search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tractor confiscation"

    • சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் புதுப்பேட்டை அடுத்த சிறுவத்தூர் பகுதியில் தீவிரரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • போலீசார் வருவதை அறிந்து மணல் அல்லிக்கொண்டிருந்த நபர் டிராக்டரை அங்கேயே விட்டு விட்டு ஓடிவிட்டார்.

    கடலூர்: 

    கடலூர் போலீஸ் சூப்பிரண்டு, பண்ருட்டி டிஎஸ்பி, ஆகியோர் உத்தரவின்பேரில் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார்,  சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் புதுப்பேட்டை அடுத்த சிறுவத்தூர் பகுதியில் தீவிரரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சிறுவத்தூர் கெடிலம் ஆற்றுப்பகுதியில் அரசு அனுமதி இல்லாமல் டிராக்டரில் மணல் கடத்துவது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து.உடனே போலீசார் அங்கு சென்றனர். போலீசார் வருவதை அறிந்து மணல் அல்லிக்கொண்டிருந்த நபர் டிராக்டரை அங்கேயே விட்டு விட்டு ஓடிவிட்டார். உடனே போலீசார் டிராக்டரை பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணையில் தப்பி ஓடியது அதே ஊரை சேர்ந்த வெற்றிவேல் (எ) தேவவிரதன் என்பது தெரியவந்தது. அவர்மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    செந்துறை அருகே கடன்தொகை செலுத்தாததால் டிராக்டர் பறிமுதல் செய்த டிரைவரை அரிவாளால் வெட்டிய விவசாயி கைது செய்யபட்டார்.
    செந்துறை:

    செந்துறை அருகே உள்ள கோசுகுறிச்சியை சேர்ந்தவர் பக்கீர்அகமது (வயது 23). விவசாயி. இவர், கம்பத்தை சேர்ந்த ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்று டிராக்டர் வாங்கி இருந்தார். இதற்காக, ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையை நிதிநிறுவனத்துக்கு செலுத்தி வந்தார்.

    இந்தநிலையில் கடந்த 4 மாதங்களாக அவர் கடன்தொகையை செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த நிதிநிறுவனத்தினர் 4 பேர், டிராக்டரை பறிமுதல் செய்வதற்காக நேற்று முன்தினம் கோசுகுறிச்சிக்கு வந்தனர். அப்போது பக்கீர்அகமது, அவருடைய தம்பி மீரான் (21) ஆகியோருக்கும், நிதிநிறுவன ஊழியர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    இதற்கிடையே நிதிநிறுவன ஊழியர்களுடன் வந்திருந்த டிரைவர் சரவணன் என்பவர், அங்கு நின்று கொண்டிருந்த டிராக்டரை பறிமுதல் செய்து எடுத்து வந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த பக்கீர்அகமது, தான் வைத்திருந்த அரிவாளால் சரவணனை வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த அவருக்கு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் வழக்குப்பதிவு செய்து பக்கீர்அகமதுவை கைது செய்தார். இதற்கிடையே நிதிநிறுவன ஊழியர்கள் தாக்கியதில் காயம் அடைந்ததாக கூறி, துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் மீரான் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #tamilnews
    ×