search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Old lady Suicide"

    • 10 பிள்ளைகள் இருந்தும் கவனிக்க ஆளில்லாததால் பரிதாபம்
    • உடலை போலீசார் அவரது மகனிடம் ஒப்படைத்தனர்

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அருகே 10 பிள்ளைகள் இருந்தும் கவனிக்க ஆளில்லாததால் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    முதியோருக்கு இன்றைய சூழலில் ஏற்படும் துன்பங்கள் சமூக பிரச்னையாக உருவெடுத்து உள்ளது. லட்சக்கணக்கான முதியோர், ஆதரவின்றி தவித்து வருகின்றனர்.

    முதியோருக்கு அடிப்படை சுதந்திரத்தை வழங்க வலியுறுத்தி ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1-ந் தேதி, உலக முதியோர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

    இன்றைய பரபரப்பான உலகில் குடும்ப உறவுகள் என்பது பழங்காலம் போல் இல்லை. பெற்ற பிள்ளை களால் கைவிடப்பட்டு, பொருளா தாரத்தாலும் பாதிக்கப்பட்டு, அனாதைகளை போல வாழும் நிலைக்கு முதி யோர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

    முதியோர்கள் இல்லாமல் வாழ நினைக்கும் இந்த காலத்தினருக்கு, கூட்டு குடும்பத்துடன் வாழும் சந்தோசமும் மன நிறைவும் கிடைப்பதில்லை.

    எந்திரத்தை போல் மாறிப்போன இன்றைய வாழ்க்கை முறையில், முதியோர்களை கவனிக்கவும் பாதுகாக்கவும் தவறி விடுகின்றனர்.

    பெற்றவர்களை பாதுகாக்க அவரவர் பிள்ளைகள் முன்வர வேண்டும். பிள்ளைகள் நல்ல வசதியோடு இருந்தும், பெற்றோர்களை தாங்களே பார்த்துக்கொள்ளாமல் முதியோர் இல்லங்களில் சேர்க்கும் கொடுமையும் நம் நாட்டில் அதிகரித்து வருகிறது.

    பெற்றவர்களை முதியோர் இல்லத்தில் சேர்ப்பது இன்றைய காலத்தில் பேஷனாக மாறிவிட்டது. கவனித்துக் கொள்ள விரும்பாத நிலையில் பெற்ற பிள்ளைகளை, பெற்றோரை முதியோர் இல்லத்தில் சேர்க்கும் நிலை தமிழ் கலாச்சாரத்தை படிப்படியாக அழித்து வருகிறது.

    பிள்ளைகள் கவனிக்காமல் நடுத்தெருவிலும், முதியோர் இல்லத்திலும் கொண்டு சேர்ப்பதால் பெரும்பாலும் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்கின்றனர்.

    பெற்ற பிள்ளைகளே கவனிக்கவில்லை என்றால், அவர்களை பாதுகாக்கும் பொறுப்பு யாரை சேரும் என்ற கேள்விகளுக்கு பதில் இல்லை. முதியோர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    கர்நாடகா மாநிலம், கே.ஜி.எப். அருகே உள்ள துருளிசி பகுதியைச் சேர்ந்த ராமப்பா மனைவி ஜெயாயம்மாள் (வயது 72). ஜெயம்மாளுக்கு 10 பிள்ளைகள் உள்ளனர். கணவன் இறந்த பிறகு பெற்ற பிள்ளைகளும் சரிவர கவனிக்கவில்லை.

    தள்ளாடும் வயதில் உழைத்து சாப்பிடவும் தெம்பு இல்லை. இதனால் ஜெயம்மாள் உறவினர் வீடுகளுக்கு அழைக்க ப்படாத விருந்தாளியாக சென்று தங்கி வந்துள்ளார்.

    உறவினர் வீடுகளிலும் சரி வர கவனிப்பில்லா ததால், அனாதைப்போல் சாலைகளில் சுற்றி திரிந்து சாப்பிட உணவு இன்றி பரிதவித்துள்ளார்.

    இவர் நாட்டறம்பள்ளி அடுத்த நந்திபெண்டா பகுதியில் உள்ள தனது குல தெய்வம் நந்தீஸ்வரன் கோவிலுக்கு அடிக்கடி சாமி கும்பிட வந்துள்ளார்.

    அதன்படி கர்நாடகாவில் இருந்து ஜெயம்மாள் கடந்த 22-ந் தேதி நந்தி கொண்ட பகுதியில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு வந்தார். பெற்ற பிள்ளைகள் கவனிக்காததை கடவுளிடம் கூறி அழுது புலம்பி உள்ளார்.

    இதனை அந்த வழியாக சென்ற மக்கள் பார்த்துள்ளனர். பெற்ற பிள்ளைகள் கைவிட்ட நிலையில், வாழ வழியும் இல்லாததால் வாழ்வில் விரக்தி அடைந்த ஜெயம்மாள் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

    பையனப்பள்ளி சுடுகாட்டுக்கு சென்று, அங்குள்ள மரத்தில் புடவையை கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் உடலை மீட்டு விசாரித்ததில் அவர் யார் என்பது தெரிய வந்தது.

    இதனை அடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்ட ஜெயம்மாள் உடலை, போலீசார் அவரது மகனிடம் ஒப்படைத்தனர். தவமிருந்து பெற்றெடுத்த 10 பிள்ளைகளும் கவனிக்காததால், வாழ்வில் விரக்தி அடைந்து தாய் சுடுகாட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    • தீயணைப்பு படை வீரர்கள் பிணத்தை மீட்டனர்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் அருகே கொடும்பம்பள்ளி சாமு கவுண்டர் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் தருமன் இவரது மனைவி இந்திரா (வயது 55). தருமன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

    மேலும் இவரது மகன் தற்போது வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார் இந்நிலையில் இந்திரா தனது மருமகளுடன் ஜோலார்பேட்டை அருகே உள்ள குடியனகுப்பம் பகுதியில் வசித்து வந்தார்.

    இந்நிலையில் இந்திரா கடந்த 28-ந்தேதி தனது சொந்த ஊருக்கு சென்று வருவதாக கூறி விட்டு வீட்டை விட்டு வெளியே சென்றார்.

    இந்நிலையில் காலை நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் உறவினர் வீட்டில் அவரை தேடி வந்தனர். குடியானகுப்பம் பகுதியில் உள்ள அண்ணாதுரை என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் நேற்று காலை இந்திரா பிணமாக கிடந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த ஜோலார்பேட்டை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அமுதா மற்றும் நாட்டறம்பள்ளி தீயணைப்புத்துறையினர் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று தீயணைப்பு படைவீரர்கள் கிணற்றில் கயிறு கட்டல் கட்டி இறக்கி பிணத்தை மீட்டனர்.

    இதுகுறித்து ஜோலார்பேட்டை போலிசார் வழக்கு பதிவு செய்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தாய் சடையம்மாள் மகனுடன் வசித்து வந்தார்.
    • கடந்த ஒரு மாதமாக சடையம்மாளுக்கு அடிக்கடி வயிற்று வலிவந்தது.

    கள்ளக்குறிச்சி:

    சின்னசேலம் அருகே வானகொட்டாய் பகுதியே சேர்ந்தவர் கோவிந்தன். இவரது தாய் சடையம்மாள் (வயது 77). இவர் மகனுடன் வசித்து வந்தார். கடந்த ஒரு மாதமாக சடையம்மாளுக்கு அடிக்கடி வயிற்று வலிவந்தது. இதனால் மனமுடைந்த சடையம்மாள் விஷம் குடித்து தற்கொலை செய்தார்.

    • மூதாட்டி நோய்கொடுமையால் மனமுடைந்த நிலையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • இதுகுறித்து சின்னமனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    தேனி:

    சின்னமனூர் அருகே கன்னிசேர்வைபட்டியை சேர்ந்தவர் சங்கர்ராஜ் மனைவி ராஜாத்தி(70). இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக தீராத வயிற்றுவலி இருந்துள்ளது.

    பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகாததால் விஷமருந்தை குடித்து மயங்கினார்.

    சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்க ப்பட்டு பின்னர் மேல்சிகி ச்சைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து சின்னமனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ×