search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓட்டப்பிடாரம் அருகே கால்வாயில் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் யூனியன் தலைவர் ஆய்வு
    X

    கால்வாயில் உடைப்பு ஏற்பட்டுள்ள பகுதியை யூனியன் தலைவர் ரமேஷ் பார்வையிட்ட போது எடுத்த படம்.

    ஓட்டப்பிடாரம் அருகே கால்வாயில் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் யூனியன் தலைவர் ஆய்வு

    • மலர்குளத்திற்கு செல்லும் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டுள்ள இடத்தை மழை வருவதற்குள் அடைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
    • கால்வரத்து பகுதி தூர்வாரப்படும் என யூனியன் தலைவர் ரமேஷ் கூறினார்.

    ஓட்டப்பிடாரம்:

    ஓட்டப்பிடாரம் அருகே உள்ள ஆரைக்குளம் அணைக்கட்டில் இருந்து கால்வாய் வழியாக புதியம்புத்தூர் மலர்குளத்திற்குச் செல்லும் கால்வாயில் குலசேகரநல்லூர் அருகே கடந்த மழை காலத்தில் உடைப்பு ஏற்பட்டு கோரம்பள்ளம் அணைக்கு செல்லும் கால்வாயில் செல்கிறது. இதனால் இப்பகுதி விவசாயிகள் உடைப்பு ஏற்பட்டுள்ள இடத்தை மழை வருவதற்குள் அடைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று நேற்று ஓட்டப்பிடாரம் யூனியன் தலைவர் ரமேஷ் தலைமையில் யூனியன் ஆணையாளர் வெங்கடாச்சலம், யூனியன் கவுன்சிலர் மொட்டையச்சாமி, கொடியன்குளம் பஞ்சாயத்து தலைவர் அருண்குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர். பொதுமக்களின் கோரிக்கையான மலர்குளத்துக்கு செல்லும் கால்வாயில் உைடப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் தடுப்பு சுவர் அமைக்கப்படும். மேலும் கால்வரத்து பகுதி தூர்வாரப்படும் எனவும் யூனியன் தலைவர் ரமேஷ் கூறினார்.

    Next Story
    ×