search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ADMK Candidates"

    • அ.தி.மு.கவில் ஏற்பட்டுள்ள ஒற்றை தலைமை பிரச்சினையால் கட்சியில் இருந்து விண்ணப்பபடிவம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
    • அனைத்து பதவிகளுக்கும் வருகிற ஜூலை 9-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது.

    பெரியகுளம்:

    ஒற்றைதலைமை பிரச்சினையால் பெரியகுளம் நகராட்சி இடைத்தேர்தலில் அ.தி.மு.க சார்பில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்ய முடியவில்லை.

    பெரியகுளம் நகராட்சியில் மொத்தம் உள்ள 30 வார்டுகளில் தி.மு.க 14, அ.தி.மு.க 7, அ.ம.மு.க 3, சுயேட்சைகள் 2, இந்திய யூனியன்முஸ்லீம் லீக், மார்க்சிஸ்ட், பார்வர்டு பிளாக், பா.ம.க ஆகியவை தலா 1 என கவுன்சிலர்கள் வெற்றிபெற்றனர். இதில் 26-வது வார்டு தி.மு.க கவுன்சிலர் ராஜாமுகமது தலைைமயின் கட்டுப்பாட்டை மீறியதாக கூறி பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

    இதற்கான இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் கடந்த 20-ந்தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவடைந்தது. தி.மு.க சார்பில் ஜியாவுதீன்அக்பர் மற்றும் சுயேட்சைகள் 4 என மொத்தம் 5 பேர் வேட்புமனுதாக்கல் செய்துள்ளனர். அ.தி.மு.கவில் ஏற்பட்டுள்ள ஒற்றை தலைமை பிரச்சினையால் கட்சியில் இருந்து விண்ணப்பபடிவம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    எனவே கடந்த தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட ஜெயினுலாபுதீன் தற்போது சுயேட்சையாக வேட்புமனுதாக்கல் செய்துள்ளார். தேனி மாவட்டத்தில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள வடபுதுப்பட்டி ஊராட்சி தலைவர் பதவிக்கு 13 பேர், டி.வாடிப்பட்டி ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 பேர், வடபுதுப்பட்டி மொட்டனூத்து ரெங்கசமுத்திரம், முத்தாலம்பாறை, தும்மக்குண்டு ஆகிய ஊராட்சிகளின் வார்டு உறுப்பினர் பதவிக்கு தலா ஒருவர், சின்னஓவுலாபுரம் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 3 பேர் என மொத்தம் 28 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

    இந்த மனுக்களின் மீது பரிசீலனை இன்று நடைபெறுகிறது. வருகிற 30-ந்தேதிக்குள் மனுக்களை வாபஸ் பெற்றுக்கொள்ளலாம். அனைத்து பதவிகளுக்கும் வருகிற ஜூலை 9-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. வடபுதுப்பட்டி, மொட்டனூத்து, ரெங்கசமுத்திரம், முத்தலாம்பாறை, தும்மக்குண்டு ஆகிய ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தலா ஒருவர் மட்டுமே மனுத்தாக்கல் செய்துள்ளதால் அங்கு அவர்கள் போட்டியின்றி தேர்வாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    தமிழகத்தில் 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். #TNElectrions2019 #TNBypoll #ADMKCandidates
    சென்னை:

    தமிழகத்தில் காலியாக உள்ள 22 சட்டமன்றத் தொகுதிகளில், 18 தொகுதிகளுக்கு பாராளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து கடந்த 18-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. விடுபட்ட சூலூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி மற்றும் ஒட்டப்பிடாரம் (தனி) ஆகிய 4 தொகுதிகளுக்கு மே 19-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், 4 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்களை கட்சியின் பொதுச்செயலாளர் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று அறிவித்துள்ளனர். வேட்பாளர்கள் விவரம் வருமாறு:-


    சூலூர்- வி.பி.கந்தசாமி, கோவை புறநகர் மாவட்ட அம்மா பேரவை தலைவர். அரவக்குறிச்சி- வி.வி.செந்தில்நாதன், கரூர் மாவட்ட இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை செயலாளர் திருப்பரங்குன்றம் - எஸ்.முனியாண்டி, அவனியாபுரம் பகுதி அதிமுக செயலாளர். ஒட்டப்பிடாரம் (தனி) - பெ.மோகன், முன்னாள் எம்எல்ஏ, தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக துணை செயலாளர்.  #TNElectrions2019 #TNBypoll #ADMKCandidates
    தென் சென்னை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் ஜெ.ஜெயவர்தனை ஆதரித்து சோழிங்கநல்லூர் தொகுதி கந்தன்சாவடி பகுதியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆதரவு திரட்டினார். #LSPolls #edappadipalaniswami
    சென்னை:

    அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரம் செய்து வருகிறார். தென் சென்னை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் ஜெ.ஜெயவர்தனை ஆதரித்து சோழிங்கநல்லூர் தொகுதி கந்தன்சாவடி பகுதியில் இன்று காலை திறந்த ஜீப்பில் வீதி வீதியாக சென்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆதரவு திரட்டினார்.

    பிரசாரத்தின்போது முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ‘அம்மா அரசின் திட்டங்களால் பயன்பெற்ற மக்கள் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பார்கள். ஏழை மக்களின் நலன் காக்க தொடர்ந்து அரசு பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்து வருகிறது. இத்தொகுதி மக்களின் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவர் ஜெயவர்தன். அவருக்கு இரட்டை இலை சின்னத்தில் பெருவாரியாக வாக்களித்து வெற்றிபெற செய்யுங்கள்.’

    இவ்வாறு அவர் பேசினார். #LSPolls #ADMK #edappadipalaniswami
    ×