search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Government of India"

    • 70 நாடுகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட சட்ட வல்லுனர்கள் கலந்து கொள்கின்றனர்
    • பொதுமக்கள் நலனிற்காக பல தடைகற்களை உச்ச நீதிமன்றம் நீக்கியது என்றார் தலைமை நீதிபதி

    மத்திய அரசாங்கத்தின் உதவியுடனும் சர்வதேச சட்ட அமைப்பு (International Legal Foundation), ஐக்கிய நாடுகளின் வளர்ச்சி திட்டம் (UN Development Programme) மற்றும் ஐ.நா. குழந்தைகள் நிதி அமைப்பு (UNICEF) ஆகியவற்றின் ஒத்துழைப்புடனும் இணைந்து, இந்திய தேசிய சட்ட சேவை ஆணையம் (NALSA), அனைவருக்குமான சட்ட உதவி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முதல் பிராந்திய மாநாட்டை இந்திய தலைநகர் புது டெல்லியில் நவம்பர் 27 மற்றும் 28 தேதிகளில் நடந்தது.

    இந்த மாநாட்டில் உலகின் 70 நாடுகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட முக்கிய சட்ட வல்லுனர்கள் பங்கேற்றனர்.

    இதில் பங்கேற்று பேசிய இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தெரிவித்ததாவது:

    1980களின் ஆரம்பத்தில் இருந்தே இந்திய உச்ச நீதிமன்றம், நீதியை நிலைநாட்ட புரட்சிகரமான முயற்சிகளை எடுத்து அதன் மூலம் பொது நலன் சார்ந்த விஷயங்களில் நீதி பரிபாலனம் சிறப்பாக நடைபெற அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறது. பொதுமக்கள் உச்ச நீதிமன்றத்தை நாட தடையாய் இருந்த வழிமுறை சிக்கல்களையும், உச்ச நீதிமன்றம் எளிமைப்படுத்தியுள்ளது. இதன் மூலம் சமூக-பொருளாதார விஷயங்களில் அநீதி ஏற்பட்டால் அவை விரைவாக சரி செய்யப்பட்டு வருகிறது. இது போன்ற காரணங்களால் இந்திய உச்ச நீதிமன்றம் மக்கள் நீதிமன்றமாக கருதப்படுகிறது. அனைத்துவிதமான மேல்முறையீடுகளையும், சட்ட உதவி மறுக்கப்படும் சூழ்நிலை குறித்த வழக்குகளையும் மிகுந்த கவனத்துடன் கையாளுகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.


    ×