search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kuzhambu"

    சர்க்கரை நோயாளிகள், வயிற்றில் பூச்சி இருப்பவர்கள் அடிக்கடி பாகற்காயை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று பாகற்காய் காரக்குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாகற்காய் - 300 கிராம்,
    வறுத்த வெந்தயப்பொடி - 1/2 டீஸ்பூன்,
    சின்னவெங்காயம் - 200 கிராம்,
    நல்லெண்ணெய் - 50மி.லி.,
    தக்காளி - 2,
    புளி - எலுமிச்சைப்பழ அளவு,
    உப்பு - தேவைக்கு,
    நறுக்கிய பூண்டு - 2 டீஸ்பூன்,
    மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
    மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
    தனியாத்தூள் - 1½ டீஸ்பூன்,
    சீரகம் - 1 டீஸ்பூன்,
    தேங்காய்த்துருவல் - 100 கிராம்.




    செய்முறை :

    சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    புளியை கரைத்து கொள்ளவும்.

    தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பாகற்காயின் விதைகளை நீக்கி பொடியாகவோ அல்லது வட்டமாகவோ நறுக்கிக் கொள்ளவும்.

    சீரகம், தேங்காய்த்துருவல், தக்காளியைச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

    கடாயில் நல்லெண்ணெய் விட்டு சூடானதும் பாகற்காயைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

    நன்கு வதங்கியதும் வெங்காயத்தைச் சேர்த்து வதக்கி வெந்தயப்பொடி, பூண்டு, தனியாத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள் தூளைச் சேர்த்து கிளறவும்.

    பின் அரைத்த விழுது, சிறிது தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விடவும்.

    குழம்பு திக்கான பதத்திற்கு வந்ததும், உப்பு, புளிக்கரைசலை சேர்த்து கொதிக்க விட்டு எண்ணெய் மேலே வந்ததும் இறக்கவும்.

    சூப்பரான பாகற்காய் காரக் குழம்பு ரெடி.

    சூடாக சாதத்துடன் பரிமாறவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிட உருளைக்கிழங்கு கார குழம்பு சூப்பராக இருக்கும். இன்று இந்த குழம்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    உருளைக்கிழங்கு - கால் கிலோ,
    பூண்டு - 10 பல்,
    வெங்காயம் - 1
    தக்காளி - 1,
    கீறிய பச்சை மிளகாய் - 3,
    புளி - நெல்லிக்காய் அளவு,
    கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், மஞ்சள்தூள் - தலா அரை டீஸ்பூன்,
    கடலைப்பருப்பு, குழம்பு பொடி - தலா ஒரு டீஸ்பூன்,
    கறிவேப்பிலை - சிறிதளவு,
    எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
    மிளகாய்த்தூள், உப்பு - தேவையான அளவு,



    செய்முறை:

    உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    புளியை கரைத்து கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், கடலைப்பருப்பு போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய வெங்காயம், பூண்டு, கீறிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக குழைய வெந்ததும் உருளைக்கிழங்கு, உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.

    அடுத்து அதில் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், குழம்பு பொடி சேர்த்து வதக்கி, கரைத்த புளியை ஊற்றி, உப்பு போட்டு, நன்றாகக் கொதித்ததும் இறக்கவும்.

    சூப்பரான உருளைக்கிழங்கு கார குழம்பு ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இட்லி, தோசை, சாதத்தில் ஊற்றி சாப்பிட அருமையாக இருக்கும் தேங்காய் சேர்த்த இறால் குழம்பு. இன்று இந்த குழம்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    இறால் - அரை கிலோ
    சின்ன வெங்காயம் - 50 கிராம்
    பூண்டு - மூன்று பல்
    தக்காளி - மூன்று
    எண்ணெய் - தேவையான அளவு
    சோம்பு - ஒரு டீஸ்பூன்
    பட்டை - சிறிதளவு
    கறிவேப்பிலை - மூன்று கொத்து
    மிளகாய்த்தூள் - இரண்டு டேபிள் ஸ்பூன்
    மல்லித்தூள் - ஒரு டேபிள் ஸ்பூன்
    மஞ்சள் தூள் - ஒரு டீ ஸ்பூன்
    மிளகு தூள் - 1 டீஸ்பூன்
    தேங்காய் பால் -  தேவையான அளவு
    சீரகம் - கால் டீ ஸ்பூன்



    செய்முறை :

    இறாலை சுத்தம் செய்து அரை டேபிள் ஸ்பூன் உப்பு போட்டு பிசறி பத்து நிமிடம் வைத்து பிறகு மூன்று முறை தண்ணீர் விட்டு நன்றாக கழுவி வைக்க வேண்டும்.

    வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

    தேங்காய், சீரகத்தை நைசாக அரைக்க வேண்டும்.

    சோம்பை நன்றாக தட்டி வைக்க வேண்டும்.

    அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சோம்பு, பட்டை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக குழைய வதங்கியதும் இறாலை சேர்க்க வேண்டும்.

    இறால் நன்கு வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித் தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.

    அடுத்து அதில் அரைத்த தேங்காய் விழுதை ஊற்றி மேலும் ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.

    சூப்பரான தேங்காய் சேர்த்த இறால் குழம்பு ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சப்பாத்திக்கு எப்போதும் ஒரே மாதிரியான குருமா, மசாலா செய்து சுவைத்து போர் அடித்திருக்கும். இன்று பக்கோடா குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    பெரிய வெங்காயம் - 2  
    தக்காளி - 2
    புளி - நெல்லிக்காய் அளவு
    மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
    மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
    உப்பு - தேவையான அளவு

    பக்கோடாவிற்கு...

    கடலைப் பருப்பு - 1/2 கப்
    சோம்பு - 1 டீஸ்பூன்
    வரமிளகாய் - 2
    பூண்டு - 4 பற்கள்
    பெரிய வெங்காயம் - 1
    கொத்தமல்லி - சிறிது

    அரைப்பதற்கு...

    துருவிய தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன்
    சோம்பு - 1/2 டீஸ்பூன்

    தாளிப்பதற்கு...

    எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
    பட்டை - 1/4 இன்ச்
    கிராம்பு - 2
    கறிவேப்பிலை - சிறிது
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்



    செய்முறை:

    கொத்தமல்லி, வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    புளியை சிறிது நீரில் கரைத்து கொள்ளவும்.

    மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள தேங்காய் மற்றும் சோம்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி, பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

    கடலைப்பருப்பை நீரில் 2 மணிநேரம் ஊற வைத்து மிக்ஸியில் போட்டு, அத்துடன் வரமிளகாய், சோம்பு, பூண்டு, சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும்.

    ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவை போட்டு அத்துடன் பக்கோடாவிற்கு கொடுத்துள்ள பொருட்களான, வெங்காயம், உப்பு, கொத்தமல்லி சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அரைத்து வைத்துள்ள கலவையை சிறு பக்கோடாக்களாக போட்டு பொரித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.

    அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து பச்சை வாசனைப் போக வதக்கி, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கி, 3/4 கப் தண்ணீர் ஊற்றி, அத்துடன் புளிச்சாற்றினையும் சேர்த்து 5-7 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

    இறுதியில் அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட்டை சேர்த்து குறைவான தீயில் வைத்து எண்ணெய் தனியாக பிரியும் வரை கொதிக்க விட வேண்டும்.

    பின் பொரித்து வைத்துள்ள பக்கோடாக்களை சேர்த்து கொத்தமல்லியைத் தூவி இறக்கி, 5 நிமிடம் கழித்துப் பரிமாறினால், செட்டிநாடு பக்கோடா குழம்பு ரெடி!!!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    காராமணி குழம்பை சாதம், தோசை அல்லது சப்பாத்திக்கு தொட்டு சாப்பிட்டால், நன்றாக இருக்கும். இன்று இந்த குழம்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    காராமணி - 1 கப்
    புளி - 1 எலுமிச்சை அளவு
    தக்காளி - 1
    வெங்காயம் - 1
    உப்பு - தேவையான அளவு
    சாம்பார் பொடி - 1 டேபிள் ஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
    பட்டை - 2
    சோம்பு - 1/2 டீஸ்பூன்
    வர மிளகாய் - 2
    எண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை :


    தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    புளியை சிறிதளவு தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, காராமணியை போட்டு பொன்னிறமாக வறுத்து இறக்க வேண்டும்.

    பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் வறுத்த காராமணியை போட்டு, அதில் 2 கப் தண்ணீர் விட்டு, 6 விசில் விட்டு இறக்க வேண்டும்.

    மற்றொரு வாணயிலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, வரமிளகாய், சோம்பு போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை போட்டு நன்கு வதக்க வேண்டும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் அதில் சாம்பார் பொடி, புளித் தண்ணீர், மஞ்சள் தூள் மற்றும் உப்பு போட்டு கிளறி விட வேண்டும்.

    நன்றாக கொதித்து வரும் போது வேக வைத்துள்ள காராமணியை சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி, நன்கு கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.

    இப்போது அருமையான காராமணி கறி ரெடி!!!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×