search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "MM Gossip"

    நட்சத்திர நடிகர் நடித்து வரும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க பல கதாநாயகிகள் போட்டி போட்டார்களாம்.
    நட்சத்திர நடிகர் நடித்து வரும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க பல கதாநாயகிகள் போட்டி போட்டார்களாம். முன்னாள் கதாநாயகிகள், இந்நாள் கதாநாயகிகள் அனைவரும் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டார்களாம். கடைசியில் ரன் நடிகை வென்று விட்டாராம். நட்சத்திரத்துடன் ஜோடி சேர முடியவில்லையே என்ற அவருடைய நீண்ட நாள் வருத்தம் தற்போது நீங்கி இருக்கிறதாம். 

    இவருடன் போட்டி போட்ட சின்ன நம்பர் நடிகை கடுங்கோபத்தில் இருக்கிறாராம். எப்படியாவது இந்த படத்தில் நடித்து விடலாம் என்று நினைத்த இவருக்கு ஏமாற்றம் கிடைத்திருக்கிறதாம். இந்த வாய்ப்பை தட்டிப் பறித்த ரன் நடிகை மீது மிகவும் கோபத்தில் இருக்கிறாராம்.
    மலையாளத்தில் காதலான படம் மூலம் பிரபலமான நடிகை, தமிழில் ஒல்லி நடிகருடன் ஒரு படத்தில் நடித்தாராம்.
    மலையாளத்தில் காதலான படம் மூலம் பிரபலமான நடிகை, தமிழில் ஒல்லி நடிகருடன் ஒரு படத்தில் நடித்தாராம். ஆனால், எதிர்பார்த்தளவிற்கு தமிழில் வாய்ப்பு இல்லாததால், தெலுங்கு பக்கம் சென்று தற்போது மூன்று படங்களில் நடித்து வருகிறாராம்.

    தற்போது நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பில் கேரவன் கேட்டு படக்குழுவினரை தொல்லை செய்துள்ளாராம். அதிக வாடகை உள்ள கேரவன் தான் எனக்கு வேண்டும் என்றும் அதில் மற்றவர்கள் யாரும் வரக்கூடாது என்றும் நடிகை நிபந்தனை விதித்தாராம். இதனால் வேறு வழியின்றி இரண்டு கதவு கேரவனை படக்குழுவினர் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்களாம்.

    மேலும் ஆடம்பர வசதிகள் இல்லை என்று தகராறு செய்ததாகவும், அமைதியாக இருக்கும்படி சமரசப்படுத்திய தனது ஊழியரை வேலையில் இருந்து நீக்கி விட்டதாகவும் கிசுகிசு கிளம்பி உள்ளதாம். இதனால் படக்குழுவினர் அவர்மீது புகார் கூறி இருக்கிறார்களாம்.
    ×