சின்னமனூர் அருகே மூதாட்டி தற்கொலை

மூதாட்டி நோய்கொடுமையால் மனமுடைந்த நிலையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து சின்னமனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

தேனி:

சின்னமனூர் அருகே கன்னிசேர்வைபட்டியை சேர்ந்தவர் சங்கர்ராஜ் மனைவி ராஜாத்தி(70). இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக தீராத வயிற்றுவலி இருந்துள்ளது.

பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகாததால் விஷமருந்தை குடித்து மயங்கினார்.

சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்க ப்பட்டு பின்னர் மேல்சிகி ச்சைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து சின்னமனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com