அ.தி.மு.க. என்றால் எடப்பாடி பழனிசாமி மட்டும்தான் - ஆர்.பி.உதயகுமார்

ஓ.பன்னீர்செல்வம் குறித்து கவலைப்பட தேவையில்லை.அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவர்கள் பல்வேறு இடங்களுக்கு முகாம் மாறி செல்கின்றனர்.
அ.தி.மு.க. என்றால் எடப்பாடி பழனிசாமி மட்டும்தான் -  ஆர்.பி.உதயகுமார்
Published on

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தி.மு.க.வில் இணைந்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அவர் தன்னை தி.மு.க.வில் இணைத்துக் கொண்டார். அவருடன் அவரது மகன் ரவீந்திரநாத் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ. ஐயப்பனும் இணைந்தனர்.

இதுதொடர்பாக சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் கூறுகையில்,

* அ.தி.மு.க. என்று சொன்னால் அது எடப்பாடி பழனிசாமி மட்டும்தான். ஓ.பன்னீர்செல்வம் குறித்து கவலைப்பட தேவையில்லை.

* அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவர்கள் பல்வேறு இடங்களுக்கு முகாம் மாறி செல்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com