் தேவை என்ற நிலையில், கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் 202 இடங்களை பிடித்து மீண்டும் ஆட்சிக்கு வந்தது தேசிய ஜனநாயக கூட்டணி.
2025 தேர்தலில் பீகார் முதலமைச்சரும், ஜனதா தள கட்சியின் தலைவருமான நிதிஷ் குமாரும் பாஜகவும் 101 இடங்கள் என்று சமமாக போட்டியிட்டன. இறுதியில் 89 இடங்களோடு முதல் இடத்தில் பாஜகவும், 85 இடங்களோடு இரண்டாமிடத்தில் ஜனதா தளமும் வெற்றி பெற்றது.
2005ல் வெறும் 37 இடங்களுடன்தான் பாஜக பீகார் அரசியலில் நுழைந்தது. நிதிஷ் குமாரின் ஜனதா தளம் எனும் மாநில கட்சியின் தயவுடன் உள்ளே நுழைந்த பாஜக இன்று அதே நிதிஷ் குமாரின் முதலமைச்சர் பதவியை பறித்து, மாநில அரசியலைவிட்டு வெளியேற்ற முனைந்துள்ளது. இதே நிலை தான் NDA என்ற சர்கஸ் கூடாரத்தில் பாஜக எனும் ரிங் மாஸ்டரின் கீழ் அடைப்படுள்ள கட்சிகளுக்கு சட்டப்பேரவை தேர்தலுக்கு பின்னர் வரும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.
மராட்டியத்திலும் பாஜகவின் ஆக்டோபஸ் கரங்கள் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை பல துண்டுகளாக பிரித்தது. சிவசேனாவின் தோள்களில் 35 ஆண்டுகள் சவாரி செய்த பாஜக, இன்று தேர்தல் ஆணையத்தின் துணையுடன் அந்த கட்சியை துண்டாக்கியது. கட்சியை நிறுவிய தாக்கரே குடும்பத்திடமிருந்து சின்னத்தையும், கட்டமைப்பையும் பிடுங்கியது. கடந்த 30 ஆண்டுகளாக சிவசேனாவின் கைகளில் இருந்த மும்பை மாநகராட்சியும் இன்று பாஜக கைகளில் உள்ளது. தாங்கள் வளர்த்த பாஜகவிடமே இன்று கட்சியும் ஆட்சியும் இழந்து நிர்கதியாய் நிற்கிறார் உத்தவ் தாக்கரே.
பாஜக சதியால் பிரிந்த பவார் குடும்பமும், கட்சியும் ஒன்றாக இணையும் தருணத்தில் மர்மமான முறையில் விமான விபத்தில் (?) இறந்தார் அஜித் பவார். இப்படி தான் இந்தியா முழுக்க பாஜக தமது சதிவலையை விரித்து ஆட்சியை பிடித்து வருகிறது. தமிழ்நாட்டிலும் பீகார் பார்முலாவையே பாஜக முன்னெடுப்பதை அவதானிக்க முடிகிறது.
தேர்தலுக்கு பிறகு அதிமுக என்னும் மாநிலக்கட்சி இல்லாமல் போவதற்கே வாய்ப்புள்ளது. எடப்பாடி பழனிசாமி அப்போது என்ன புலம்பினாலும் அவரையும் அதிமுகவையும் காப்பாற்ற முடியாது. அதிமுக தொண்டர்கள் இந்த ஆபத்தை புரிந்து கொண்டால் நல்லது." எனக் குறிப்பிட்டுள்ளார்.
- இந்தியாவிலேயே பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு உள்ளாட்சி தேர்தலில் கொடுத்தது அம்மா தான்.
- கட்சியை உடைக்க பார்த்தார்கள். கட்சியை முடக்க பார்த்தார்கள்.
சேலம்:
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி அ.தி.மு.க. சார்பில் ஆட்டையாம்பட்டி ரவுண்டானா பகுதியில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் இளங்கோவன் தலைமை தாங்கினார். வீரபாண்டி மேற்கு ஒன்றிய செயலாளர் வருதுராஜ் வரவேற்புரை ஆற்றினார். வீரபாண்டி தொகுதி எம்.எல்.ஏ. ராஜமுத்து முன்னிலை வகித்தார்.
இதில் அ.தி.மு.க. கொள்கை பரப்பு துணை செயலாளர் நடிகை விந்தியா கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
இங்கு உங்களை பார்த்ததும் குழந்தை போல் நான் உற்சாகமாகிவிட்டேன். சிவனை நினைத்து வணங்கினால் முக்தி கிடைக்கும் என்பார்கள். ஆனால் அம்மாவை நினைத்து வணங்கினால் எனக்கு சக்தி கிடைக்கும்.
அம்மாவின் வார்த்தைகள் நம்மை கட்டி போடும். அந்த விரல் உங்களை சுட்டிக் காண்பித்தால் உலகமே உங்களைப் பார்க்கும். அம்மா என்றால் தமிழகத்திற்கு வரம். தி.மு.க.விற்கு ஜுரம்.
அப்படிப்பட்ட அம்மாவின் பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறேன். அம்மாவின் ஆட்சி தமிழகத்தின் பொற்கால ஆட்சி. தமிழகத்தில் 234 தொகுதியிலும் போட்டியிட்ட ஒரே தலைவி அம்மா மட்டுமே. அம்மாவின் வெற்றிக்கு காரணம் புரட்சித்தலைவர், இரட்டை இலை. நமது அம்மா தான். தமிழகத்தின் வெற்றிக்கு காரணம் பல காரணங்களை கூறலாம். அம்மா கொடுத்த அத்தனை வாக்குறுதிகளையும் நிறைவேற்றி இருந்தார். சொல்லாதவற்றையும் செய்து கொடுத்தவர் அம்மா தான். டெல்லி அம்மா கேட்டதெல்லாம் கொடுத்தது. மாணவர்களுக்கு விலை இல்லா மடிக்கணினி கொடுத்தார். தொட்டில் குழந்தை திட்டத்தை கொண்டு வந்தார். இன்று எத்தனையோ பெண்கள் உயிரோடு இருக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் அம்மா தான். பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை அம்மா கொண்டு வந்தார்.
இந்தியாவிலேயே பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு உள்ளாட்சி தேர்தலில் கொடுத்தது அம்மா தான். மக்களுக்கு பார்த்து பார்த்து திட்டங்களை கொண்டு வந்தவர் அம்மா. தோற்கடிக்க முடியாத தலைவியாக அம்மா இருந்தார். இதற்கு காரணம் மக்கள் தான். மக்களுக்காகவே வாழ்ந்தவர்கள் புரட்சித்தலைவரும், புரட்சித் தலைவியும் தான். அம்மாவின் உடல் மறையலாம். ஆனால் புகழ் மறையவே மறையாது.
எடப்பாடியார் ஆட்சி மீண்டும் அமைய வேண்டும். அப்போதுதான் அம்மாவின் ஆத்மா சாந்தி அடையும். இன்னொரு இழப்பை இந்த இயக்கம் தாங்காது. அதனால்தான் எட்டப்பர்களை, துரோகிகளை கட்சியில் சேராமல் பார்த்துக் கொண்டார் எடப்பாடியார்.
அவர்கள் செய்தது சாதாரண துரோகமா? எத்தனை துரோகம் செய்து இருக்கிறார்கள். அந்த துரோகிகள் தி.மு.க.விற்கு கைக்கூலியாக இருந்திருக்கிறார்கள். இவர்களால் தான் அ.தி.மு.க. அலுவலகம் தாக்கப்பட்டது. அம்மாவின் சேரையும் உடைத்து சேதப்படுத்தினார்கள். பைல்களை தூக்கி சென்றார்கள். கட்சியை உடைக்க பார்த்தார்கள். கட்சியை முடக்க பார்த்தார்கள். தி.மு.க.வுடன் கைகோர்த்து கொண்டு அ.தி.மு.க.வை அழிக்க பார்த்தார்கள். ஆனால் அண்ணன் எடப்பாடியார் கட்சியை காப்பாற்றி விட்டார். தமிழக மக்களுக்கு தெரியவேண்டும் என அண்ணன் எடப்பாடியார் பொறுமையாக காத்துக்கொண்டிருந்திருக்கிறார். தி.மு.க. கைக்கூலிகள் யார்? என இப்போது தெரியவந்திருக்கிறது.
தமிழக மக்களுக்கு புரிந்திருக்கிறது. இவர்களை கட்சியில் வைத்திருந்தால் அ.தி.மு.க. வேட்டியை கட்டிக்கொண்டு தி.மு.க.விற்கு வேலை பார்த்து இருப்பார்கள்.
நம்மளை விட்டு இருக்கிற சனி விலகி இருக்கிறது. பதவி ஆசை. பதவி வெறி. இவர்களை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். இத்தனை துரோகிகளை உங்களது ஆதரவுடன் தேர்தலில் தோற்கடிக்கப்பட வேண்டும். ஓ.பி.எஸ். தாய்கழகத்தில் இணைந்து விட்டேன் என கூறியிருக்கிறார்.
இந்த கட்சியில் 25 வருடத்திற்கு மேலாக இருக்கிறேன். நான் எந்த பதவியும் அனுபவிக்கவில்லை. ஆனால் ஓ.பி.எஸ். எத்தனையோ பதவிகளை அனுபவித்தார். அவரால் பதவிகள் ஏதும் இல்லாமல் தூங்க முடியாது. எத்தனையோ சலுகைகளை அனுபவித்த ஓ.பி.எஸ். தி.மு.க. முன்பு குனிந்து நிற்கிறார். உடம்பு கூசவில்லையா? அம்மாவின் போட்டோவை கழட்டி விட்டு ஸ்டாலின் போட்டோவை வைக்கிறார். இரட்டை இலை சின்னத்தை உடைத்து விட்டு உதயசூரியன் சின்னத்தை வைக்கிறார். அவர் இருக்கிற வீடு. அவர் வைத்திருக்கும் கார் எல்லாம் அம்மா போட்டது. உங்களுக்கு எங்கள் அம்மா போட்ட பிச்சை. உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார் புரட்சித்தலைவி அம்மா தான்.
இந்த முறை எங்களை நம்பி ஓட்டு போடுங்கள். இரட்டை இலை நம்பி ஓட்டு போடுங்கள். அம்மாவை நம்பி ஓட்டு போடுங்கள். எடப்பாடியாரை நம்பி ஓட்டு போடுங்கள். ஓட்டு போட்டீர்கள் என்றால் நீங்கள் நிம்மதியாக வாழலாம். எத்தனை பொய்யான வாக்குறுதிகள், எத்தனையோ பொய்யான விளம்பரங்கள் வந்து கொண்டிருக்கிறது.
தேர்தல் வந்துவிட்டால் தே.மு.தி.க. தலைவர் பிரேமலதா கட்சி கட்சியாக சென்று பேசுவார். துண்டு போட்டு அரசியல் நடத்தும் ஒரே தலைவி பிரேமலதா மட்டும் தான். அரை பர்சன்ட் இல்லாத கட்சியை அதிக விலை கொடுத்து வாங்கி இருக்கிறார்கள். அவங்களுக்கு பெரிய கொள்கை எல்லாம் கிடையாது. இவற்றையெல்லாம் பார்க்காமல் கேப்டன் சீக்கிரமாக சென்றுவிட்டார். நல்லவர்கள் எல்லாம் சீக்கிரமாக சென்று விடுவார்கள்.
தமிழ்நாடு மீண்டும் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும் என்றால் எடப்பாடி முதலமைச்சராக வரவேண்டும். அப்போதுதான் தமிழ்நாடு தலைநிமிர்ந்து நிற்கும். 4 வருடம் நல்லாட்சி தந்த அனுபவத்துடன் மீண்டும் ஆட்சிக்கு வந்து எடப்பாடியார் நல்லாட்சி தருவார்.
அரசு பள்ளி மாணவர்களை டாக்டராக்கி அழகு பார்த்த எடப்பாடியாரை எண்ணிப் பாருங்கள். பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கிய எடப்பாடியாரை எண்ணி பாருங்கள். துரோகிகளை கூடவே வைத்துக் கொண்டு சிறப்பான ஆட்சி நடத்திய எடப்பாடியாரை எண்ணி பாருங்கள். பச்சை தமிழன் உங்களுடனே இருக்கிறார். உங்களுக்காக இருக்கிறார். தயவுசெய்து பொதுமக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.
இரட்டை இலைக்கு போடும் உங்களது ஓட்டு உங்களது உரிமைக்கு போடும் ஓட்டு. நீங்கள் இரட்டை இலைக்கு போடும் ஓட்டு சமூக நீதிக்கு போடும் ஓட்டு. நீங்கள் போடும் ஓட்டு பெண்களுக்கு பாதுகாப்புக்கு போடும் ஓட்டு. அம்மா அவர்களுக்கு போடும் ஓட்டு உங்களது ஓட்டு. எடப்பாடியாரை முதலமைச்சராக்க போடும் ஓட்டு.
இவ்வாறு நடிகை விந்தியா பேசினார்.
- திமுக அரசின் "குற்றவாளிகள் கைது" நடவடிக்கையைக் கண்டு குற்றவாளிகள் யாரும் பயந்த மாதிரியே தெரியவில்லை!
- இப்படி முடிந்துவிட்டதை எல்லாம் திரும்பப் பெற ஒரே வழி, உங்களுடைய விடியா ஆட்சிக்கு முடிவு கட்டுவதே!
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
சிவகங்கை மாவட்டம் இடைக்காட்டூர் கிராமத்திற்குள், இருசக்கர வாகனங்களில் அரிவாள் மட்டும் பட்டாக்கத்திகளுடன் வந்த ஒன்பது மர்மநபர்கள், கண்ணால் கண்டவர் மீது கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
இதே மாதிரியான தாக்குதல் 2 நாட்களுக்கு முன்பு தான் நாங்குநேரி அருகே உள்ள பெரும்பத்து கிராமத்தில் நடந்துள்ளது. அதன் ரத்த ஈரம் காய்வதற்குள் அதேபோன்றதொரு தாக்குதல் மீண்டும் நடக்கிறது என்றால், இவை சொல்லவரும் செய்தி என்ன?
சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டிய முதலமைச்சர், ஒரு கையாலாகாத வெறும் பொம்மை முதல்வராக இருக்கிறார் என்பது தானே?
திமுக அரசின் "குற்றவாளிகள் கைது" நடவடிக்கையைக் கண்டு குற்றவாளிகள் யாரும் பயந்த மாதிரியே தெரியவில்லை!
பட்டியலின மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் புகுந்து தைரியமாக இப்படி ஒரு கொலைவெறித் தாக்குதல் நடக்கிறது என்றால், இங்கே நடக்கும் #சமூக_அநீதி_திமுகஅரசு இதையெல்லாம் கைகட்டி வேடிக்கை பார்க்கிறது என்று தானே மக்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்?
இப்படி மக்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டிய முதல்வர் என்ன செய்துக் கொண்டிருக்கிறார் தெரியுமா? "முடிந்துவிட்டது" என தான் காட்டிய சைகை வைரல் ஆனதாக வெட்டிப் பெருமை பேசிக் கொண்டிருக்கிறார்.
ஆமாம் மு.க.ஸ்டாலின் அவர்களே....
உங்கள் ஆட்சியில்
சட்டம் ஒழுங்கு முடிந்துவிட்டது!
பெண்கள் பாதுகாப்பு முடிந்துவிட்டது!
சமூகநீதி முடிந்துவிட்டது!
மொத்தத்தில், தமிழக மக்களின் நிம்மதியே முடிந்துவிட்டது!
இப்படி முடிந்துவிட்டதை எல்லாம் திரும்பப் பெற ஒரே வழி, உங்களுடைய விடியா ஆட்சிக்கு முடிவு கட்டுவதே! அதை மிக விரைவில் தமிழக மக்கள் "சிறப்பாக செய்ய" காத்திருக்கிறார்கள்!
இடைக்காட்டூர் கிராமத்தில் அரங்கேறிய கொலைவெறித் தாக்குதலில் தொடர்புள்ள அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன் என கூறியுள்ளார்.
- ஒவ்வொரு குடும்பத்துக்கும் கருணைத் தொகையாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்.
- வரும் நாட்களில் மாவட்ட செயலாளர்கள் அனைவரையும் தனித்தனியாக அழைத்து பேச இருப்பதாக தெரிவித்துள்ளார்.
சென்னை:
சட்டமன்ற தேர்தல் தொடர்பான அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என்ற சூழலில், ஒவ்வொரு கட்சிகளும் தேர்தல் பணிகளில் படு 'பிசி'யாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார்.
இதில் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன், துணை பொதுச் செயலாளர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி, முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, டி.ஜெயக்குமார், காமராஜ், ஓ.எஸ்.மணியன் மற்றும் மாவட்ட செயலாளர்கள் பலர் கலந்து கொண்டனர். மாலை 4 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டம் 5 மணி வரை அதாவது சுமார் ஒரு மணி நேரம் நடந்தது.
கூட்டத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் அடிப்படையில் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசப்பட்டதாக சொல்லப்படுகிறது. அதிலும் சமீப நாட்களாக எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் அனைத்து குடும்ப தலைவிக்கும் மாதம் ரூ.2,000 உதவித் தொகை, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் 3 கியாஸ் சிலிண்டர், ஒவ்வொரு குடும்பத்துக்கும் கருணைத் தொகையாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
அவ்வாறு வெளியிடக்கூடிய அறிவிப்புகளை இதுவரை வீடு வீடாக மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கப்படவில்லை என்றும், அதனை மக்கள் மத்தியில் கொண்டுபோய் சேர்த்தால்தான் அ.தி.மு.க.வின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும் என்றும், அந்த பணிகளில் மாவட்ட செயலாளர்களிடம் தொய்வு இருக்கிறது என்றும் ஆதங்கத்தோடு பேசியுள்ளார்.
மேலும் வரும் நாட்களில் மாவட்ட செயலாளர்கள் அனைவரையும் தனித்தனியாக அழைத்து பேச இருப்பதாகவும் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
இதுதவிர, வருகிற 11-ந்தேதி (புதன்கிழமை) திருச்சியில் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்க இருக்கும் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த வேண்டும், திருச்சியை சுற்றியுள்ள மாவட்ட தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பிக்க வேண்டும் எனவும், பா.ஜ.க. அமைப்பு ரீதியாக உற்சாகமாக இதுபோன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்கள். ஆனால் நாம் அமைப்பு ரீதியாக அப்படி வருவதில்லை எனவும் மாவட்ட செயலாளர்களிடம் கூறினார்.
- ஆட்சியின் கடமை மக்களின் வாழ்வை உயர்த்துவது; அரசியல் காட்சிகளை அல்ல.
- மக்கள் நல ஆட்சியின் மண், மாநில உரிமைகளின் குரல்.
விருதுநகர் மக்களவை காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
மக்கள் வரிப்பணம் —
அரசியல் மேடைகளுக்கா?
ஒரே நாள் நிகழ்ச்சிக்கு
₹30 கோடியை தாண்டும் செலவு.
மேடைகள் உயர்ந்தன,
விளம்பரங்கள் முழங்கின,
ரோடு ஷோக்கள் பிரகாசித்தன.
ஆனால் மக்கள் வாழ்க்கை?
விலைவாசி உயர்வு,
வேலைவாய்ப்பு குறைவு,
இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறி.
ஆட்சியின் கடமை
மக்களின் வாழ்வை உயர்த்துவது;
அரசியல் காட்சிகளை அல்ல.
ஆனால் இன்று
பிரதமர் மோடி அவர்களின் வருகைக்காக
கோடிகள் செலவழிக்கப்படும் அரசியல் கலாசாரம் உருவாகிறது.
இந்த கலாசாரம்
தமிழ்நாட்டில் வேரூன்றக்கூடாது.
ஏனெனில்
தமிழ்நாடு என்பது
மக்கள் நல ஆட்சியின் மண்,
மாநில உரிமைகளின் குரல்.
அதனால் தான்
பாஜக/அதிமுக கூட்டணியை
அரசியல் ரீதியாகத் தடுக்க வேண்டியது அவசியம்.
மக்கள் பணம் புனிதம்.
அதை காக்கும் பொறுப்பு
மக்களிடமே உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அ.தி.மு.க. கூட்டணியில் அ.தி.மு.க.-1, பா.ம.க.-1 ஆகிய இடங்களில் போட்டியிடுகிறது.
- வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய தீவிரம் காட்டுகின்றனர்.
தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை பதவிகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். தி.மு.க. கூட்டணியில் மொத்தமுள்ள 4 இடங்களில் தி.மு.க.-2, காங்கிரஸ்-1, தே.மு.தி.க.-1 இடங்களில் போட்டியிடுகிறது.
அதேபோல் அ.தி.மு.க. கூட்டணியில் அ.தி.மு.க.-1, பா.ம.க.-1 ஆகிய இடங்களில் போட்டியிடுகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய தீவிரம் காட்டுகின்றனர்.
அந்த வகையில், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவதற்காக இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார்.






