search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "union leader"

    • சங்கராபுரம் அருகே முன்னாள் யூனியன் தலைவர் வீட்டில் நகை, பணம் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது.
    • வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, உள்ளே பொருட்கள் சிதறிக் கிடந்தன.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம் பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாதுரை மனைவி ரோஜாவதி(வயது62). இவரது கணவர் கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் ரிஷிவந்தியம் வடக்கு யூனியன் தலைவராக பதவி வகித்தவர். கடந்த ஓராண்டுக்கு முன் அவர் இறந்த நிலையில் ரோஜாவதி தனியாக வசித்து வருகிறார். இவருக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். அனைவரும் திருமணமாகி வெளியூ ர்களில் வசிக்கின்றனர். ரோஜாவதி மூட்டு வலி காரணமாக கடந்த 2-ந் தேதி சென்னையில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றவர், நேற்று காலை வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, உள்ளே பொருட்கள் சிதறிக் கிடந்தன. பீரோவில் இருந்த 8 பவுன் நகை மற்றும் 90 ஆயிரம் ரூபாய் திருடு போயிருப்பது தெரியவந்தது. இது பற்றி தகவலறிந்த டி.எஸ்.பி., பழனி, சங்கராபுரம் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், வடபொன்பரப்பி சப் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் கைரேகை பிரிவு போலீசாருடன் சென்று விசாரணை நடத்தி தடயங்களை சேகரித்தனர். இது குறித்து வடபொன்பரப்பி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • மலர்குளத்திற்கு செல்லும் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டுள்ள இடத்தை மழை வருவதற்குள் அடைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
    • கால்வரத்து பகுதி தூர்வாரப்படும் என யூனியன் தலைவர் ரமேஷ் கூறினார்.

    ஓட்டப்பிடாரம்:

    ஓட்டப்பிடாரம் அருகே உள்ள ஆரைக்குளம் அணைக்கட்டில் இருந்து கால்வாய் வழியாக புதியம்புத்தூர் மலர்குளத்திற்குச் செல்லும் கால்வாயில் குலசேகரநல்லூர் அருகே கடந்த மழை காலத்தில் உடைப்பு ஏற்பட்டு கோரம்பள்ளம் அணைக்கு செல்லும் கால்வாயில் செல்கிறது. இதனால் இப்பகுதி விவசாயிகள் உடைப்பு ஏற்பட்டுள்ள இடத்தை மழை வருவதற்குள் அடைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று நேற்று ஓட்டப்பிடாரம் யூனியன் தலைவர் ரமேஷ் தலைமையில் யூனியன் ஆணையாளர் வெங்கடாச்சலம், யூனியன் கவுன்சிலர் மொட்டையச்சாமி, கொடியன்குளம் பஞ்சாயத்து தலைவர் அருண்குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர். பொதுமக்களின் கோரிக்கையான மலர்குளத்துக்கு செல்லும் கால்வாயில் உைடப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் தடுப்பு சுவர் அமைக்கப்படும். மேலும் கால்வரத்து பகுதி தூர்வாரப்படும் எனவும் யூனியன் தலைவர் ரமேஷ் கூறினார்.

    ×