search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்காசி யூனியன் பகுதியில் நிலுவையில் உள்ள பணிகளை  விரைந்து முடிக்க நடவடிக்கை- யூனியன் தலைவர் தகவல்
    X

    யூனியன் கூட்டம் நடைபெற்ற காட்சி.

    தென்காசி யூனியன் பகுதியில் நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை- யூனியன் தலைவர் தகவல்

    • தென்காசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற யூனியன் கூட்டத்திற்கு கூட்டத்திற்கு யூனியன் தலைவர் வல்லம் ஷேக் அப்துல்லா தலைமை தாங்கினார்.
    • கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 24 தீர்மானங்களையும் ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளர் ராஜேஸ்வரி வாசித்து ஒப்புதல் பெற்றார்.

    தென்காசி:

    தென்காசி ஊராட்சி ஒன்றிய அலுவலக யூனியன் கூட்டத்திற்கு யூனியன் தலைவர் வல்லம் ஷேக் அப்துல்லா தலைமை தாங்கினார். ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி) மாணிக்கவாசகம், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) குழந்தைமணி, ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவர் கனகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 24 தீர்மானங்களையும் ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளர் ராஜேஸ்வரி வாசித்து ஒப்புதல் பெற்றார்.

    இந்த கூட்டத்தில் தென்காசி ஊராட்சி ஒன்றியம் 3- வது வார்டு உறுப்பினர் அழகுசுந்தரம் பேசியதாவது:- தென்காசி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.1 கோடிக்கும் அதிகமான பல்வேறு பணிகள் செய்து முடிக்கப்படாமல் நிலுவையில் உள்ளது. அந்தப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஏற்கனவே பல்வேறு பணிகளை செய்து முடிக்காமல் உள்ள ஒப்பந்தக்காரர்களுக்கு புதிய பணிகளை வழங்கக் கூடாது என்று பேசினார்.

    சேர்மன் :- கட்டுமான பொருட்கள் கொண்டு வருவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக பல்வேறு பணிகள் செய்து முடிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது உண்மைதான் விரைவில் அந்த பணிகளை முடிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதனைத்தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் மாணிக்கவாசகம் பேசியதாவது:- தென்காசி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஒப்பந்தக்காரர்களையும் அழைத்துப் பேசி செய்து முடிக்காத பணிகளை விரைந்து முடித்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பேசினார்.

    தொடர்ந்து தென்காசி ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்களின் கோரிக்கைகள் அனைத்தும் ஏற்கப்பட்டு விரைவில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் வல்லம் ஷேக்அப்துல்லா மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாணிக்கவாசகம் , குழந்தை மணி ஆகியோர் தெரிவித்தனர்.

    இந்தக் கூட்டத்தில் தென்காசி ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலாநிதி, ப்ரியா, அழகுசுந்தரம் , செல்வநாயகம் வினோதி, மல்லிகா, சுப்புலட்சுமி, ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    தென்காசி ஊராட்சி ஒன்றிய பொறியாளர்கள் ஜெகதீஸ் மாதவன், ஆசீர் டேவிட் ராஜதுரை, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கோபி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவண சண்முகம், டென்னிசன் ஆகியோர் கலந்து கொண்டனர். தென்காசி ஊராட்சி ஒன்றிய அலுவலக மேலாளர் அன்பரசு நன்றி கூறினார்.

    Next Story
    ×