என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சேலத்தில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த முன்னாள் அமைச்சர்கள்
    X

    சேலத்தில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த முன்னாள் அமைச்சர்கள்

    • எடப்பாடி பழனிசாமி கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்து சேலம் வந்தார்.
    • நாளை பெருந்துறை, பவானி பகுதிகளில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்கிறார்.

    சேலம்:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்து சேலம் வந்தார். அவர் நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது இல்லத்தில் தங்கி உள்ளார். இன்று அவர் ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியிலும், நாளை (8-ந்தேதி) பெருந்துறை, பவானி பகுதிகளிலும் பிரசாரம் செய்கிறார்.

    இந்த நிலையில் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியை இன்று காலை முன்னாள் அமைச்சர்கள் கே.சி.வீரமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், பரஞ்ஜோதி ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

    Next Story
    ×