வெல்லமண்டி நடராஜன் மீண்டும் அதிமுகவில் இணைந்தார்!

உட்கட்சி மோதலில் ஓபிஎஸ் பக்கம் நின்றதால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட என்னால் திமுகவில் பயணிக்க முடியாது
வெல்லமண்டி நடராஜன் மீண்டும் அதிமுகவில் இணைந்தார்!
Published on

அதிமுக முன்னாள் அமைச்சரான வெல்லமண்டி நடராஜன் தன்னை மீண்டும் அதிமுகவில் இணைத்துக்கொண்டுள்ளார். ஓபிஎஸ் இன்று திமுகவில் இணைந்த நிலையில், அவரது தீவிர ஆதரவாளராக இருந்த வெல்லமண்டி நடராஜன், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவில் மீண்டும் இணைந்துள்ளார்.

"ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட என்னால் திமுகவில் பயணிக்க முடியாது" எனக் கூறி, அவர் திமுகவில் இணைய மறுப்புத் தெரிவித்திருந்தார். அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஓரிரு தினங்களில் அறிவிப்பேன் என தெரிவித்திருந்த நிலையில் இன்று அதிமுகவில் இணைந்துள்ளார்.

2016-2021 காலகட்டத்தில் தமிழ்நாடு அரசின் சுற்றுலாத் துறை அமைச்சராக பணியாற்றினார். கடந்த 1972-ம் ஆண்டு முதல் அதிமுகவில் பணியாற்றி வரும் இவர், திருச்சி மாநகர் மாவட்ட அவைத் தலைவராகவும் இருந்துள்ளார். 2022-ல் நிலவிய உட்கட்சி மோதலில் ஓபிஎஸ் பக்கம் நின்றதால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார், தற்போது மீண்டும் இணைந்துள்ளார். 

X

Maalai Malar
www.maalaimalar.com