search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "katpadi railway station"

    காட்பாடி ரெயில் நிலையத்தில் பயணியிடம் செல்போன் பறித்தது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    வேலூர்:

    காட்பாடி ரெயில் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் எழில்வேந்தன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது திருப்பதியில் இருந்து வந்த ரெயிலில் இருந்து இறங்கிய வாலிபர் போலீசாரை கண்டதும் ஓடினார்.

    போலீசார் அவரை விரட்டி பிடித்து விசாரித்தனர். இதில் அவர் சித்தூர் ஆட்டோ நகரை சேர்ந்த ராஜசேகரன் (வயது 35), என்பது தெரியவந்தது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு காட்பாடி ரெயில் நிலையத்தில் ரெயிலில் ஏறிய பயணிகளிடம் செல்போன் பறித்தது தெரியவந்தது.

    மேலும் சித்தூர், திருப்பதி ஆகிய இடங்களிலும் திருட்டில் ஈடுபட்டுள்ளார். ராஜசேகரனை போலீசார் கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.

    காட்பாடி ரெயில் நிலையம் அருகே வாலிபரை கொலை செய்து தூக்கில் தொங்க விட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    வேலூர்:

    காட்பாடி ரெயில் நிலையம் அருகே உள்ள கிளித்தான் பட்டறை ரெயில்வே தண்டவாளத்தையொட்டி ஆட்கள் ஒதுங்கி நிற்கும் அளவிற்கு சிறிய தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த தடுப்பு கம்பியில் இன்று காலை வாலிபர் ஒருவர் சிறிய கயிற்றால் போடப்பட்டுள்ள தூக்கில் பிணமாக தொங்கினார். இதனைக் கண்டு திடுக்கிட்ட பொதுமக்கள் காட்பாடி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். வாலிபர் அருகே மதுபாட்டில் சிகரெட் பாக்கெட்டுகள் கிடந்தன. அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. உடலில் காயங்கள் எதுவும் இல்லை.

    உயரம் குறைந்த கம்பியில் வாலிபர் தற்கொலை செய்ய முடியுமா? என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. வாலிபரை கொலை செய்து தொங்க விட்டுள்ளனர்.

    போலீசார் உடலை கைப்பற்றி அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் வாலிபர் யார்? அவரை கொலை செய்து தொங்கவிட்ட கும்பல் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இந்த சம்பவத்தால் கிளித்தான் பட்டறை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    ×