search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Heatwaves"

    • வெப்ப அலைகள் நிகழ்வுகள் தொடர்ந்து தீவிரமடையும்.
    • நீடித்த வெப்பத்தில் இருந்து மீள முடியாது. இது மாரடைப்பு மற்றும் இறப்புகளுக்கு வழி வகுக்கிறது.

    நியூயார்க்:

    ஐரோப்பிய நாடுகள் மற்றும் வட அமெரிக்காவில் வெயில் சுட்டெரித்து வருகிறது. வெப்ப அலை காரணமாக மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். அவர்கள் கடற்கரை உள்ளிட்ட இடங்களுக்கு படையெடுத்து வருகிறார்கள்.

    வெப்ப அலையால் பலருக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

    மேலும் தெற்கு ஐரோப்பாவின் பல்வேறு பகுதிகளில் காட்டு தீ பரவி வருகிறது. இதில் கிரீஸ் நாட்டின் முக்கிய பகுதியும் அடங்கும்.

    ஸ்பெயினின் தெற்கு பகுதியில் 111.2 டிகிரி வெப்பம் பதிவானது. வெப்ப அலை காரணமாக இத்தாலியில் 16 நகரங்களுக்கு அந்நாட்டு அரசு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இந்த நிலையில் வெப்ப அலைகளை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக ஐ.நா.வின் உலக வானிலை அமைப்பின் மூத்த வெப்ப ஆலோசகர் ஜான்நேர்ன் கூறியதாவது:-

    வெப்ப அலைகள் நிகழ்வுகள் தொடர்ந்து தீவிரமடையும். மேலும் கடுமையான வெப்ப அலைகளை எதிர்கொள்ள உலக மக்கள் தயாராக வேண்டும். அதிகபட்ச பகல் வெப்ப நிலையை காட்டிலும் இரவில் குறைந்தபட்ச வெப்ப நிலை அதிகமாக இருந்தது. மீண்டும் மீண்டும் அதிக இரவு நேர வெப்ப நிலை, மனித ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானது. ஏனென்றால் நீடித்த வெப்பத்தில் இருந்து மீள முடியாது. இது மாரடைப்பு மற்றும் இறப்புகளுக்கு வழி வகுக்கிறது.

    வளர்ந்து வரும் நகர மயமாக்கல் அதிக வெப்ப உச்சநிலை, வயதான மக்கள்தொகை ஆகியவற்றுக்கு மத்தியில் சுகாதார ஆபத்து வேகமாக வளர்ந்து வருகிறது.

    வெப்ப அலைகளை தடுக்க கார்பன் எரிபொருட்களை நிறுத்த வேண்டும். அனைத்தையும் மின்மயமாக்க வேண்டும் என்றார். வடஅமெரிக்காவில் இருந்து ஐரோப்பா, ஆசியா வரை வெப்ப அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    வெப்ப அலைக்கு ஐரோப்பியாவில் கடந்த 2003-ம் ஆண்டு 70 ஆயிரம் பேரும், கடந்த ஆண்டு 62 ஆயிரம் பேரும் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    பருவநிலை மாற்றம் காரணமாக இந்தியாவில் 2012-ல் இருந்து 2016 ஆண்டு வரையிலான 5 ஆண்டுகளில் மட்டும் 4 கோடி பேர் வெப்ப தாக்குதலுக்கு ஆளாகி இருக்கிறார்கள். #Heatwaves
    புதுடெல்லி:

    சூரிய வெப்பம் நேரடியாக பூமியை தாக்காத வகையில் பூமிக்கு மேலே ஓசோன் படலம் சூழ்ந்திருக்கிறது. இதில் விழுந்துள்ள ஓட்டைகள் காரணமாக உலகம் முழுவதும் பருவ நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.

    இதனால் உலகில் வெப்ப நிலையும் அதிகரித்து வருகிறது. இதன் தாக்கம் இந்தியாவை கடுமையாக பாதிக்கும் என்று சுகாதார ஆய்வு அமைப்புகள் கூறி வருகின்றன.

    பருவ நிலை மாற்றத்தால் ஏற்படும் வெப்பத்தால் என்ன என்ன பாதிப்புகள் ஏற்படும் என்பது குறித்து உலகம் முழுவதும் 27 கல்வி ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆய்வு செய்துள்ளன. அவற்றின் அறிக்கைகள் ஐ.நா. சபையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    இதுசம்பந்தமாக சர்வதேச மருத்துவ பத்திரிகையான லான்செட் பல்வேறு சுகாதார தகவல்களை வெளியிட்டுள்ளது. அதில் 1901-ம் ஆண்டில் இருந்து 2007-ம் ஆண்டு வரை இந்தியாவில் 0.5 செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்து இருந்தது.

    ஆனால் இப்போது வெப்ப நிலையின் அதிகரிப்பின் வேகம் இன்னும் அதிகரித்துள்ளது. உலக அளவில் 2 டிகிரி செல்சியஸ் வரை 21-ம் நூற்றாண்டில் வெப்ப நிலை அதிகரிக்கும். அதே நேரத்தில் இந்தியாவில் வடக்கு பகுதி, மத்திய பகுதி மற்றும் மேற்கு பகுதியில் 2.2-ல் இருந்து 5.5 செல்சியஸ் வரை வெப்ப நிலை இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

    1990-க்கு பிறகு வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக உலக அளவில் 2000-ம் ஆண்டை ஒப்பிடும்போது 2017-ம் ஆண்டு கூடுதலாக 15 கோடியே 70 லட்சம் மக்கள் வெப்பத்தின் தாக்குதலால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

    இந்தியாவை பொறுத்தவரை 2012-ல் இருந்து 2016 ஆண்டு வரையிலான 5 ஆண்டுகளில் மட்டும் 4 கோடி பேர் வெப்ப தாக்குதலுக்கு ஆளாகி இருக்கிறார்கள்.

    வெப்ப நிலை அதிகரிப்பால் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ள நாடுகள் கடுமையாக பாதிக்கும். இந்தியாவும் அதில் அடங்கும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

    குறைவான சுகாதார அமைப்புகள் கொண்ட நாடுகளும், ஏழை நாடுகளும் இதன் தாக்கத்தை கடுமையாக சந்திக்க வேண்டியது வரும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். அதுமட்டுமல்லாமல் பொருளாதார நிலையிலும் கடும் பாதிப்பு ஏற்படும்.


    வெப்பநிலை தாக்கத்தால் மன அழுத்தம், வெப்ப ஸ்டிரோக், இதய பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு, நீர்ச்சத்து குறைபாடு போன்ற நோய்களும் தாக்கும். குறிப்பாக குழந்தைகள், வயது முதிர்ந்தவர்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

    ஏற்கனவே நோயினால் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கு வெப்ப தாக்குதலால் இன்னும் பாதிப்பு அதிகமாகும் என்றும் மருத்துவ பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    வெப்பம் அதிகரிப்பால் 2017-ல் 15 ஆயிரம் கோடி வேலை மணி நேரம் இழப்பு ஏற்பட்டுள்ளது. 2000-ம் ஆண்டில் 6200 கோடி வேலை நேரம் இழப்பு ஏற்பட்டிருந்தது. அது 2 மடங்காக இப்போது உயர்ந்துள்ளது என்றும் அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது.

    இதுசம்பந்தமாக இந்திய பொது சுகாதார பவுண்டே‌ஷன் தலைவர் ஸ்ரீநாத்ரெட்டி கூறியதாவது:-

    வெப்பம் அதிகரிப்பால் ஏற்படும் சுகாதார பாதிப்புகளை தடுப்பதற்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை அனைத்து இடங்களிலும் செய்ய வேண்டும். அகமதாபாத் மாநகராட்சியில் ஏற்கனவே வெப்பத்தை தாங்கும் கூடாரங்கள், தண்ணீர் வசதி போன்றவற்றை செய்துள்ளனர். அதேபோல எல்லா இடங்களிலும் செய்ய வேண்டும்.

    இந்தியாவை பொறுத்த வரையில் உள்நாட்டு உற்பத்தியில் 18 சதவீத பங்களிப்பை விவசாயத்துறை தருகிறது. 50 சதவீத மக்கள் இந்த தொழிலில் ஈடுபட்டு இருக்கிறார்கள். வெப்பநிலை மாற்றம் விவசாயத்தையும் கடுமையாக பாதிக்கும்.

    இத்துடன் மனித வேலை சக்தியும், பொருளாதாரமும் பாதிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Heatwaves #Climatechange
    ×