search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Road Widening"

    • நிகழ்ச்சிகளுக்கு வல்லம் ஒன்றிய தலைவர் அமுதா ரவிக்குமார் தலைமை தாங்கினார்
    • நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்ட பொறியாளர் அக்பர் அலி வரவேற்றார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் நெடுஞ்சாலைத்துறை சார்பில் வல்லம் ஒன்றியம் நாட்டார்மங்கலம்-மேல் ஒலக்கூர். தொண்டூர் செல்லும் சாலையை ரூ. 2 கோடியே 75 லட்சம் மதிப்பில் அகலப்படுத்தி விரிவாக்கம் செய்யும் பணிக்கும், நாட்டார்மங்கலம் தொண்டூர் சாலை பாலம் கட்டுதல் பணிக்கும், ரூ. 2 கோடி மதிப்பில் நாட்டார் மங்கலம் தொண்டூர் இடை யில் மேம்பாலம் கட்டும் பணிக்கும், மொடையூர் சாலை ரூ. 40 லட்சம் மதிப் பில் சீர் செய்யவும் ஜெயங் கொண்டான் பேரணி சாலையை ரூ. 2 கோடியே 10 லட்சம் மதிப்பில் விவாக்கம் செய்து புதிய தார் சாலை அமைப்பதற்கும் பூமி பூஜை விழா நாட்டா மங்கலம், புதுசொரத்தூர் ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிகளுக்கு வல்லம் ஒன்றிய தலைவர் அமுதா ரவிக்குமார் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர்கள் மாரியம்மாள் மாணிக்கம், அசோக் குமார், ஒன்றிய கவுன்சிலர்கள் பக்தவச்சலம், கோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்ட பொறி யாளர் அக்பர் அலி வரவேற்றார். நிகழ்ச்சியில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு பணிகள் செய்வதற்கு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் அண்ணா துரை, துரை, இளம்வழுதி, இளநிலை பொறியாளர்கள் ஏழுமலை சேகர் மாவட்ட கவுன்சிலர் அன்பு செழியன், ஒன்றிய கவுன்சிலர்கள் பத்மநாபன், விஜயா கண்ணன், கலைவாணி கிருஷ்ணமூர்த்தி , சிலம்பரசி பாண்டியராஜன் அமைப்பு சாராதொழிலாளர் அணி மாவட்ட அமைப்பாளர் தமிழரசன், சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் கார்வண்ணன், உள்ளிட் ேடார் கலந்து கொண்டனர்.

    • கதிர் ஆனந்த் எம்.பி. நடவடிக்கை
    • ரூ.7.76 கோடி ஒதுக்கீடு

    வேலூர்:

    வேலூர் மாநகராட்சி யின் மையப்பகுதியாக கிரீன் சர்க்கிள் உள்ளது. இப்பகுதியில் அதிகளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இதனால் அதனை சரி செய்வதற்கு பல்வேறு கட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டன.

    நெடுஞ்சாலைத்துறை ஆணையத்திடம் அனுமதி ஆய்வுக்கு பின்னர் கிரீன் சர்க்கிள் பூங்காவின் அளவை குறைப்பதுடன் அப்பகுதியில் சாலை விரிவாக்கம் செய்யவும் திட்டமிடப்பட்டது.

    ஆனால் கிரீன் சர்க்கிள் பூங்காவின் அளவை குறைக்க வேண்டும் என்றால் அதற்கு தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்திடம் அனுமதி பெற வேண்டும்.

    இதையடுத்து வேலூர் கிரீன் சர்க்கிள் பூங்காவின் அளவை குறைப்பது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்திற்கு பரிந்துரை அனுப்ப ப்பட்டது.

    மேலும் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம் கதிர் ஆனந்தும் இது தொடர்பாக மத்திய சாலைப்போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்திற்கு கோரிக்கை விடுத்தார்.

    இந்த கோரிக்கைகளை ஏற்று ரூ.7.76 கோடி செலவில் கிரீன் சர்க்கிள் பூங்காவின் அளவு மாற்றியமைப்பது, வடிகால் மற்றும் பாதுகாப்பு பலகைகள் உள்பட அப்பகுதியிலுள்ள சர்வீஸ் சாலையை விரிவாக்கம் செய்வது போன்ற பணிகளை மேற்கொள்ள தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

    மேலும், இதற்கான ஏல ஆவணங்களை அடுத்த 4 நாள்களுக்குள் தயார் செய்து அளிக்க தனியார் நிறுவனத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதுகுறித்து, டி.எம்.கதிர்ஆனந்த் எம்.பி. கூறுகையில்:- 2019-ம் ஆண்டு வேலூர் மக்களவைத் தேர்த லின்போது போக்குவரத்து நெரிசலைக் குறைக்க வேலூர் கிரீன்சர்க்கிள் பூங்காவின் அளவை குறைக்கவும், சர்வீஸ் சாலைகளை விரிவாக்கம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தி ருந்தேன்.

    அதனை நிறைவேற்றும் விதமாக தற்போது பணிகளை மேற்கொள்ள தேசிய நெடுஞ்சா லைத்துறை ஆணை யம் ஒப்புதல் அளித்துள்ளது என கூறினார்.

    • தஞ்சை விரிவாக்க பணிக்காக நாளை மின் வினியோகம் இருக்காது.
    • காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை மின் இருக்காது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கருப்பையா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சாலை விரிவாக்க பணிக்காக நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் மேரீஸ் கார்னர் முதல் காவேரி கல்யாண மண்டபம் வரை, கோரிக்குளம், இருபது கண் பாலம், மண்ணையார் தெரு, பூக்கார தெரு, மாரிகுளம், அன்பு நகர், ஜெகநாதபுரம், சிந்து நகர் வரை மின் வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • போக்குவரத்து பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில் இந்த சாலை மேம்படுத்தப்படாமல் உள்ளது.
    • குருவப்பநாயக்கனூர் கிராமம் தாண்டியதும் அமைந்துள்ள வளைவிலும் விபத்து அபாயம் உள்ளது.

    உடுமலை:

    உடுமலை குறிச்சிக்கோட்டையில் இருந்து கொமரலிங்கம் செல்லும் ரோடு நெடுஞ்சாலைத்துறையால் மாவட்ட முக்கிய ரோடுகள் பிரிவில் பராமரிக்கப்பட்டு வருகிறது.கேரளா மூணாறு, மறையூர் உட்பட பகுதிகளிலிருந்து வரும் வாகனங்கள் உடுமலை வராமல், குறிச்சிக்கோட்டை, கொமரலிங்கம், நெய்க்காரபட்டி வழியாக பழனிக்கு செல்ல இந்த வழித்தடம் பயன்படுகிறது.வழித்தடத்தில் 20க்கும் அதிகமான கிராமங்கள் அமைந்துள்ளன. போக்குவரத்து பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில் இந்த சாலை மேம்படுத்தப்படாமல் உள்ளது. பல இடங்களில் எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட்டு விலகிச்செல்ல முடியாத அளவுக்கு சாலை குறுகலாக உள்ளது.இடைவழித்தடமாக உள்ள சாலையை மேம்படுத்த வேண்டும் என அப்பகுதி கிராம மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    சாலையில் குறிச்சிக்கோட்டை தாண்டியதும் பி.ஏ.பி., கால்வாய் அருகே அபாய வளைவு உள்ளது. இங்கு நெடுஞ்சாலைத்துறை சார்பில் எவ்வித எச்சரிக்கை பலகையும் வைக்கப்படவில்லை.குருவப்பநாயக்கனூர் கிராமம் தாண்டியதும் அமைந்துள்ள வளைவிலும் விபத்து அபாயம் உள்ளது.

    இந்த வளைவுகள் மட்டுமல்லாது சாலையை ஒட்டி குடிநீர் திட்டம் மற்றும் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக தோண்டப்பட்ட குழிகள் சரியாக மூடப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், விடுமுறை நாட்களில் இந்த வழித்தடத்தில் சுற்றுலா வாகனங்கள் அதிக அளவு வருகின்றன. தொழிற்சாலைகளுக்கு மூலப்பொருள் ஏற்றி வரும், கனரக வாகனங்கள் குறுகலான இந்த சாலையில் செல்லும் போது சுற்றுலா வாகனங்கள் விலகி செல்ல முடியாமல் விபத்துகள் ஏற்படுகின்றன. இப்பிரச்சினைக்கு தீர்வாக குறிச்சிக்கோட்டையில் இருந்து கொமரலிங்கம் வரை இந்த சாலையை விரிவுபடுத்த வேண்டும். சாலையை மேம்படுத்தினால் பழனிக்கு மாற்றுப்பாதையாகவும் இந்த சாலை அமையும் வாய்ப்புள்ளது என்றனர்.

    உடுமலை அருகே மூன்று ரோடு சந்திப்பில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண ரவுண்டானா அமைத்தல் உட்பட சிறப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.

    கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து முக்கோணம் பகுதியில் ஆனைமலை ரோடு பிரிகிறது. அப்பகுதியில் ஆனைமலை, தேவனூர்புதூர் உட்பட கிராமங்களுக்கு இயக்கப்படும் பஸ்கள் இணைப்பு ரோட்டில் நிறுத்தப்படுகின்றன.அப்போது தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக செல்லும் வாகனங்களால் விபத்து ஏற்படுகிறது.மேலும் சந்திப்பு பகுதியில் இரு புறங்களிலும் பஸ்கள் நிறுத்தும் போது தேசிய நெடுஞ்சாலையை கடக்க முடியாமல் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

    இந்த சந்திப்பு அருகிலேயே மழை நீர் ஓடை மீது கட்டப்பட்ட பாலம் குறுகலாக இருப்பது சிக்கலை அதிகரிக்கிறது. இப்பிரச்னைக்கு தீர்வாக சந்திப்பு பகுதியில் தேசிய நெடுஞ்சாலையை விரிவுபடுத்தி பஸ்கள் நிற்க தனியாக இடம் ஒதுக்க வேண்டும்.இணைப்பு ரோடு பகுதியில் ரவுண்டானா அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.இதனால் சந்திப்பில் விபத்துகள் தொடர்கதையாக உள்ளது. தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் இத்திட்டம் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பது உயிரிழப்புகளை தவிர்க்கும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

    • ஆக்கிரமிப்பு கடைகள் மற்றும் தனியார் ஆக்கிரமிப்பு இடங்களை அகற்றி சாலைகளை விரிவாக்கம் செய்ய வேண்டும் .
    • ரோட்டை அடைத்து ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளதால் பஸ்கள் சாலையிலேயே நிறுத்தி பயணிகளை இறக்கி விட்டு செல்கின்றன.

    உடுமலை : 

    உடுமலை அருகே உள்ள தேவனூர்புதூர் வழியாக தினமும் உடுமலை, பொள்ளாச்சி ,ஆனைமலைக்கு பஸ்கள் வந்து செல்கின்றன. இது தவிர சுற்றுலா தலங்களான திருமூர்த்தி மலை, டாப்ஸ்லிப் , ஆழியார் உள்ளிட்ட இடங்களுக்கும் இந்த வழியாக ஏராளமான சுற்றுலா வாகனங்கள் சென்று வருகின்றன. ஆனால் தேவனூர் புதூரில் ரோட்டை அடைத்து ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளதால் பஸ்கள் சாலையிலேயே நிறுத்தி பயணிகளை இறக்கி விட்டு செல்கின்றன.

    இதனால் வாகனங்கள் சாலையில் இருபுறமும்காத்திருக்கும் நிலை உள்ளது .இதனால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. எனவே உடனடியாக ஆக்கிரமிப்பு கடைகள் மற்றும் தனியார் ஆக்கிரமிப்பு இடங்களை அகற்றி சாலைகளை விரிவாக்கம் செய்ய வேண்டும் என பொதுமக்கள், சுற்றுலா ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • செல்லியம்பாளத்திற்கு செல்லும் தார் சாலையை 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன்படுத்தி வருகிறார்கள்.
    • கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள வி. கூட்ரோட்டில் இருந்து செல்லியம்பாைளயத்திற்கு தார் சாலை ஒன்று செல்கிறது. அந்த 20 அடி சாலையை செல்லியம்பாளையம், ராயப்பனூர், பகுதி பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள வி.கூட்ரோடில் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி பூங்கா செயல்பட்டு வருகிறது. கால்நடை ஆராய்ச்சி பூங்கா நிர்வாகத்தினர் இந்த சாலை பகுதியில் பல்வேறு கட்டிடப் பணிகள் மேற்கொண்டு வருவதால் வருங்காலங்களில் இந்த சாலையில் கிராம மக்கள் செல்வதற்கு நிரந்தரமாக தடை செய்யப்படலாம் என்று கருதி மாவட்ட கலெக்டர் இடம் மனு கொடுக்கப்பட்டது.

    அந்த மனுவில் கூறி இருப்பதாவது:- வி கூட்ரோட்டில் இருந்து செல்லியம்பாளத்திற்கு செல்லும் தார் சாலையை ராயப்பனூர் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போது 20 அடி அகலத்தில் உள்ள இந்த சாலையை 30 அடி சாலையாக மாற்றி தர வேண்டும் என கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்து கோரிக்கை வைத்தனர். 

    கோரிக்கையை ஏற்று சம்பந்தப்பட்ட சாலையை மாவட்ட கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்பொழுது உடன் இருந்த வருவாய் துறை நிறுவன அதிகாரியிடம் உள்ள பதிவேடுகளை பார்த்து ஆய்வு செய்து தற்போது பயன்பாட்டில் உள்ள சாலை விபரம் குறித்த தகவல் கேட்டு அறிந்தார். பின்னர் இதன் மீது பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். ஆய்வின்போது மாவட்ட திட்ட இயக்குனர் மணி, வருவாய் கோட்டாட்சியர் பவித்ரா, சின்னசேலம் யூனியன் சேர்மேன் சத்தியமூர்த்தி, சின்னசேலம் வருவாய் வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர், செல்லியம்பாளையம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ஆய்வில் பங்கேற்றனர்.

    ×