search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rural development department"

    • கூட்டத்தை அமைச்சர் சாய்.ஜெ. சரவணன்குமார் தொடங்கி வைத்தார்.
    • வட்டார வளர்ச்சித்துறை அதிகாரிகள், அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை ஊரக வளர்ச்சித்துறையின் ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் ஓட்டல் சன்வேயில் 2 நாட்கள் பயிற்சி முகாம் நடந்தது.

    இதில் கோவா, அருணாச்சல பிரதேசம், ஹரியானா, நாகாலாந்து மற்றும் 5 யூனியன் பிரதேசங்களை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர். முகாமில் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தலைமை வகித்தார். கூட்டத்தை அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் திட்ட இயக்குனர் சத்தியமூர்த்தி வரவேற்றார். சம்பத் எம்.எல்.ஏ. வாழ்த்தி பேசினார். கலெக்டர் வல்லவன், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சக துணை செயலர் நிவேதிதாபிரசாத், தேசிய வாழ்வதார இயக்கம் உஷாரணி, வசுதாசுக்லா, தேசிய வள நபர்கள் பிரியங்காஷகா, அர்ச்சனா கோஷ், ஜான்சிராணி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    வில்லியனூர் வட்டார வளர்ச்சித்துறை அதிகாரி வைஷாக்பாகி நன்றி கூறினார். கூட்டத்தில் வட்டார வளர்ச்சித்துறை அதிகாரிகள், அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • ஊரக வளர்ச்சி துறையில் கோப்புகள் ஆண்டு கணக்கில் முடங்கி கிடக்கிறது.
    • இக்கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கத்தின் சார்பில் தொடர் போராட்டம் நடத்த உள்ளோம்.

    ஈரோடு:

    தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கதின் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    ஊரக வளர்ச்சி துறையில் அனைத்து நிலை அலுவலர்களின் நலன் சார்ந்த கோப்புகள் ஆண்டு கணக்கில் முடங்கி கிடக்கிறது. இதற்கு தீர்வு காண வேண்டும்.

    அலுவலர்களின் நலன், உரிமைகள் சார்ந்த கோப்பு களை உருவாக்கவதிலும், அரசாணை வெளியிடுவதிலும் தாமதம் ஏற்படுகிறது. இந்த போக்கு மாற்றி கொள்ளப்பட வேண்டும்.

    இந்த துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். தகுதியான அலுவலர்களுக்கு உதவி இயக்குனர் பதவி உயர்வு வழங்க வேண்டும். அதேபோல உதவி செயற்பொறியாளர்கள், ஒன்றிய உதவி செயற்பொறியாளர்கள் பதவி உயர்வும் உடனடியாக வழங்க வேண்டும்.

    ஊராட்சி செயலாளர்களுக்கு கருவூலம் மூலமாக ஊதியம், விடுபட்டுள்ள உரிமைகள், பணி விதிகள் தொடர்பான அரசாணையை முறையாக வெளியிட்டு செயல்படுத்த வேண்டும்.

    100 நாள் வேலை திட்டப் பணியில் ஈடுபடும் கணினி உதவியாளர்களை பணி வரன்முறை செய்ய வேண்டும். முழு சுகாதாரத் திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு உயர்த்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும்.

    இக்கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கத்தின் சார்பில் தொடர் போராட்டம் நடத்த உள்ளோம். முதற்கட்டமாக வரும் 13-ந் தேதி (திங்கட்கிழமை) மாலை 5.30 மணிக்கு அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.

    அடுத்தடுத்த போராட்டங்கள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கடையம் பெரும்பத்து ஊராட்சியில் நடைபெற்று வரும் அண்ணா மறுமலர்ச்சி திட்டப் பணிகள்
    • ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் அசன் இப்ராஹிம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    கடையம்:

    கடையம் பெரும்பத்து ஊராட்சியில் நடைபெற்று வரும் அண்ணா மறுமலர்ச்சி திட்டப் பணிகள் மற்றும் தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் பராமரிக்கப்பட்டு விவசாயி களுக்கு வழங்கப்படும் பழக்கன்றுகள் பராமரிப்புப் பணிகள் உள்ளிட்டவற்றை ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் அசன் இப்ராஹிம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இதில் உதவி செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், பணி மேற்பார்வையாளர் கார்த்திகேயன், ஊராட்சி தலைவர் பொன்ஷீலா பரமசிவன், ஊராட்சி செயலர் ஆணைமணி மக்கள் நல பணியாளர் மங்களம், தொழில் நுட்ப உதவியாளர் சிவனேசன் , வறுமை ஒழிப்புச் சங்க உறுப்பினர் ஞானம் ஆகியோர் உடனிருந்தனர்.

    ×