search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யூனியன் தலைவர்"

    • முதுகுளத்தூர் யூனியன் தலைவராக சண்முகபிரியா ராஜேஷ் (தி.மு.க.) தேர்வு செய்யப்பட்டார்.
    • ஊராட்சி ஒன்றிய தலைவராக இருந்தவர் எம்.பி. தேர்தலில் போட்டியிடுவதற்காக தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய தலைவராக இருந்த தர்மர் எம்.பி. தேர்தலில் போட்டியிடுவதற்காக தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

    இதையடுத்து காலியாக இருந்த தலைவர் பதவிக்கு தேர்தல் அலுவலர் மாடசாமி சுந்தர்ராஜ் முன்னிலையில் தேர்தல் நடந்தது. இதில் 14 ஒன்றிய கவுன்சிலர்களும் கலந்துகொண்டனர்.

    போலீஸ் டி.எஸ்.பி. சின்ன கன்னு தலைமையில் 40-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தி.மு.க. சார்பில் வேட்பாளராக 2-வது வார்டு விக்கிரபாண்டி யபுரம் கவுன்சிலர் சண்முகபிரியா ராஜேஷ் போட்டியிட்டார்.

    இவரை எதிர்த்து 3-வது வார்டு மணலூர் தி.மு.க.கவுன்சிலர் நாகஜோதி ராமர் போட்டியிட்டார். 14 கவுன்சிலர்களில் 8 வாக்குகள் பெற்ற தி.மு.க. வேட்பாளர் சண்முகம் பிரியா ராஜேஷ் வெற்று பெற்றார்.

    நாகஜோதி ராமர் 5 வாக்குகள் பெற்றார். 1 வாக்கு செல்லாதவை என்று அறிவிக்கப்பட்டது. தேர்தல் நடத்துவதில் காலதாமதம் செய்வதாகக் கூறி. தி.மு.க. தொண்டர்களும், பொதுமக்களும் கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், ராமநாதபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான காதர்பாட்ஷா, முத்துராமலிங்கத்திடம் யூனியன் தலைவராக தேர்வு செய்யப்பட்ட சண்முகபிரியா ராஜேஷ் வாழ்த்து பெற்றார்.

    தி.மு.க. தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் தலைவர் சண்முகபிரியா ராஜேசை வாழ்த்தினர்.பின்னர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறுகையில், இதுவரை முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம் அ.தி.மு.க. வசம் இருந்தது. இப்போது யூனியன் தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த சண்முகப்பிரியா தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாளை அவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெறுகிறார் என்றார்.

    • தென்காசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற யூனியன் கூட்டத்திற்கு கூட்டத்திற்கு யூனியன் தலைவர் வல்லம் ஷேக் அப்துல்லா தலைமை தாங்கினார்.
    • கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 24 தீர்மானங்களையும் ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளர் ராஜேஸ்வரி வாசித்து ஒப்புதல் பெற்றார்.

    தென்காசி:

    தென்காசி ஊராட்சி ஒன்றிய அலுவலக யூனியன் கூட்டத்திற்கு யூனியன் தலைவர் வல்லம் ஷேக் அப்துல்லா தலைமை தாங்கினார். ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி) மாணிக்கவாசகம், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) குழந்தைமணி, ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவர் கனகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 24 தீர்மானங்களையும் ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளர் ராஜேஸ்வரி வாசித்து ஒப்புதல் பெற்றார்.

    இந்த கூட்டத்தில் தென்காசி ஊராட்சி ஒன்றியம் 3- வது வார்டு உறுப்பினர் அழகுசுந்தரம் பேசியதாவது:- தென்காசி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.1 கோடிக்கும் அதிகமான பல்வேறு பணிகள் செய்து முடிக்கப்படாமல் நிலுவையில் உள்ளது. அந்தப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஏற்கனவே பல்வேறு பணிகளை செய்து முடிக்காமல் உள்ள ஒப்பந்தக்காரர்களுக்கு புதிய பணிகளை வழங்கக் கூடாது என்று பேசினார்.

    சேர்மன் :- கட்டுமான பொருட்கள் கொண்டு வருவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக பல்வேறு பணிகள் செய்து முடிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது உண்மைதான் விரைவில் அந்த பணிகளை முடிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதனைத்தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் மாணிக்கவாசகம் பேசியதாவது:- தென்காசி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஒப்பந்தக்காரர்களையும் அழைத்துப் பேசி செய்து முடிக்காத பணிகளை விரைந்து முடித்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பேசினார்.

    தொடர்ந்து தென்காசி ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்களின் கோரிக்கைகள் அனைத்தும் ஏற்கப்பட்டு விரைவில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் வல்லம் ஷேக்அப்துல்லா மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாணிக்கவாசகம் , குழந்தை மணி ஆகியோர் தெரிவித்தனர்.

    இந்தக் கூட்டத்தில் தென்காசி ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலாநிதி, ப்ரியா, அழகுசுந்தரம் , செல்வநாயகம் வினோதி, மல்லிகா, சுப்புலட்சுமி, ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    தென்காசி ஊராட்சி ஒன்றிய பொறியாளர்கள் ஜெகதீஸ் மாதவன், ஆசீர் டேவிட் ராஜதுரை, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கோபி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவண சண்முகம், டென்னிசன் ஆகியோர் கலந்து கொண்டனர். தென்காசி ஊராட்சி ஒன்றிய அலுவலக மேலாளர் அன்பரசு நன்றி கூறினார்.

    • சங்கராபுரம் அருகே முன்னாள் யூனியன் தலைவர் வீட்டில் நகை, பணம் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது.
    • வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, உள்ளே பொருட்கள் சிதறிக் கிடந்தன.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம் பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாதுரை மனைவி ரோஜாவதி(வயது62). இவரது கணவர் கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் ரிஷிவந்தியம் வடக்கு யூனியன் தலைவராக பதவி வகித்தவர். கடந்த ஓராண்டுக்கு முன் அவர் இறந்த நிலையில் ரோஜாவதி தனியாக வசித்து வருகிறார். இவருக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். அனைவரும் திருமணமாகி வெளியூ ர்களில் வசிக்கின்றனர். ரோஜாவதி மூட்டு வலி காரணமாக கடந்த 2-ந் தேதி சென்னையில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றவர், நேற்று காலை வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, உள்ளே பொருட்கள் சிதறிக் கிடந்தன. பீரோவில் இருந்த 8 பவுன் நகை மற்றும் 90 ஆயிரம் ரூபாய் திருடு போயிருப்பது தெரியவந்தது. இது பற்றி தகவலறிந்த டி.எஸ்.பி., பழனி, சங்கராபுரம் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், வடபொன்பரப்பி சப் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் கைரேகை பிரிவு போலீசாருடன் சென்று விசாரணை நடத்தி தடயங்களை சேகரித்தனர். இது குறித்து வடபொன்பரப்பி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    ×