என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » Punalur
நீங்கள் தேடியது "punalur"
- திருவனந்தபுரம் நேமம் - நெய்யாற்றின்கரை ரெயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- நாளை மாலை 5.20 மணிக்கு புனலூரில் இருந்து புறப்பட வேண்டிய ரெயில் நெல்லையில் இருந்து புறப்பட்டு மதுரை வரை இயக்கப்படும்.
நெல்லை:
திருவனந்தபுரம் கோட்டத்தில் உள்ள நேமம் - நெய்யாற்றின் கரை ரெயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு உள்ளிட்ட முக்கிய பணிகள் நடைபெற உள்ளது.
இதன் காரணமாக மதுரையில் இருந்து இன்று நள்ளிரவு 11.25 மணிக்கு புறப்பட வேண்டிய மதுரை -புனலூர் விரைவு ரெயில் (16729) நெல்லை -புனலூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதனால் நெல்லை வரை மட்டுமே இந்த ரெயில் இயக்கப்பட உள்ளது.
இதேபோல் நாளை மாலை 5.20 மணிக்கு புனலூரில் இருந்து புறப்பட வேண்டிய புனலூர் - மதுரை விரைவு ரெயில் (16730) நெல்லையில் இருந்து புறப்பட்டு மதுரை வரை இயக்கப்படும் என தென்னக ரெயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கேரளாவின் பாலக்காடு - புனலூர் இடையே இயக்கப்படும் பாலருவி எக்ஸ்பிரஸ் செங்கோட்டை வழியாக நெல்லை வரை நீட்டிக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை:
கேரளாவின் பாலக்காடு முதல் புனலூர் வரை தினமும் இயக்கப்பட்டு வந்த பாலருவி எக்ஸ்பிரஸ் செங்கோட்டை வழியாக நெல்லை வரை நீட்டிக்கப்பட உள்ளது. முழுவதும் பொதுப்பெட்டிகளை கொண்ட இந்த ரெயில் வரும் 9-ம் தேதி முதல் நெல்லை வரை தனது சேவையை நீட்டிக்க உள்ளது.
செங்கோட்டை - புனலூர் இடையே அகலரெயில் பாதை பணிகள் முடிவடைந்து சமீபத்தில் ரெயில் சேவை தொடங்கப்பட்டது. தற்போது வாரம் இருமுறை கொல்லம் - தாம்பரம் இடையே ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், பாலருவி எக்ஸ்பிரஸ் நெல்லை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது பொதுமக்களுக்கு மிகுந்த பயன் தரும் என கூறப்படுகிறது.
கொல்லம் - எடமன் வரை தற்போது இயக்கப்பட்டு வரும் பாசாஞ்சர் ரெயிலும் விரைவில் நெல்லைக்கு நீட்டிக்கப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
×

X